இன்றைய கொண்டாட்டங்கள் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாகவும், தங்களின் தனித்துவமான ரசனையை வெளிப்படுத்துவதாகவும், ஃபேஷன் உணர்வுமிக்க தருணங்களாகவும் மாறி வருகின்றன. இதற்கேற்ப, டாடா நிறுவனத்தின் தயாரிப்பான 'தநைரா' நவீன இந்தியப் பெண்களுக்காக ‘இனாயா’ என்ற புதிய புடவைத் தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. அணிவதற்கு அதிக சிரமமில்லாத நேர்த்தியையும், தோற்றம் மற்றும் ஆளுமையின் பன்முகத்தன்மையையும், கொண்டாட்டங்களுக்கு ஏற்ற நேர்த்தியை விரும்பும் நவீன இந்தியப் பெண்களுக்காக ‘இனாயா’ வடிவமைக்கப்பட்டுள்ளது. ரூ. 3,499 என்ற ஆரம்ப விலையில் கிடைக்கும் இத்தொகுப்பு, மிக நேர்த்தியான வடிவமைப்பு, நவீன வசீகரம் மற்றும் உன்னதமான தனித்துவத்தை உங்களுக்கு அளிக்கிறது.
இதன் மூலம், நம் வாழ்வில் மறக்க முடியாத சிறப்புத் தருணங்களுக்கான ஃபேஷன் உலகிற்குள் அனைவரும் எளிதாக நுழைவதற்கான வாய்ப்பை ‘இனாயா’ உருவாக்கி இருக்கிறது. தநைரா நிறுவனம் இந்த கோடை திருமண காலத்தை முன்னிட்டு தனது விழாக்கால ஆடைத் தொகுப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் ‘வேலி ஆஃப் ஃப்ளவர்ஸ்’ மற்றும் ராஸ்’ என்ற புதிய கலெக்ஷன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய தலைமுறைக்கு ஏற்ற, அணிவதற்கு செளகரியமான உணர்வைத் தரும் எடை குறைந்த மற்றும் உடலோடு ஒட்டியபடி நளினத்தைக் கொடுக்கும் துணி வகைகளால் 'இனாயா' புடவைகள் நெய்யப்பட்டுள்ளன. இது அணிவதற்கு மிக எளிமையாகவும், பார்ப்பதற்கு ஆடம்பரமாகவும் இருக்கும்படி ஒரு சிறந்த சமநிலையை உருவாக்குகிறது.
இயற்கையின் தாள லயங்கள் மற்றும் பிரபஞ்சத்தின் எல்லையற்ற இயக்கம் ஆகியவற்றினால் ஈர்க்கப்பட்டு இந்த புடவைத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் எப்படி ஒரு அழகான, தொடர்ச்சியான மாற்றத்திற்கு உட்படுகிறதோ, அதேபோல இப்புடவைகளின் வடிவமைப்புகளும் அப்ஸ்ட்ராக்ட் பூக்களின் வடிவங்கள் , மாறி மாறி பரிணமிக்கும் வடிவங்கள் மற்றும் விண்வெளி வடிவியல் தாக்கங்கள் மூலம் உயிர்பெற்றுள்ளன. அதிகாலையின் மென்மை முதல் அந்திப் பொழுதின் அடர்த்தி மற்றும் மலர்ந்து குலுங்கும் மலர்கள் வரை, இயற்கையின் மாறும் காட்சிகளால் ஈர்க்கப்பட்ட வண்ணங்கள் இந்த புடவைத்தொகுப்பிற்கு கூடுதல் நேர்த்தியையும் பொலிவையும் தருகின்றன.
புதிய ‘இனாயா’ புடவைத்தொகுப்பின் அறிமுகம் குறித்து தநைரா நிறுவனத்தின் சிஎஸ்எம்ஓ சோம்ப்ரப் குமார் சிங் கூறுகையில்: "நம் வாழ்வின் சிறப்பான தருணங்களுக்கு அணியும் ஆடைகள் எப்போதுமே எங்களது பிராண்டின் மிக முக்கிய அங்கமாகத் திகழ்கின்றன.இன்று, பெண்கள் தங்களின் கொண்டாட்ட நாட்களின் உடைகளைத் தேர்ந்தெடுப்பதில் அதிக தனித்துவத்துடனும், தங்களை வெளிப்படுத்தும் நோக்கத்துடனும் அணுகுகிறார்கள். 'நெவர் லுக் தி சேம்'என்ற சிந்தனையை மையமாகக் கொண்டு, மாறிவரும் இந்த மனநிலைக்கு ஏற்ப 'இனாயா' வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நவீன புடவைகள் பல விதங்களில் பயன்படுத்தக்கூடியதாகவும், உங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதாகவும், எளிமையான நேர்த்தியைக் கொண்டதாகவும் இருக்கும்." என்றார்.
இவை அனைத்தும் இணைந்து, உங்களை முழுமையாகக் கவரக்கூடிய மற்றும் ஆழமான உணர்வுகளைத் தூண்டக்கூடிய ஒரு சிறந்த கொண்டாட்ட ஆடை அலங்கார அலமாரியை உருவாக்குகின்றன. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகிலுள்ள தநைரா விற்பனை நிலையத்திற்குச் சென்று இந்தத் தொகுப்புகளை நேரடியாகப் பார்த்து அனுபவித்தபடி வாங்கலாம் அல்லது www.taneira.com <http://www.taneira.com/> என்ற இணையதளத்தின் வாயிலாகவும் ஆன்லைனில் வாங்கலாம்.
