இந்திய கலாச்சாரத்தில் திருமணங்கள் என்பது பாரம்பரிய முறைகளிலிருந்து மாறிவருவதோடு, சமத்துவத்தைக் கொண்டாடும் இருவருக்கிடையிலான ஒரு புரிதலாக உருவெடுத்து வரும் சூழலில், இந்தியாவின் முன்னணி கைக்கடிகார பிராண்டான சோனாட்டா, ‘க்ரோ டுகெதர்’ (இணைந்து வளர்வோம்) என்ற புதிய பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. நவீன இந்தியத் தம்பதிகளின் மனவோட்டத்தைப் பிரதிபலிக்கும் இந்தப் பிரச்சாரத்துடன், நேர்த்தியான புதிய திருமண கால கைக்கடிகாரத் தொகுப்பையும் சோனாட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
திருமண நாளை மட்டுமே மையப்படுத்தும் வழக்கமான விளம்பர உத்திகளிலிருந்து விலகி, திருமணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் லட்சியங்கள், தொழில்முறை வளர்ச்சி மற்றும் உணர்வுப்பூர்வமான முன்னேற்றத்திற்குத் துணையாக இருப்பதை இந்தப் பிரச்சாரம் ஆழமாக வெளிப்படுத்துகிறது. இது நவீன உறவுகள் மற்றும் திருமணப் பரிசளிப்பு குறித்த ஒரு புத்துணர்வூட்டும் சமகாலப் பார்வையாக காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்தப் பிரச்சாரத்தின் முகங்களாக நிஜ வாழ்க்கை தம்பதிகளான புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் ஜோசப் ராதிக் மற்றும் முன்னணி திருமண வடிவமைப்பாளர் தேவிகா நரேன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தங்களது துறைகளில் அசைக்க முடியாத அடையாளங்களை உருவாக்கிய அதே வேளையில், ஒரு துணையாக ஒருவருக்கொருவர் வெற்றியைக் கொண்டாடும் இவர்களின் நிஜக் கதை, இன்றைய தலைமுறைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். சோனாட்டாவின் முந்தைய வெற்றிகரமான பிரச்சாரமான ‘ட்ரீம் டிகெதரின்’ தொடர்ச்சியாக இது அமைந்துள்ளது.
2026-ஆம் ஆண்டின் நிஜ வாழ்க்கைப் பின்னணியில், தம்பதிகள் தங்கள் தனித்துவத்தை இழக்காமல் எவ்வாறு இணைந்து பயணிக்கிறார்கள் என்பதை இது விவரிக்கிறது. டிஜிட்டல் தொடராக வெளியிடப்பட்டுள்ள இவர்களின் கதையில், இரு வெற்றிகரமான நபர்கள் தங்கள் தனித்துவமான அடையாளத்தைத் தக்கவைத்துக்கொண்டே, ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்து வளர்வதை அழகாகப் படம்பிடித்துள்ளனர். இன்றைய திருமணங்கள் 'ஒன்றாக இணைவதை' விட 'ஒன்றாகக் கட்டியெழுப்புவதையே' மையமாகக் கொண்டுள்ளன என்பதை இது பிரதிபலிக்கிறது. பல அத்தியாயங்களைக் கொண்ட டிஜிட்டல் கதைசொல்லல் தொடர்கள் மூலம், இந்த விளம்பரப் பிரச்சாரம் வாழ்வில் ஒருவருக்கொருவர் தோள் கொடுக்கும் உறவு, பல தருணங்களையும் இணைந்து எதிர்கொண்டு மீண்டு வர கொடுக்கும் ஆதரவு மற்றும் பரிணாம வளர்ச்சியின் உண்மையான தருணங்களைப் படம்பிடித்துக் காட்டுகிறது.
சோனாட்டாவின் பிராண்ட் ஹெட் புலக் நரேன் கூறுகையில், "இந்தியாவின் திருமணச் சந்தை என்பது நவீன தம்பதிகளின் லட்சியங்களுக்கு ஏற்பத் தொடர்ந்து மாறிவரும் ஒரு துடிப்பான சந்தையாகும். இணைந்து வளர்வோம் என்ற எங்களது இந்தப் பிரச்சாரத்தின் மூலம், திருமணத்தைத் தொடர்ச்சியான வளர்ச்சியின் பயணமாகக் கருதும் புதிய தலைமுறையினருடன் நாங்கள் உரையாட விரும்புகிறோம். இங்கு வாழ்க்கைத் துணைகள் ஒருவருக்கொருவர் தங்களது தனிப்பட்ட மற்றும் பொதுவான கனவுகளை அடைய ஊக்கமளிக்கிறார்கள். எங்களது புதிய திருமண காலத் தொகுப்பு இந்தத் தத்துவத்தை மிக அழகாகப் பிரதிபலிக்கிறது; இவை வெறும் நேரத்தைக் காட்டும் கருவிகள் மட்டுமல்ல, வளர்ச்சி மற்றும் ஒற்றுமையின் அடிப்படையில் அமைந்த ஒரு பயணத்தின் விலைமதிப்பற்ற அடையாளங்களாகும்." என்றார்.
இந்தப் பிரச்சாரத்திற்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ள சோனாட்டாவின் புதிய திருமண காலத் தொகுப்பு, நவீன திருமணக் கொண்டாட்டங்களுக்கெனப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட வாழ்க்கை துணை இருவரும் ஜோடியாக கைக்கடிகாரங்களையும், பண்டிகைக் கால உணர்வைப் பிரதிபலிக்கும் கலைநயமிக்க வடிவமைப்புகளையும் ஒன்றிணைக்கிறது. நேர்த்தியான தங்க நிறத் தோற்றம் , மல்டி-ஃபங்ஷன் டயல்கள் மற்றும் பட்டை தீட்டப்பட்ட மெட்டாலிக் ஸ்டிராப்கள் ஆகியவற்றைத் தன்னுள் கொண்டுள்ள இந்தத் தொகுப்பு, பல்வேறு வகையான கொண்டாட்டங்களுக்கு ஏற்ற ஒரு வசீகரமான அழகியலை உருவாக்குகிறது. இவை பல்வேறு விலைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கைக்கடிகாரத் தொகுப்பு இந்தியா முழுவதும் உள்ள சோனாட்டா ஸ்டோர்கள், டைட்டன் வேர்ல்ட் விற்பனை நிலையங்கள் மற்றும் முன்னணி சில்லறை விற்பனை சேனல்கள், இணையதளத்தில் கிடைக்கிறது.
.jpg)