ஆதித்யா பிர்லா கேபிடல் நிறுவனத்தின் சுகாதார காப்பீட்டு பிரிவு, ஆதித்யா பிர்லா ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், இளம் இந்தியர்களின் மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் நலன் தேவைகளுக்காக வடிவமைக்கப்பட்ட “ஆக்டிவ் யுவா” என்ற ஆரோக்கிய மையப்படுத்தப்பட்ட காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, ஹெல்த் ரிட்ர்ன்ஸ் முன்முயற்சியை மேம்படுத்தும் வகையில் ஒரு விரிவான நலத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஊட்டச்சத்து, உடற்பயிற்சி மற்றும் மீட்பு போன்ற அன்றாட ஆரோக்கிய பழக்கவழக்கங்களுக்கு தனிநபர்களை பாராட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆதித்யா பிர்லா ஹெல்த் இன்சூரன்ஸ் தனது ஹெல்த் ரிடர்ன்ஸ் மாடல் மூலம், சுகாதார காப்பீட்டை ‘ஆரோக்கிய உறுதிமொழி’ என மறுபரிசீலனை செய்து வருகிறது. தினமும் 10,000 அல்லது அதற்கு மேற்பட்ட அடிகள் நடப்பது அல்லது ஒரே உடற்பயிற்சி அமர்வில் 300 கலோரிகளை எரிப்பது போன்ற ஆரோக்கியமான செயல்பாடுகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. தொடர்ந்து சுறுசுறுப்பான வாழ்க்கை முறையையும் உயர்ந்த ஹெத்தி ஹார்ட் ஸ்கோரையும் பராமரிக்கும் வாடிக்கையாளர்கள், தங்களின் ஆண்டு காப்பீட்டு கட்டணத்தின் 100% வரை திரும்பப் பெற முடியும்.
புதிய “ஆக்டிவ் யுவா” திட்டம், இந்த முன்முயற்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில், நடத்தை அடிப்படையிலான விரிவான பரிசுத் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இது மூன்று முக்கிய தளங்களை அடிப்படையாகக் கொண்டது. ஈட், மூவ் மற்றும் ஹீல். உடல் இயக்கத்தைத் தாண்டி முழுமையான ஆரோக்கிய பழக்கவழக்கங்களை ஊக்குவிக்கும். இந்த திட்டம், குறைந்தபட்ச ஆக்டிவ் டேஸ் தகுதிகளை பூர்த்தி செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பரிசுகள் வழங்குகிறது.
ஆக்டிவ் யுவா அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த ஆதித்யா பிர்லா ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மயன்க் பத்வல் கூறுகையில், “நுகர்வோரின் மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் நலன் பழக்கவழக்கங்களுடன் இணைந்து சுகாதார காப்பீடும் முன்னேற வேண்டும். இன்றைய இளம் நுகர்வோர், தங்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே தங்களின் நலனில் செயற்பாட்டுடன் முதலீடு செய்கிறார்கள். இதனால், அவர்கள் வாழும் முறைக்கு ஏற்ப காப்பீட்டை மேலும் பொருத்தமானதாக மாற்ற ஒரு தெளிவான வாய்ப்பு உருவாகியுள்ளது” என்றார்.