டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸ் அறிமுகப்படுத்தும் “டிவிடெண்ட் லீடர்ட்ஸ் இண்டெக்ஸ் பென்ஷன்” நிதி



ஓய்வூதிய திட்டமிடல் என்பது வேலை நிறுத்திய பின்னரும் உங்கள் பணம் தொடர்ந்து வளர்ச்சியடைய உறுதி செய்வதைக் குறிக்கிறது. இந்த தேவையை முன்னிட்டு, டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் “டாடா ஏஐஏ டிவிடெண்ட் லீடர்ஸ் இண்டெக்ஸ் பென்ஷன் நிதி” என்ற புதிய ஓய்வூதிய நிதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

 இந்த நிதி, இந்தியாவின் முன்னணி டிவிடெண்ட் வழங்கும் நிறுவனங்கள் மூலம் நீண்டகால ஓய்வூதிய செல்வத்தை உருவாக்க வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சந்தை சார்ந்த முதலீடுகளின் வளர்ச்சி வாய்ப்புகளையும், வாழ்க்கை காப்பீட்டு பாதுகாப்பின் கூடுதல் நம்பிக்கையையும் ஒருங்கிணைக்கும் இந்த திட்டம், நிதி வலிமை மற்றும் தொடர்ச்சியான செயல்திறன் கொண்ட நிறுவனங்கள் மூலம் ஒழுங்குமுறை கொண்ட ஓய்வூதிய திட்டமிடலை வழங்குகிறது.

இந்த நிதி, பல்வேறு சந்தை சூழ்நிலைகளிலும் பங்குதாரர்களுக்கு தொடர்ந்து டிவிடெண்ட் வழங்கி வந்த இந்தியாவின் 50 முன்னணி நிறுவனங்களில் முதலீடு செய்கிறது. இது ஒரு பாசிவ் முதலீட்டு அணுகுமுறையை பின்பற்றி, ஐஆர்டிஏஐ விதிமுறைகளுக்கு ஏற்ப பிஎஸ்இ 500 டிவிடெண்ட் லீடர்ஸ் 50 இண்டெக்ஸ்-ஐ கண்காணிக்கிறது. மேலும், அதிக ஆபத்தான அல்லது யூக அடிப்படையிலான முதலீடுகளை விட, நிலையான செயல்திறன் மற்றும் வலுவான அடித்தளத்தைக் கொண்ட சந்தை முன்னணி நிறுவனங்களில் கவனம் செலுத்துகிறது.

இந்த நிறுவனங்கள் டிவிடெண்ட் வழங்கும் போது, அந்த வருமானத்தை தனியாக வழங்காமல், மீண்டும் அதே முதலீட்டு தொகுப்பில் மீண்டும் முதலீடு செய்யும் வகையில் இந்த நிதி செயல்படுகிறது. இதன் மூலம், காலப்போக்கில் மூலதன வளர்ச்சியுடன் மீள்முதலீடு செய்யப்பட்ட வருமானமும் இணைந்து, ஓய்வூதிய நிதி சேமிப்பை வலுப்படுத்த உதவுகிறது. இது நீண்டகால செல்வ உருவாக்கத்திற்கு பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனால், டாடா ஏஐஏ டிவிடெண்ட் லீடர்ஸ் இண்டெக்ஸ் பென்ஷன் நிதி என்பது ஒரு சாதாரண ஓய்வூதிய முதலீட்டு திட்டத்தைத் தாண்டியதாக அமைகிறது. இந்தியாவின் வலுவான மற்றும் நிலைத்த செயல்திறன் கொண்ட நிறுவனங்களின் வளர்ச்சியைப் பயன்படுத்துவதோடு, நீண்டகால கூட்டு வளர்ச்சி சக்தியையும் முழுமையாக பயன்படுத்தும் வகையில் இந்த நிதி வடிவமைக்கப்பட்டுள்ளது.

“டாடா ஏஐஏ டிவிடெண்ட் லீடர்ஸ் இண்டெக்ஸ் பென்ஷன் நிதி” திட்டம், டாடா ஏஐஏ ஸ்மார்ட் பென்ஷன் செக்யூர் மற்றும் டாடா ஏஐஏ  ப்ரீமியர் பென்ஷன் செக்யூர் திட்டங்களின் மூலம் வழங்கப்படுகிறது. இந்த இரு தீர்வுகளும், சந்தை சார்ந்த ஓய்வூதிய செல்வ உருவாக்கத்தையும் வாழ்க்கை காப்பீட்டு பாதுகாப்பையும் ஒருங்கிணைக்கின்றன.


Post a Comment

Previous Post Next Post

Contact Form