ஸ்கோடா ஆட்டோ இந்தியா, 2026-ஆம் ஆண்டிலும் தனது வலுவான வளர்ச்சிப் பாதையைத் தொடர்கிறது. முதல் காலாண்டில் (ஜனவரி டூ மார்ச்) 20,028 யூனிட்களை விற்பனை செய்து, தனது வரலாற்றிலேயே மிக அதிகமான காலாண்டு விற்பனையைப் பதிவு செய்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் விற்பனையான 17,138 கார்களை விட 17% வளர்ச்சியாகும்.
2025-ஆம் ஆண்டின் மைல்கல் சாதனையைத் தொடர்ந்து, ஸ்கோடா ஆட்டோ இந்தியா தனது வளர்ச்சி வேகத்தைத் தக்கவைத்துக்கொண்டு, தனது முந்தைய சாதனைகளைத் தொடர்ந்து முறியடித்து, இந்திய சந்தையில் தனது வேகத்தை மேலும் முடுக்கிவிட்டுள்ளது. சமீபத்தில் 50,000 விற்பனை மைல்கல்லைக் கடந்த கைலாக் காருக்கான வலுவான மற்றும் நிலையான தேவை, புதிய குஷாக் அறிமுகம், ஸ்லாவியாவின் நிலையான பங்களிப்பு மற்றும் பிரீமியம் எஸ்யூவி பிரிவில் கோடியாக் காருக்கான தொடர்ச்சியான தேவை ஆகியவை ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் இந்தச் செயல்பாட்டிற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளன.
இந்த மைல்கல் குறித்து கருத்து தெரிவித்த ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் பிராண்ட் இயக்குனர் ஆஷிஷ் குப்தா, “2026-ஆம் ஆண்டிலும் எங்களின் வளர்ச்சிப் பயணத்தைத் தொடர்வது, கடந்த ஆண்டில் நாங்கள் உருவாக்கிய உத்வேகத்திற்கு ஒரு வலுவான சான்றாகும். எங்களின் வரலாற்றிலேயே மிகப்பெரிய காலாண்டாக இது அமைந்துள்ளது. 2025-இல் ஒரு சாதனையை எட்டிய பிறகு, இந்த வளர்ச்சிப் பாதையை நாங்கள் தக்கவைத்துக்கொள்வதோடு, எங்களுக்கென புதிய அளவுகோல்களையும் அமைத்துக்கொள்வது ஊக்கமளிக்கிறது. வலுவான மற்றும் எளிதில் அணுகக்கூடிய தயாரிப்புத் தொகுப்பு, ஆழமான சந்தை அணுகல் மற்றும் வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட முயற்சிகளில் அதிக கவனம் செலுத்துதல் ஆகியவற்றின் கலவையால் இந்த வளர்ச்சி உந்தப்படுகிறது. கைலாக் தொடர்ந்து இந்த பிராண்டை புதிய வாடிக்கையாளர்களுக்கும் பிராந்தியங்களுக்கும் கொண்டு செல்கிறது, மேலும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய குஷாக் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்துள்ளது. இதற்கிடையில், ஸ்லாவியா மற்றும் கோடியாக் ஆகியவை தத்தமது பிரிவுகளில் நிலையான தேவையைத் தொடர்ந்து உருவாக்கி வருகின்றன. நாங்கள் முன்னேறிச் செல்லும்போது, பொருத்தமான தயாரிப்புகளை அறிமுகப்படுத்துதல், எங்கள் வலையமைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் ஒட்டுமொத்த உரிமையாளர் அனுபவத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் இந்த உத்வேகத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்” என்றார்.
வாகன உரிமையாளர் அனுபவம் மற்றும் விற்பனைக்குப் பிந்தைய ஆதரவு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் வாடிக்கையாளர் நம்பிக்கையை ஸ்கோடா ஆட்டோ இந்தியா தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. ஸ்கோடா சூப்பர் கேர் அறிமுகமானது, அதன் அனைத்து மாடல்களுக்கும் நிலையான 4 ஆண்டு உத்தரவாதம், 4 ஆண்டு சாலையோர உதவி மற்றும் 4 இலவச சர்வீஸ்களை வழங்குவதன் மூலம் ஒரு புதிய அளவுகோலை அமைத்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு முழுமையான மன அமைதியையும், கணிக்கக்கூடிய பராமரிப்புச் செலவுகளையும் உறுதி செய்கிறது. சேவை செயல்முறைகள், வெளிப்படைத்தன்மை மற்றும் அணுகல் ஆகியவற்றில் செய்யப்படும் தொடர்ச்சியான மேம்பாடுகள் வாடிக்கையாளருக்கு முதலிடம் தரும் இந்த அணுகுமுறைக்கு மேலும் வலு சேர்க்கின்றன. 180-க்கும் மேற்பட்ட நகரங்களில் 330 வாடிக்கையாளர் தொடர்பு மையங்களைக் கொண்ட தனது விரிவடைந்து வரும் வலையமைப்பின் மூலம், ஸ்கோடா ஆட்டோ இந்தியா, நிலைபெற்ற மற்றும் வளர்ந்து வரும் சந்தைகள் இரண்டிலும் தடையற்ற மற்றும் நம்பகமான வாகன உரிமையாளர் பயணத்தை உறுதிசெய்து, தனது பரவலை விரிவுபடுத்தி வருகிறது.
