டிவிஎஸ் மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தும் டிவிஎஸ் கிங் வாதா 3.0



டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ‘டிவிஎஸ் கிங் கா வாதா 3.0’ திட்டத்தை  அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. டிவிஎஸ் கிங் மூன்று சக்கர வாகன வாடிக்கையாளர்களுக்காகவே பிரத்தியேகமாக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய பதிப்புகளின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது வாடிக்கையாளர்களுக்கான சலுகைகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில் இத்திட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது. ‘வாதா 3.0’ (வாக்குறுதி 3.0) மூலம், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் வெறும் வாகன உரிமையோடு நின்றுவிடாமல், வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கும் முன்னுரிமை அளிப்பதன் மூலம் கூடுதல் ஆதரவை வழங்குகிறது.

‘டிவிஎஸ் கிங் கா வாதா 3.0’, வாடிக்கையாளர்களுக்கு மன அமைதி, குறைந்த செயலிழப்பு நேரம் மற்றும் மேம்படுத்தப்பட்ட நிதிப் பாதுகாப்பை வாகன உரிமையாளர் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வழங்கும் வகையில் ஒரு விரிவான தொகுப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம், இலவச பராமரிப்புச் சேவைகள் மற்றும் அவசர கால சாலை உதவிகளுடன், இத்திட்டம் வாகன உரிமையாளர்களுக்கு தனிநபர் மற்றும் அவர்களது குடும்பப் பாதுகாப்பு நன்மைகளையும் அறிமுகப்படுத்துகிறது. இது வெறும் போக்குவரத்துத் தேவையைத் தாண்டி, வாடிக்கையாளர்களுக்குத் துணையாக நிற்கும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.

 உயிரிழப்பு அல்லது நிரந்தர ஊனம் ஏற்படும் பட்சத்தில் ஒரு குழந்தைக்கு ரூ.1 லட்சம் வீதம் அதிகபட்சம் இரண்டு குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, ரூ.10 லட்சம் வரையிலான தனிநபர் விபத்துக் காப்பீடு வழங்கப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் காலத்திற்கான வருமானப் பாதுகாப்பை உறுதி செய்ய  ஒரு நாளைக்கு ரூ.4,000 வீதம் அதிகபட்சம் 30 நாட்களுக்கு வழங்கப்படும். ஐசிஇ மற்றும் ஈவி மாடல்களுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தை வழங்குகிறது. இத்திட்டத்தின் மூலம் மூன்று இலவச பராமரிப்புச் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பயணங்களின் போது ஏற்படும் எதிர்பாராத இடையூறுகளிலிருந்து பாதுகாக்கும் அவசர கால சாலை உதவியும் கிடைக்கும்.

இந்தத் திட்டம் டிவிஎஸ் கிங்-ன் அனைத்து மாடல்களுக்கும், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து என இரண்டு பிரிவுகளுக்கும் பொருந்தும். டிவிஎஸ் கிங் டீலக்ஸ் மற்றும் டிவிஎஸ் கிங் ட்யூராமேக்ஸ் ப்ளஸ் போன்ற எரிபொருளினால் இயங்கும் பயணிகள் மாடல்களுக்கு இரண்டு ஆண்டு கால உத்தரவாதம், மூன்று இலவச சேவைகள் மற்றும் ஒரு வருட சாலை உதவி ஆகியவை வழங்கப்படுகின்றன. மின்சாரத்தால் இயங்கும் டிவிஎஸ் கிங் ஈவி மேக்ஸ் வாடிக்கையாளர்களுக்குத் துறையிலேயே மிகச் சிறந்த ஆறு ஆண்டுகால உத்தரவாதம், மூன்று இலவச சேவைகள் மற்றும் மூன்று ஆண்டுகால சாலை உதவி சலுகைகள் வழங்கப்படுகின்றன. டிவிஎஸ் கிங் கார்கோ எச்டி மற்றும் டிவிஎஸ் கிங் கார்கோ எச்டி ஈவி போன்ற சரக்கு வாகன மாடல்களுக்கு ஆறு ஆண்டுகள் வரையிலான உத்தரவாதம், மூன்று இலவச சேவைகள், மூன்று ஆண்டுகள் சாலை உதவி மற்றும் அதே தனிநபர்/குடும்பப் பாதுகாப்பு நன்மைகளும் வழங்கப்படுகின்றன.

Post a Comment

Previous Post Next Post

Contact Form