டிவிஎஸ் குழுமத்தின் ஒரு அங்கமாகவும், உலகளவில் புகழ்பெற்ற இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியாளராகவும் விளங்கும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம்ரவீந்திரன் சண்முகம் அவர்களை நிறுவனத்தின் சுயாதீன இயக்குநராக (நியமிப்பதாக அறிவித்துள்ளது. பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டு, மே 13, 2026 முதல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த நியமனம் அமலில் இருக்கும்.
ரவீந்திரன் சண்முகம் ஒரு நீண்ட அனுபவம் வாய்ந்த தொழில்நுட்பத் தொழில்முனைவோர் மற்றும் வணிகத் தலைவர் ஆவார். உலகளாவிய சந்தைகளில் நுகர்வோர் சார்ந்த வணிகங்களை விரிவுபடுத்துதல், டிஜிட்டல்மயமாதலை முன்னெடுக்கும் முன்முயற்சிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தளங்களை உருவாக்குவதில் இவருக்கு ஆழ்ந்த அனுபவம் உள்ளது. சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'மேபிள்' என்ற செயற்கை நுண்ணறிவு சார்ந்த உட்புற வடிவமைப்பு மற்றும் சீரமைப்பு நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் செயல் தலைவராக உள்ளார். இவர் மெக்கின்சி & கம்பெனி நிறுவனத்தில் மேலாண்மை ஆலோசகராகப் பணியாற்றி, நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் வியூகங்கள் குறித்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான இவர், தொழில்நுட்பம், புத்தாக்கம், செயல்படுவதற்கான தளம், அமைப்புகள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை உருவாக்கி கொடுப்பதன் மூலம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனங்கள் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் பிளாட்ஃபார்ம் பிசினஸ் மற்றும் செயல்பாட்டு உத்திரீதியான நிர்வாகத்தில் ஆழ்ந்த நிபுணத்துவம் பெற்றவர். ரவீந்திரன் சண்முகத்தின் நியமனம், நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவிற்குப் பெரிதும் பயனளிக்கக்கூடிய அனுபவத்தை அளிப்பதோடு, இந்நிறுவனத்தில் தற்போது பின்பற்றப்படும் உயரிய அளவிலான கார்ப்பரேட் நிர்வாகத் தரநிலையை மேலும் தரம் உயர்த்தும்.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் சுதர்சன் வேணு கூறுகையில், ரவீந்திரன் சண்முகம் டிஜிட்டல் மற்றும் நுகர்வோர் சார்ந்த வணிகங்கள், செயற்கை நுண்ணறிவு சார்ந்த வளர்ச்சி ஆகியவற்றில் ஆழ்ந்த நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளார். மேலும், உலகளாவிய சந்தைகளில் வணிகத்தை விரிவுபடுத்துதல், தொழில் முனைவு முன்முயற்சிகள் மற்றும் வியூகங்கள் வகுப்பதில் இவருக்கு ஆழ்ந்த அனுபவம் உள்ளது. எதிர்கால வளர்ச்சியை நோக்கி நாங்கள் பயணிக்கும் வேளையில், அவரது கருத்துக்கள் டிவிஎஸ் மோட்டார் இயக்குநர்கள் குழுவின் செயல்பாடுகளுக்கு பெரும் மதிப்பைக் கூட்டும். அவரை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் அவரது நீண்ட அனுபவத்தின் மூலமான நுண்ணறிவுகளும் வழிகாட்டுதல்களும் எங்களுக்குப் பெரிதும் பயனளிக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்," என்று கூறினார்.
ரவீந்திரன் சண்முகம் கூறுகையில், "பொறியியலில் சிறப்பான நிபுணத்துவம் வாடிக்கையாளர்களின் பெரும் நம்பிக்கை மற்றும் உலகளாவிய தொலைநோக்குப் பார்வை கொண்ட நீண்ட பாரம்பரியமிக்க நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் இணைவதை நான் பெருமையாகக் கருதுகிறேன். இன்றைய போக்குவரத்துத் துறை தொழில்நுட்பம், டிஜிட்டல் தொழில்நுட்ப சூழல்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் மறுவடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த எதிர்காலத்திற்கான மாற்றத்தில் டிவிஎஸ் மோட்டார் முக்கியப் பங்கு வகிக்கிறது. தொழில்நுட்பம் சார்ந்த மாற்றம் மற்றும் புத்தாக்கச் சிந்தனைகள் மூலம் நிறுவனத்தின் நீண்ட கால வளர்ச்சிக்கு எனது பங்களிப்பை வழங்க ஆவலுடன் உள்ளேன்." என்று கூறினார்.
