அவாட எலக்ட்ரோ விற்பனையாளர்கள் சந்திப்பு



அவாட எலக்ட்ரோ, அவாட குழுமத்தின் சூரிய பிவி உற்பத்திப் பிரிவு, தமிழ்நாட்டில் முன்னணி இபிசி நிறுவனங்கள், கூரைமேல் பொருத்துபாவர்கள் மற்றும் பிராந்திய சேனல் பார்ட்னர்களை ஒருங்கிணைத்ததன் மூலம், இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் பரவலாக்கப்பட்ட சூரிய சக்தி துறையில் தனது சந்தையை விரிவுபடுத்துவதற்கான ஒரு தீர்க்கமான முயற்சியை இது குறிக்கிறது.

குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்களின் கூரைப் பிரிவுகளில் சூரிய ஆற்றல் பயன்பாடு அதிகரித்து வருவதால், அவாட எலக்ட்ரோ நிறுவனம், பொறுத்துபவர்கள் மற்றும் விநியோகஸ்தர் சூழலுடன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு, சேனல் கூட்டாண்மைகளை வலுப்படுத்துவது, தயாரிப்புகளின் கிடைப்புத்தன்மையை மேம்படுத்துவது மற்றும் சில்லறை விற்பனை சார்ந்த சந்தைகளுக்குத் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்வது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டிருந்தது.

இந்த கூட்டத்தில், நிறுவனம் அதன் மேம்பட்ட 720 டபிள்யுபி என்  வகை டாப்கான் சூரிய மாட்யூலை சிறப்பித்துக் காட்டியது. உயர் - வாட் உள்ளமைவு மேம்பட்ட மின் திறன் மற்றும் செலவு போட்டித்தன்மையை உறுதிப்படுத்துகிறது. தற்போது 8.50 ஜிகாவாட் சோலார் பிவி மாட்யூல் உற்பத்தித் திறன் கொண்ட அவாட எலக்ட்ரோ, நாக்பூர் மற்றும் தாத்ரி (உபி) ஆகிய இடங்களில் உள்ள தனது உற்பத்தி வசதிகளில் தயாரிப்புகளை உருவாக்குகிறது. தானியங்கு உற்பத்தி திறன்களைக் கொண்ட நாக்பூர் வசதி, சுமார் 16 விநாடிகள் என்ற சராசரி சுழற்சி நேரத்தை அடைகிறது. இது, துல்லிய உற்பத்தி, செயல்பாட்டுத் திறன் மற்றும் வளர்ந்து வரும் சில்லறை வர்த்தக தேவையைப் பூர்த்தி செய்ய அளவிடத்தக்க விநியோகத்திற்கான நிறுவனத்தின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது.

இந்நிகழ்வில் அவாட எலக்ட்ரோ லிட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முழுநேர இயக்குநர் வினீத் மிட்டல் பேசுகையில், "இந்தியாவில் சூரிய ஆற்றல் வளர்ச்சியின் வேகம், கூரை மற்றும் பகிர்ந்தளிப்பு பிரிவுகளால் அதிகளவில் முன்னெடுக்கப்படுகிறது. உயர் திறன் கொண்ட, உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் மாட்யூல்களை பொறுத்துபவர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் எளிதாக அணுகும் வகையில், வலுவான பிராந்திய சேனல் கூட்டு அணுகுமுறைகளை உருவாக்குவதே எங்கள் முதன்மையான கவனமாகும். மேம்பட்ட என்-வகை டாப் கான் தொழில்நுட்பத்துடனும், அளவிடத்தக்க உற்பத்தித் திறனுடனும், சில்லறை வர்த்தக சூரிய சூழல் அமைப்புக்கு நம்பகமான நீண்டகால கூட்டமைப்பில் இருப்பதற்கு நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்" என்றார்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form