இந்தியாவின் மிகப்பெரிய வீட்டுமனைத் திட்ட மேம்பாட்டு நிறுவனமான ஜி ஸ்கொயர் குரூப் நிறுவனம், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்புச்சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. இதன்படி, ஏப்ரல் 12 முதல் ஏப்ரல் 15 வரை திருநெல்வேலியில் உள்ள ஜி ஸ்கொயர் ஆர்டிஸ்டிக் என்கிளேவ் மற்றும் ரெட்டியார்பட்டி ஹில்லில் அமைந்துள்ள ஜி ஸ்கொயர் யூனிட்டி பார்க் திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்யும் போது குறிப்பிட்ட காலத்தில் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு புக்கிங்கிற்கும் 4 கிராம் தங்க நாணயம் பெறலாம். இந்த இரண்டு ப்ராஜெக்ட்டுகளும் டிடிசிபி மற்றும் ஆர்இஆர்ஏ அங்கீகாரம் பெற்றவை. இதன்மூலம் வீட்டுமனை வாங்குவதில் வெளிப்படைத்தன்மை மற்றும் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு வாங்குவது வாடிக்கையாளர்களிடையே உறுதி செய்யப்படுகிறது.
திருநெல்வேலி, தச்சநல்லூரில், மதுரை ரோட்டிலிருந்து வெறும் 600 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஜி ஸ்கொயர் ஆர்டிஸ்டிக் என்கிளேவ், அமிர்தா வித்யாலயத்திற்கு அருகில் உள்ளது. மேலும், முன்னணிப் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வேலைவாய்ப்பு மற்றும் ஐடி ஹப்கள் புகழ்பெற்ற கோயில்கள் மற்றும் முக்கிய இடங்களுக்கிடையே மிகச்சிறந்த போக்குவரத்து வசதிகளை இது கொண்டுள்ளது.திருநெல்வேலி, ரெட்டியார்பட்டி ஹில்லில், சென்னை-கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் மிகப் பொருத்தமான இடத்தில் அமைந்துள்ள ஜி ஸ்கொயர் யூனிட்டி பார்க், தியாகராஜ நகர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி, சோகோ கார்ப்ரேஷன் மற்றும் முத்தூர் சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் ஆகியவற்றுக்கு இடையே நன்கு இணைக்கப்பட்ட போக்குவரத்து வசதியைக் கொண்டிருக்கிறது. மேலும், இந்தப் ப்ராஜெக்ட் புகழ்பெற்ற பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் மற்றும் தூத்துக்குடி விமான நிலையம் ஆகியவற்றிற்கும் மிக அருகிலேயே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தங்க நாணயச் சலுகை குறித்து ஜி ஸ்கொயர் குரூப் நிறுவனத்தின் நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான பாலா ராமஜெயம் கூறுகையில், “சொந்த வீடு வாங்கத் விரும்புபவர்களுக்கு, சொந்தமாக நிலம் வாங்குவது என்பது எப்போதுமே ஒரு முக்கியமான லட்சியமாக இருந்து வருகிறது; ஆனால் பலர் அந்த முடிவை அடிக்கடி தள்ளி வைக்கிறார்கள். இந்தத் தமிழ் புத்தாண்டு சிறப்பு சலுகையின் மூலம், சொந்தமாக ஒரு வீட்டுமனையை வாங்கி தங்களின் கனவு இல்லத்தைக் கட்டுவதற்கான அந்த முதல் படியை எடுத்து வைக்க விரும்புகிறோம். இந்த மங்களகரமான காலத்தில் நீண்டகால மதிப்புள்ள முதலீடு செய்ய வீட்டுமனை வாங்குபவர்களை ஊக்குவிப்பதற்கும், இந்தத் தருணத்தை மேலும் மறக்க முடியாததாக மாற்றுவதற்காகவே சிறப்புச்சலுகையாக தங்க நாணயத்தை வழங்குகிறோம். ஜி ஸ்கொயரை பொறுத்தவரை, உயர்தரமான பிளாட் ப்ராஜெக்ட்டுகளை சொந்த வீடு வாங்க விரும்புபவர்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடியதாகவும், நியாயமான விலையிலும் மாற்றுவதே எங்களின் முதன்மையான நோக்கமாக எப்போதுமே இருந்து வருகிறது” என்று தெரிவித்தார்.