ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் புதிய 'பார்த்தாலே பிடிக்கும்' குஷாக் அறிமுகம்:



ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய குஷாக் காரின் விலையையும் வாடிக்கையாளர் டெலிவரி தொடக்கத்தையும் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய குஷாக் மதிப்பு, பாதுகாப்பு மற்றும் ஓட்டுதல் திறன் ஆகியவற்றில் புதிய இலக்குகளை நிர்ணயிப்பதோடு, ஐரோப்பிய தொழில்நுட்பத்தை அனைத்து வேரியன்ட்களிலும் எளிதாகக் கிடைக்கச் செய்யும் பிராண்டின் வியூகத்தை முன்னெடுத்துச் செல்கிறது. புதிய 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன், ரியர் சீட் மசாஜர் போன்ற இந்த செக்மெண்டில் முதன்மையான தொழில்நுட்பங்கள் மற்றும் பல புதிய தரமான அம்சங்களுடன், புதிய குஷாக் 1.0 டிஎஸ்ஐ மற்றும் குஷாக் 1.5 டிஎஸ்ஐஆகிய இரண்டும் ஐரோப்பிய பொறியியல் மற்றும் 5-ஸ்டார் பாதுகாப்பை இந்திய சாலைகளில் எளிதில் கிடைக்கச் செய்யும் ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் திட்டத்தைப் பின்பற்றுகின்றன. 

புதிய குஷாக் காரானது க்ளாசிக் ப்ளஸ், சிக்னேச்சர், ஸ்போர்ட்லைன், பிரெஸ்டீஜ் மற்றும் மாண்டே கர்லோ  ஆகிய ஐந்து மாடல்களில் கிடைக்கிறது. இவை மேனுவல் மற்றும் ரியல் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் இணைக்கப்பட்ட டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின்களை வழங்குகின்றன. வாடிக்கையாளர்கள் கேண்டி ஒயிட், கார்பன் ஸ்டீல், பிரில்லியண்ட் சில்வர், லாவா புளூ, டீப் பிளாக், ஷிம்லா கிரீன், ஸ்டீல் கிரே மற்றும் செர்ரி ரெட் ஆகிய எட்டு நிறங்களில் ஒன்றைத் தேர்வு செய்யலாம்.

ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் பிராண்ட் டைரக்டர் ஆஷிஷ் குப்தா கூறுகையில், ஸ்கோடா ஆட்டோ இந்தியாவில் எங்களது கவனம் ஐரோப்பிய தொழில்நுட்பத்தை பரவலாக்குவதும், அதை அதிகப்படியான வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கச் செய்வதும்தான். புதிய குஷாக் மூலம் அனைத்து ரகங்களிலும் மதிப்பை நாங்கள் உண்மையாகவே மறுவரையறை செய்கிறோம். புதிய குஷாக் அதன் அனைத்து வேரியன்ட்களிலும் போட்டித்தன்மை வாய்ந்த விலை, மேம்படுத்தப்பட்ட தரமான பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் அனைத்து அம்சங்களிலும் சிறந்த செயல்திறன் மூலம் முன்னிலை வகிக்கிறது. எய்ட்-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், ரியர் சீட் மசாஜர் போன்ற இந்த செக்மென்டில் முதன்மையான வசதிகள் மற்றும் அவசியமான அம்சங்களை தரநிலையாக்கியது ஆகியவை ஆரம்பநிலை வேரியண்டிலிருந்தே மிகச்சிறந்த மதிப்பை வழங்குகின்றன. ஒவ்வொரு ஸ்கோடா காரையும் போலவே, புதிய குஷாக் காரிலும் இந்த செக்மென்டிலேயே சிறந்த பாதுகாப்பு, ஈடுஇணையற்ற ஓட்டுதல் திறன் மற்றும் உரிமையாளருக்கான பெருமை ஆகியவை அடிப்படையாகவே வருகின்றன” என்றார்.

புதிய குஷாக், நிரூபிக்கப்பட்ட மற்றும் பிரத்யேகமான டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் வரிசையுடன் தொடர்கிறது. குஷாக் 1.0 டிஎஸ்ஐ, சிறந்த மதிப்பு, செயல்திறன் மற்றும் தொழில்நுட்பத்தை 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் இந்த ரகத்தில் முதன்மையான 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் ஆகியவற்றுடன் வழங்குகிறது. இது இந்த புதிய ஸ்கோடாவின் ஓட்டுதல் அனுபவத்தை முழுமையாக மறுவரையறை செய்கிறது. இந்த எஸ்யுவி, தனது டர்போசார்ஜ்டு இன்ஜின் மூலம் 85 கேடபிள்யு சக்தியையும் 178 என்எம் டார்க்கையும் உருவாக்குகிறது. 1.0 டிஎஸ்ஐ மேனுவல் லிட்டருக்கு 19.66 கி.மீ மைலேஜையும், 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ரகம் 19.09 மைலேஜையும் வழங்குகின்றன.

அதிக செயல்திறனை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக, 1.5 டிஎஸ்ஐ,110 கேடபிள்யு சக்தி மற்றும் 250 என்எம் டார்க்கை வழங்குகிறது. இது பிரத்யேகமாக 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. புதிய குஷாக் 1.5 டிஎஸ்ஐ காரில் நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வருகின்றன. இதில் மாண்டே கர்லோ பிரகாசமான சிவப்பு நிற பிரேக் கேலிப்பர்களைக் கொண்டுள்ளது. 1.5 டிஎஸ்ஐ டிஎஸ்ஜி லிட்டருக்கு 18.72 கி.மீ., மைலேஜை வழங்குகிறது. குரூஸிங் மோடில் இருக்கும்போது இரண்டு சிலிண்டர்களை அணைக்கும் 'ஆக்டிவ் சிலிண்டர் டெக்னாலஜி' வசதியுடன், 1.5  டிஎஸ்ஐ ஒரு சிறந்த தொழில்நுட்பப் படைப்பாக விளங்குகிறது. இது புதிய குஷாக் 1.5 டிஎஸ்ஐ, அதன் செயல்திறனை விட்டுக்கொடுக்காமல், ஆர்வலர்களைத் திருப்திப்படுத்தும் வேகம் மற்றும் சக்தியைத் தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்கிறது.

புதிய குஷாக், தடையற்ற உரிமையாளர் அனுபவத்தை வழங்கும் ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் கொள்கையைத் தொடர்ந்து பின்பற்றுகிறது. இது இப்போது ஸ்கோடா சூப்பர் கேர் உடன் வருகிறது: நீண்ட கால நிம்மதிக்காக 4 ஆண்டுகள் அல்லது 1,00,000 கிலோமீட்டர் வாரன்டி மற்றும் 4 ஆண்டுகளுக்கான ரோட்சைடு அசிஸ்டன்ஸ் ஆகியவை இதில் அடங்கும். கூடுதலாக, வாடிக்கையாளர்கள் இரண்டு ஆண்டுகள் அல்லது 30,000 கிலோமீட்டர் வரை நான்கு இலவச லெபர் ஃப்ரீ சர்வீஸ் பலன்களைப் பெறலாம். இந்த வாரன்டியை கட்டண அடிப்படையில் எட்டாவது ஆண்டு வரை நீட்டிக்க முடியும். இத்துடன் ஆறு ஆண்டுகளுக்கான கொரோஷன் வாரன்டி மற்றும் மூன்று ஆண்டுகளுக்கான பெயிண்ட் வாரன்டியும் வழங்கப்படுகிறது.

புதிய குஷாக் கிளாசிக்+ டிரிம் 1.0 டிஎஸ்ஐ மேனுவல் மாடலுக்கு ரூ.10,69,000 மற்றும் 1.0 டிஎஸ்ஐ ஆட்டோமேடிக் மாடலுக்கு ரூ.12,69,000 என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் தொடங்குகிறது. சிக்னேச்சர் வேரியண்ட்டின் விலை ரூ.14,59,000 (மேனுவல்) மற்றும் ரூ.15,59,000 (ஆட்டோமேடிக்) ஆகும். ஸ்போர்ட்லைன் வேரியண்ட்டின் விலை ரூ.14,74,000 (மேனுவல்) மற்றும் ரூ.15,74,000 (ஆட்டோமேடிக்) ஆகும். உயர் ரக பிரெஸ்டீஜ் வேரியண்ட் ரூ.16,79,000 (மேனுவல்), ரூ.17,59,000 (ஆட்டோமேடிக்) மற்றும் 1.5 டிஎஸ்ஐ டிஎஸ்ஜி மாடல் ரூ.18,79,000 என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் கிடைக்கிறது. அதே சமயம், மான்டே கார்லோ பதிப்பானது 1.0 டிஎஸ்ஐ ஆட்டோமேடிக் மாடல் ரூ.17,89,000 மற்றும் 1.5 டிஎஸ்ஐ டிஎஸ்ஜி மாடல் ரூ.18,99,000 என்ற விலையில் கிடைக்கும்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form