இந்தியாவின் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் 25ஆம் நிதியாண்டில் 6.30 லட்சம் கோடி காப்பீட்டுப் பலன்களை செலுத்தியுள்ளதாக இன்ஷூரன்ஸ் அவேர்னஸ் கமிட்டி அறிவிப்பு



இந்தியாவின் ஆயுள் காப்பீட்டுத் துறை குடும்பங்களைப் பாதுகாப்பதிலும், நீண்டகால நிதித் திட்டமிடலுக்கு உதவுவதிலும் தொடர்ந்து முக்கிய பங்கு வகித்து வருகிறது. ஐஆர்டிஏஐ-இன் சமீபத்திய 2024 - 25 ஆண்டு அறிக்கையின் படி, ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் நிதியாண்டு 25ல் மொத்த காப்பீட்டுப் பலன்களாக ரூ.6.30 லட்சம் கோடியை செலுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது. நமது ஆயுள் காப்பீட்டுத் துறையானது இந்திய குடும்பங்களுக்கான பாதுகாப்பில் துவங்கி ஓய்வூதியம், வளத்தை உருவாக்குவது என  அவர்களது வாழ்வின் பல்வேறு நிலைகளில் தேவையான ஆதரவினை வழங்கி வருவதற்கு இது சான்றாக உள்ளது.

இந்தியாவின் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் எந்தளவிற்கு முனைப்புடன் செயல்படுகின்றன என்பதை - அவற்றின் தொடர் சேவைகள், காப்பீட்டு பலன்களை வழங்குவது, மற்றும் கடன் தீர்க்கும் வரம்புகள் சார்ந்த புள்ளிவிவரங்கள் தெளிவாக காட்டுகின்றன. அதாவது குடும்பங்களுக்கான நிலையான ஒரு பணப்புழக்கம் மற்றும் நீண்டகால நிதிசார் ஸ்திரத்தன்மை என இரண்டையும் வழங்கும் ஒரு நிதிப் பெட்டகமாக ஆயுள் காப்பீட்டின் பங்கை இந்த புள்ளிவிவரங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. காப்பீட்டு பலங்களில் 92 சதவிதம்  தொகை வாழ்க்கைக்கான  பலன்களாக வழங்கப்பட்டுள்ளது; எனவே ஒரு காப்பீட்டுப் பாதுகாப்பு வழங்குநராக மட்டுமல்லாமல், குடும்பங்களுக்கு தேவையான நிதி வருவாய் தொடர்வதை உறுதி செய்யும் ஒரு நீண்டகால நிதி கூட்டாளராகவும் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள். தொழில்துறையில் முக்கியப் பங்காற்றி வருகின்றன. எங்கள் பிரச்சாரங்கள் மூலம் - குடும்பங்களின் நிதிகளைப் பாதுகாக்கவும், ஆயுள் காப்பீட்டின் சக்தியைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முனைப்புடன் செயல்படும் அதே நேரத்தில், அவர்களுக்கான ஒரு நம்பகமான நிதி சேமிப்பை உருவாக்கவும் உதவி வருகிறோம்,” என்று இன்ஷூரன்ஸ் அவேர்னஸ் கமிட்டியின்  சேர்பெர்சன் கமலேஷ் ராவ்  கூறினார்.

பயனாளர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த காப்பீட்டுப் பலன்களில், ரூ.2.33 லட்சம் கோடி திரும்பப் பெறுதல் மற்றும் காப்பீட்டை ஒப்படைத்தல் ஆகியவற்றின் காரணமாக வழங்கப்பட்டது; இது கடந்த ஆண்டை விட 1.77 சதவிதம் அதிகமாகும். தொடர்ச்சி விகிதங்கள் வலுவாக இருப்பதால், இது திட்டமிடப்பட்ட காப்பீட்டு வாழ்க்கைச் சுழற்சியில் நிகழும் இயல்பான வெளியேறுதலைக்  குறிக்கிறது. பாலிசிதாரர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வித் தேடல்கள், சொந்த வீடு வாங்குதல், வெளிநாடுகளுக்கு விடுமுறையில் சுற்றுலா செல்லுதல் போன்ற அவர்களது வாழ்வின் இலக்குகளை அடைவதற்கும் இந்த நிதியை பெற முனைகிறார்கள். ஆயுள் காப்பீடு என்பது எப்போதுமே அதன் நிதி பாதுகாப்பிற்காக மிகுந்த மரியாதையை  பெற்றிருக்கும்; அதேவேளையில் பாலிசிகளின் பயனாளர்கள் தற்போது பாலிசி வருமானத்தை இதர மதிப்புமிக்க நோக்கங்களுக்காகவும் பயன்படுத்துகிறார்கள். குழந்தைகளின் எதிர்காலத் திட்டங்கள், ஆண்டு வருவாய் பாலிசிகள், சந்தையுடன் இணைக்கப்பட்ட காப்பீட்டு நன்மைகள் போன்றவற்றை உள்ளடக்கிய ஆயுள் காப்பீட்டு தயாரிப்பு போர்ட்ஃபோலியோ இப்போது மிகுதியாக உருவாகி வருகின்றன; எனவே, நுகர்வோர் தங்கள் வாழ்க்கை இலக்குகளுக்கு தேவையான நிதியை சேகரிக்க இந்த புதிய பாலிசிகளிலிருந்து வரும் பாலிசி வருமானத்தை மீண்டும் முதலீடு செய்யும் சூழலும் உருவாகியுள்ளது.

நிகர பிரீமியம் வருமானத்தில் 71.92 சதவிதம் காப்பீட்டுப் பலன்களாக வழங்கப்பட்ட போதிலும், சால்வென்சி விகிதங்கள் ஒழுங்குமுறை அமைப்பு கூறும் வரம்புகளுக்கு மேலே உள்ளன. 2024-25 ஐஆர்டிஏஐ-யின் வருடாந்திர அறிக்கையின்படி, அனைத்து ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும் 31.03.2025 நிலவரப்படி குறைந்தபட்ச நிர்ணயிக்கப்பட்ட சால்வென்சி விகிதமான 1.50-க்கு இணக்கமாக உள்ளதை தெளிவாகக் காட்டுகிறது. காப்பீட்டு நிறுவனங்கள் சொத்து-கடன் இரண்டுக்குமான வலுவான பொருந்தும் கட்டமைப்புகளையும், பாரம்பரிய திவால் அனுமானங்கள் மற்றும் ஐஆர்டிஏஐ அமைப்பால் கட்டாயமாக்கப்பட்ட வலுவான காப்பீடு வழங்கும் வரையறைகள் ஆகியவற்றின் மூலம் இதை சிறப்பாக நிர்வகித்துள்ளனர். கிட்டத்தட்ட 100 சதவிதம் காப்பீட்டு கிளைம் செட்டில்மெண்ட் விகிதங்களை கடைபிடிக்கின்றன; இது காப்பீட்டுத் தொழில்துறையின் நம்பகத்தன்மை மற்றும் நிலையான காப்பீட்டு பலன்களை வழங்கும் திறனையும் உறுதி செய்கின்றன.  


Post a Comment

Previous Post Next Post

Contact Form