நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான பந்தயப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ள டிவிஎஸ் ரேசிங் நிறுவனம், தனது 'டிவிஎஸ் அபாச்சி ரேசிங் எக்ஸ்பீரியன்ஸ் (ஏஆர்இ) ஜிபி இன்டர்நேசனல் 2025-26'-ன் முதல் சர்வதேச சீசனை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு ப்ரீமியம் பந்தயத் தளமாக உருவாக்கப்பட்ட டிவிஎஸ் ஏஆர்இ ஜிபி, அப்பாச்சி பிராண்டின் "ரேசிங் டிஎன்ஏ அன்லேஷ்டு" என்ற தாரக மந்திரத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.
மேலும் இருசக்கர வாகன ரேசிங்கின் மீது ஆர்வமுள்ள டிவிஎஸ் அபாச்சி உரிமையாளர்கள், மிகவும் பாதுகாப்பான மற்றும் தொழில்முறைச் சூழலில் முறையாக திட்டமிடப்பட்ட மோட்டார் ஸ்போர்ட்ஸ் பந்தயங்களை அனுபவிப்பதை இது சாத்தியமாக்கி இருப்பது இதன் சிறப்பம்சமாகும். 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் தளம், இதுவரை 4,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைச் சென்றடைந்துள்ளது.
2025 ஜூன் முதல் 2026 மார்ச் வரை நடைபெற்ற இந்த முதல் சர்வதேச சீசன் இந்தியாவில் பல்வேறு இடங்களிலும், மெக்சிகோ, கொலம்பியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலும் டிவிஎஸ் அப்பாச்சி இருசக்கர வாகன உரிமையாளர்கள் பங்குப்பெறும் வகையில் நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட நகரங்களைச் சேர்ந்த 1100-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இந்த சீசனின் பிரம்மாண்டமான இறுதிப் போட்டி சென்னையின் புகழ்பெற்ற மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனப் பந்தய ஆர்வலர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் முன்னிலையில், 60 இறுதிப் போட்டியாளர்கள் 45 ஊடகத்துறையைச் சேர்ந்த பந்தய வீரர்களுடன் போட்டியிட்டனர்.
வாடிக்கையாளர்களுக்கான பிரிவுகளில் டிவிஎஸ் அபாச்சி ஆடிஆர் 160சிசி, ஆர்டிஆர் 180சிசி, 200சிசி மற்றும் 310cc ஆகிய டிவிஎஸ் அப்பாச்சி இருசக்கர வாகன வகைகள் இடம்பெற்றன. ஊடகப் பிரிவில் முதன்முறையாகப் பெண்களுக்கான தனிப் பிரிவு, ஆண்களுக்கான பிரிவு மற்றும் பந்தய நிபுணர்களுக்கான பிரிவுகள் எனப் பிரிக்கப்பட்டிருந்தது. இது, பாலினங்கள் மற்றும் அனுபவ நிலைகளைக் கடந்து ஏராளமானோர் பங்கேற்பதை உறுதி செய்தது. இந்த முறையான அமைப்பு, வீரர்கள் அடிப்படைப் பயிற்சியிலிருந்து தொழில்முறை பந்தயத் திறன் வரை பந்தயக் களத்தில் தங்களது செயல்திறனை, திறமையை படிப்படியாக வளர்த்துக் கொள்ள உதவியது.
இந்த முதல் சர்வதேச சீசனின் வெற்றிகரமான நிறைவு குறித்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ப்ரீமியம் பிசினஸ் பிரிவுத் தலைவர் விமல் சும்ப்ளி கூறுகையில், "டிவிஎஸ் ஏஆர்இ ஜிபி-ன் முதல் சர்வதேச சீசன் வெற்றிகரமாக முடிவடைந்தது, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட ஒரு பந்தயச் சூழலை உருவாக்கும் எங்களுடையப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் அடிமட்ட அளவிலான மோட்டார் ஸ்போர்ட்ஸை மேம்படுத்துவதில் டிவிஎஸ் ரேசிங் முன்னணியில் இருந்து வருகிறது. டிவிஎஸ்ஸ் ஓஎம்சி மற்றும் டிவிஎஸ் ஏஆர்இ ஜிபி போன்ற தளங்கள் மூலம், வீரர்கள் பாதுகாப்பான சூழலில் தொழில்முறை பயிற்சியையும், பந்தயக் கள அனுபவத்தையும் பெறுவதற்கான தெளிவான பாதையை நாங்கள் உருவாக்கி வருகிறோம், என்றார்.