இந்தியாவின் முன்னணி தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸ், மூன்று புதிய நிதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிதிகள், இந்தியாவின் வளர்ச்சி வாய்ப்புகளையும் உலகளாவிய தொழில்நுட்ப முன்னேற்றங்களையும் பயன்படுத்திக்கொள்ள முதலீட்டாளர்களுக்கு தனித்துவமான வாய்ப்பை வழங்குகின்றன. மேலும், டாடா ஏஐஏவின் யூனிட் லிங்க்ட் இன்சூரன்ஸ் பிளான்கள் மூலம் வாழ்க்கை காப்பீட்டு பாதுகாப்பின் நன்மைகளையும் பெற முடியும். இந்த நிதிகள் மற்றும் டாடா ஏஐஏவின் முதலீட்டு தீர்வுகள் குறித்து மேலும் தகவல்களை, முதலீட்டாளர்கள் டாடா ஏஐஏ டாட் காம் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
டாடா ஏஐஏ லார்ஜ் மிட் கேப் இனோவேஷன் ஃபண்ட், டாடா ஏஐஏ லார்ஜ் மிட் கேப் இனோவேஷன் பென்ஷன் ஃபண்ட், மற்றும் டாடா ஏஐஏ குளோபல் ஏஐ & டெக்னாலஜி லீடர்ஸ் ஃபண்ட் ஆகியவை இந்தியாவின் புதுமை சார்ந்த துறைகள் மற்றும் உலகளாவிய தொழில்நுட்ப முன்னேற்றங்களிலிருந்து உருவாகும் வாய்ப்புகளைப் பயன்படுத்த முதலீட்டாளர்களுக்கு உதவும் வகையில் தொலைநோக்குப் பார்வையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த நிதிகள் ஐஎப்எஸ்சி விதிமுறைகளின் படி நிர்வகிக்கப்பட்டும் கட்டுப்படுத்தப்பட்டும் வருகின்றன புதிய நிதி வழங்கல் (என்எப்ஓ) காலம், 24 மார்ச் முதல் 31 மார்ச் 2026 வரை ஆகும். 31 மார்ச் 2026 நள்ளிரவு நிலவரப்படி யூனிட்கள் வழங்கப்படும் என்ஏவி, உள்நாட்டு நிதிகளுக்கு ரூ10 மற்றும் உலகளாவிய நிதிக்கு 10 டாலர் ஆகும்.
டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸின் முதலீட்டு தலைமை அதிகாரி ஹர்ஷத் பட்டீல் கூறுகையில், “புதுமை, இந்தியாவிலும் உலகளாவிய அளவிலும் பொருளாதாரங்களை மறுவடிவமைத்து வருகிறது. டாடா ஏஐஏ லார்ஜ் மிட் கேப் இனோவேஷன் ஃபண்ட், டாடா ஏஐஏ லார்ஜ் மிட் கேப் இனோவேஷன் பென்ஷன் ஃபண்ட் மற்றும் டாடா ஏஐஏ குளோபல் ஏஐ & டெக்னாலஜி லீடர்ஸ் ஃபண்ட் ஆகியவற்றின் அறிமுகத்தின் மூலம், எங்கள் பாலிசிதாரர்களுக்கு இந்த மாற்றத்தை உருவாக்கும் துறைகளில் முதலீடு செய்யும் வாய்ப்பை வழங்குகிறோம். அதே நேரத்தில், ஆயுள் காப்பீட்டு பாதுகாப்பின் நன்மைகளையும் தொடர்ந்து பெற முடியும். இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி, முதலீட்டாளர்கள் தங்கள் நிதி எதிர்காலத்தை பாதுகாக்க இது சரியான தருணமாகும்” என்றார்.
டாடா ஏஐஏ லார்ஜ் மிட் கேப் இனோவேஷன் ஃபண்ட் ஆனது டிஜிட்டல் மாற்றத்தை வழிநடத்தும் இந்தியாவின் லார்ஜ் மற்றும் மிட்-கேப் நிறுவனங்களில் முதலீடு செய்வதில் கவனம் செலுத்துகிறது. இது நீண்டகால மூலதன உயர்வை நோக்கமாகக் கொண்டுள்ளது.புதுமை சார்ந்த வளர்ச்சியால் இயக்கப்படும் இந்தியாவின் அடுத்த கட்ட பொருளாதார முன்னேற்றத்தைப் பயன்படுத்த விரும்பும் முதலீட்டாளர்களுக்கு, இந்த நிதி ஒரு சிறந்த தேர்வாகும்.
டாடா ஏஐஏ லார்ஜ் மிட் கேப் இனோவேஷன் பென்ஷன் ஃபண்ட் ஆனது, நீண்டகால ஓய்வூதிய திட்டமிடலை ஆதரிக்கிறது. மேலும் பாலிசிதாரர்கள் தங்கள் குடும்பத்தின் நிதி எதிர்காலத்தை பாதுகாத்துக்கொண்டு, ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் ஓய்வூதிய நிதியை உருவாக்க முடியும். இந்தியாவின் புதுமை சார்ந்த வளர்ச்சி பயணத்தில் பங்கேற்கும் அதே வேளையில் வலுவான ஓய்வூதிய நிதியை உருவாக்க விரும்பும் நபர்களுக்கு இந்த நிதி சிறந்த தேர்வாகும்.
டாடா ஏஐஏ குளோபல் ஏஐ & டெக்னாலஜி லீடர்ஸ் ஃபண்ட் ஆனது, செயற்கை நுண்ணறிவு மற்றும் அரைமின்கடத்தி துறைகளில் நிகழும் புதுமைகளை மையமாகக் கொண்டுள்ளது. இந்த நிதி, இந்த துறைகளில் முன்னணியில் உள்ள உலகளாவிய நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு குறியீட்டை பின்பற்றுகிறது. இதன் மூலம், செயற்கை நுண்ணறிவு, அரைமின்கடத்திகள், கிளவுட் உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் தளங்கள் ஆகியவற்றில் முன்னேற்றங்களை முன்னெடுத்து வரும் நிறுவனங்களில் பல்துறை முதலீட்டு வாய்ப்பை வழங்குகிறது.
