சொகுசு அம்சங்களுடன் ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் கோடியாக் கார் அறிமுகம்



புதிய குஷாக் அறிமுகத்தைத் தொடர்ந்து, ஸ்கோடா ஆட்டோ இந்தியா தனது இரண்டாம் தலைமுறை கோடியாக் வாகனத்தில் தொடர்ச்சியான மேம்படுத்தல்களைச் செய்து, தனது வலுவான தயாரிப்பு வேகத்தைத் தொடர்கிறது. இந்த மேம்பாடுகளின் மூலம், இந்நிறுவனம் தனது சொகுசு 4x4 முதன்மை வாகனத்தை முழுமையாகப் புதுப்பிப்பதோடு, “சொகுசு, அது இருக்க வேண்டிய விதத்தில்” என்ற தனது தத்துவத்தையும் வலுப்படுத்துகிறது.

2025 ஏப்ரலில் இந்தியாவில் ஸ்போர்ட்லைன் மற்றும் செலக்ஷன் எல்&கே டிரிம்களில் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் லவுஞ்ச் வேரியன்ட் மூலம் முழுமையாக்கப்பட்ட கோடியாக், இப்போது 2026-இல் மூன்று தனித்துவமான மாடல்களில் கூர்மையான வேறுபாடுகளுடன் களமிறங்குகிறது. ஒவ்வொன்றும் மேம்பட்ட அணுகல்தன்மை, அதிகரித்த ஸ்போர்ட்டி தன்மை மற்றும் சமரசமற்ற பிரீமியம் சொகுசு போன்ற வாடிக்கையாளரின் குறிப்பிட்ட விருப்பங்களைப் பூர்த்தி செய்கிறது. அதே சமயம், கோடியாக்கின் தனித்துவமான பலங்களான நேர்த்தி, பன்முகத்தன்மை, ஆஃப் -ரோடு திறன் மற்றும் ஈர்க்கக்கூடிய ஆன்-ரோடு இயக்கவியல் -ஆகியவற்றையும் இது தக்கவைத்துக் கொள்கிறது.

அறிமுக விழாவில் பேசிய ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் பிராண்ட் இயக்குனர் ஆஷிஷ் குப்தா கூறுகையில், “எங்களின் மிகப்பெரிய 2025 ஆண்டிற்குப் பிறகு, 2026-ஆம் ஆண்டின் சாதனை படைத்த முதல் காலாண்டிற்குப் பிறகும், எங்களின் முதன்மை மாடலான கோடியாக்கின் கவர்ச்சியை மேலும் உயர்த்துவதற்காக அதை நாங்கள் மேம்படுத்துகிறோம். 2026-ஆம் ஆண்டின் இந்த மேம்பாடுகளுடன், எங்களின் நோக்கம் எளிமையானது-அணுகல் வசதி, ஸ்போர்ட்டி தன்மை அல்லது உயர்தர நேர்த்தி என ஒவ்வொரு சொகுசு 4எக்ஸ்4 விருப்பத்திற்கும் இப்போது ஒரு கோடியாக் உள்ளது. இந்தச் சேர்க்கைகள், ஏற்கனவே கவர்ச்சிகரமான ஒரு பெயரை மேலும் வலுப்படுத்துவதோடு, அர்த்தமுள்ள, சரியான நேரத்தில் எடுக்கப்படும் தயாரிப்பு நடவடிக்கைகளின் எங்களின் கவனத்தையும் பிரதிபலிக்கின்றன. கோடியாக், இந்தியாவிலும் உலக அளவிலும் ஸ்கோடா நிறுவனத்தின் ஒரு முக்கியத் தூணாக உருவெடுத்துள்ளது, மேலும் இன்று அது 'சொகுசு, அது இருக்க வேண்டிய விதத்தில்' என்பதற்கு உண்மையாகவே அடையாளமாக விளங்குகிறது”.

மதிப்பு, இடவசதி மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றின் சிறப்பான கலவையுடன் கோடியாக் ரக வாகனங்களை எளிதில் அணுகுவதை லவுஞ்ச் வேரியன்ட் மேம்படுத்துகிறது. மேலும், இது ஒரு தரநிலையாகவே தாராளமான 786-லிட்டர் பூட் இடத்தையும் வழங்குகிறது. ஐந்து இருக்கைகள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ள கோடியாக் லவுஞ்ச், சிறந்த மதிப்பை நாடும் வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதே சமயம், கோடியாக் வாகனத்தின் அனைத்து முக்கிய சிறப்பம்சங்களான 2.0 டிஎஸ்ஐ இன்ஜின், ஏழு-வேக டிஎஸ்ஜி டிரான்ஸ்மிஷன் மற்றும் 4எக்ஸ்4 திறன் ஆகியவற்றையும் இது தக்கவைத்துக் கொள்கிறது. கேபினில் கிரே சூடியா துணி இருக்கை உறைகள் இடம்பெற்றுள்ளன. மேலும், நகரும் பனோரமிக் சன்ரூஃப், ஷிஃப்ட் பேடில்களுடன் கூடிய இரு -ஸ்போக் லெதர் மல்டிஃபங்க்ஷன் ஸ்டீயரிங் வீல், கூடுதல் ஒலி காப்பு, மூன்று -மண்டல கிளைமேட்ரானிக் தட்பவெப்ப நிலைக் கட்டுப்பாடு, மற்றும் ஸ்டீயரிங் வரிசையில் வசதியாகப் பொருத்தப்பட்ட கியர் செலக்டர் உள்ளிட்ட கோடியாக்கின் பிற பிரத்யேக வசதிகள் இதில் உள்ளன.

ஒரு தனித்துவமான ஆற்றல்மிக்க தன்மையை வழங்கும் கோடியாக் ஸ்போர்ட்லைன், ஸ்கோடா ஆட்டோவின் மோட்டார்ஸ்போர்ட் பாரம்பரியத்திலிருந்து உத்வேகம் பெறுகிறது. 2026-ஆம் ஆண்டிற்கான, மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்புகளின் (அடாஸ்) ஒரு விரிவான தொகுப்புடன் இந்த ஸ்போர்ட்லைன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் தகவமைப்பு முன்-விளக்கு அமைப்பு - அடாப்டிவ் ஃப்ரண்ட்-லைட்டிங் சிஸ்டம் உடனான எல்இடி மேட்ரிக்ஸ் முகப்பு விளக்குகள், தகவமைப்புச் சீர்வேகக் கட்டுப்பாடு - அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், எச்சரிக்கை மற்றும் பிரேக்கிங் எதிர்வினையுடன் கூடிய முன்புற உதவி, பாதை உதவி - லேன் அசிஸ்ட், பக்கவாட்டு உதவி (பார்வைப்புள்ளி கண்டறிதல் மற்றும் லேன் மாற்ற உதவி), பின்புற போக்குவரத்து எச்சரிக்கை மற்றும் வெளியேறல் எச்சரிக்கை அமைப்பு ஆகியவை அடங்கும்.

அதன் இடநிலையை மேலும் வலுப்படுத்தும் வகையில், முன்பு செலக்ஷன் எல்&கே மாடலுக்கு மட்டுமே பிரத்தியேகமாக இருந்த 360-டிகிரி ஏரியா வியூ கேமரா, இன்டெலிஜென்ட் பார்க் அசிஸ்ட் மற்றும் கிடைமட்ட ஒளிப் பட்டை கொண்ட முன்பக்க கிரில் போன்ற அம்சங்கள், இப்போது ஸ்போர்ட்லைன் டிரிம்மிலும் கிடைக்கின்றன. அதன் ஸ்போர்ட்டி தன்மைக்கு ஏற்ப, கோடியாக் ஸ்போர்ட்லைன் பளபளப்பான கருப்பு வெளிப்புற ஸ்டைலிங் கூறுகள் மற்றும் கருப்பு சூடியா இன்டீரியர்கள், ஷிஃப்ட் பேடில்களுடன் கூடிய ஸ்போர்ட் மூன்று -ஸ்போக் லெதர் மல்டிஃபங்க்ஷன் ஸ்டீயரிங் வீல், அலுமினியம் பெடல்கள் மற்றும் செயல்திறனை -மையமாகக் கொண்ட பிற விவரங்கள் ஆகியவற்றால் தனித்து நிற்கிறது.

கோடியாக் ரகத்திலும், ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் ஒட்டுமொத்த தயாரிப்புகளிலும், செலக்‌ஷன் எல் அண்ட் கே தொடர்ந்து ஆடம்பரத்தின் உச்சமாகத் திகழ்கிறது. 2026-ஆம் ஆண்டிற்காக, இதுவும் அடாஸ் தொகுப்புடன் மேம்படுத்தப்பட்டு, அதன் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களை மேலும் உயர்த்துகிறது. காக்னாக் லெதர் இருக்கை உறைகளால் கேபின் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், நியூமேட்டிக் மசாஜ், காற்றோட்டம், வெப்பமூட்டும் வசதி மற்றும் பவர் அட்ஜஸ்ட்மென்ட் அம்சங்களைக் கொண்ட முன்புற எர்கோ இருக்கைகள் உள்ளன. ஸ்டீயரிங் சக்கரத்தில் லாரின் & கிளெமென்ட்டின் தனித்துவமான சின்னம் பெருமையுடன் இடம்பெற்றுள்ளது. அதே சமயம், உட்புறமானது நேர்த்தியான கைவினைத்திறனையும் கோடியாக் காரின் வலிமையான 4எக்ஸ்4 திறனையும் தடையின்றி ஒன்றிணைத்து, எந்தவொரு நிலப்பரப்பிலும் செம்மைப்படுத்திய ஆடம்பரத்தை வழங்குகிறது.

2026 கோடியாக், நிரூபிக்கப்பட்ட 2.0 டிஎஸ்ஐ இன்ஜினுடன் தொடர்கிறது. இது 150கிலோவாட் ஆற்றலையும் 320என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இந்த ஆற்றலானது, ஏழு -வேக டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மூலம் நான்கு சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது. எம்க்யூபி37 பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்ட இந்த கோடியாக், சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் ஆலையில் அசெம்பிள் செய்யப்படுகிறது. இந்த மேம்படுத்தல், தொடு உணர்வுள்ள சுழல் கட்டுப்பாட்டான்கள் மற்றும் ஒருங்கிணைந்த திரைகளைக் கொண்ட புதுமையான பல்பணி -ஸ்மார்ட் டயல்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இவை HVAC, இருக்கை காற்றோட்டம், ஆடியோ அமைப்புகள் மற்றும் டிரைவ் முறைகளை எளிமையாகக் கட்டுப்படுத்த அனுமதிக்கின்றன.

இந்த கோடியாக் காரானது லவுஞ்ச் மாடல் ரூ.36,99,000க்கும், ஸ்போர்ட் லைன் ரூ.44,99,000 மற்றும் செலக்‌ஷன் ரூ.46,99,000க்கும் எக்ஸ் ஷோரூம் விலையில் கிடைக்கும்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form