மேக்ஸ் ஃபேஷன் 20 ஆண்டுகள் நிறைவு: லக்மே ஃபேஷன் வீக்கில் பிரம்மாண்ட கொண்டாட்டம்



இந்தியாவில் 20 ஆண்டுகளை நிறைவு செய்த மேக்ஸ் ஃபேஷன், லேக்மே ஃபேஷன் வீக் மேடையில் தனது ஆண்டுவிழாவை பிரம்மாண்டமாகக் கொண்டாடியது. ஃபேஷன், தனித்துவம் மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றை மையமாகக் கொண்ட இந்த நிகழ்ச்சி, பாரம்பரிய ஃபேஷன் ஷோவைக் கடந்து, இளம் இந்தியாவின் உடை அணிவகுப்பு கலாச்சாரத்தை உயிர்ப்புடன் வெளிப்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில்  கல்கி கோய்ச்லின், சித்தாந்த் சதுர்வேதி மற்றும் அலயா எஃப் ஆகியோர் ரன்வேயில் பங்கேற்று, தங்களது தனித்துவமான பாணியால் நிகழ்ச்சியை சிறப்பித்தனர். சித்தாந்த் சதுர்வேதி தனது உற்சாகமான மற்றும் கம்பீரமான நடை மூலம் நிகழ்ச்சிக்கு வலுவான தொடக்கத்தை அளித்தார்.

அதனைத் தொடர்ந்து அலயா எஃப், தன்னம்பிக்கை மற்றும் இளமையான ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் அர்பன் ஷோகேஸில் கலந்துகொண்டு, இன்றைய தலைமுறையின் ஸ்டைல் உணர்வை பிரதிபலித்தார். பின்னர், கல்கி கோய்ச்லின் ஷோஸ்டாப்பராக மேடையை ஆக்கிரமித்து, அமைதியான ஆனால் சக்திவாய்ந்த தனது பாணியால் நிகழ்ச்சிக்கு நேர்த்தியான உச்சத்தை ஏற்படுத்தினார்.

“அன் சீரியஸ் எவரித்திங்” என்ற கருப்பொருளில் வடிவமைக்கப்பட்ட இந்தக் கலெக்ஷன், அர்பன், ஸ்போர்ட்ஸ் கோர் மற்றும் கோர் கேஷுவல் என மூன்று முக்கிய பிரிவுகளாக வெளிப்பட்டது. பெண்களுக்கான லைட் சம்மர் பிரிண்ட்கள், அத்லெஷர் பாணி மற்றும் ஆண்களுக்கான எளிமையான, வசதியான கோடைகால ஆடைகள் ஆகியவை இதில் இடம்பெற்றன. மேலும், லேக்மே ஃபேஷன் வீக் முழுவதும் மேக்ஸ் பிராண்ட் அனுபவ மண்டலம் ஏற்பாடு செய்யப்பட்டு, பத்திரிகையாளர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் ஃபேஷன் துறையினருக்கு ஆடைத் தொகுப்புகளை நெருக்கமாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த immersive space, பிராண்டின் நோக்கத்தையும் பாணி அணுகுமுறையையும் நேரடியாக உணரச் செய்தது.

இதுபற்றி கருத்து தெரிவித்த மேக்ஸ்  நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுமித் சந்தனா “இந்திய ஃபேஷன் கலாச்சாரத்துடன் இணைந்து வளர்ந்துள்ள மேக்ஸ் ஃபேஷனுக்கு, இந்த 20 ஆண்டு மைல்கல்லை லேக்மே ஃபேஷன் வீக் மேடையில் கொண்டாடுவது மிகச் சிறப்பு. கடந்த 20 ஆண்டுகளைப் போலவே, அடுத்த கட்ட வளர்ச்சியும் மேலும் சுவாரஸ்யமாக இருக்கும். என்று கூறியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form