இந்தியாவின் முன்னணி எஸ்யுவி உற்பத்தியாளரான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா லிமிடெட், ஒரு ஈர்க்கக்கூடிய ரூ. 8.94 லட்சம் விலையில் தொடங்கும் அற்புதமான புதிய எக்ஸ்யுவி 3எக்ஸ்ஓ ‘ஆர்இவிஎக்ஸ் வரிசையை வெளியிட்டது.
இந்த மைல்கல்லை வேகமாக எட்டிய மஹிந்திராவின் எஸ்யுவி ஆக இதை ஆக்குகின்ற வகையில் இந்த எக்ஸ்யுவி 3எக்ஸ்ஓ சமீபத்தில் ஒரு வருடத்திற்குள் 1 லட்சத்திற்கும் அதிகமான விற்பனை சாதனையை எட்டியுள்ளது. இந்த ஆர்இவிஎக்ஸ் வரிசை, வாடிக்கையாளர்களின் விருப்பங்களுடன் ஒத்திசைகின்ற பிரத்தியேக அம்சங்கள், தனித்துவமான பாணி மற்றும் பிரிவில் சிறந்த செயல்திறன் ஆகியவற்றின் ஈர்க்கக்கூடிய மதிப்புமிக்க வழங்கலுடன் இந்த எக்ஸ்யுவி 3எக்ஸ்ஓ போர்ட்ஃபோலியோவை மேலும் மேம்படுத்தும்.
தங்கள் தனித்துவமான ஆளுமையை பிரதிபலிக்கும் வாகனங்களைத் தேடும் நபர்களுக்கு வழங்குகிற இந்த ஆர்இவிஎக்ஸ் வரிசை தனிப்பட்ட வெளிப்பாட்டின் உணர்வைக் கொண்டாடுகிறது - ஏனெனில் தனித்து நிற்கத் துணிபவர்களுக்கு, "வேறுபாடு உள்ளது. ஆர்இவிஎக்ஸ் எம் (எக்ஸ்-ஷோரூம் விலை: ரூ. 8.94 லட்சம்) - இந்த மாறுபாடு 82 கிலோவாட் இன் ஒரு ஆற்றலையும் 200 என்எம் முடுக்கத்தையும் வழங்குகிற ஒரு 1.2லிட்டர் எம் ஸ்டாலியன் டிசிஎம்பிஎப்ஐ எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.
ஒரு நேர்த்தியான முன்புறத்துடன் கூடிய வெளிப்புற நிற கிரில், முழு அகல எல்இடி டிஆர்எல்கள், ஆர்16 கருப்பு வீல் கவர்கள் மற்றும் நம்பிக்கை மற்றும் ஸ்டைலை வெளிப்படுத்தும் ஒரு ஸ்போர்ட்டியான் இரட்டை வண்ணச்சாயல் ரூஃப் ஆகியவற்றை இதன் ஈர்க்கின்ற வெளிப்புறம் கொண்டுள்ளது. பளபளப்பான கருப்பு லெதரெட் இருக்கைகள், ஸ்டீயரிங் இல் பொருத்தப்பட்ட கட்டுப்பாடுகளுடன் ஒரு 26.03 செ.மீ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஒரு ஆழ்த்துகின்ற கேபின் அனுபவத்திற்காக 4-ஸ்பீக்கர் ஆடியோ அமைப்பு ஆகியவற்றை உட்புறத்தில் இது வழங்குகிறது. ஆறு ஏர்பேக்குகள், ஹில் ஹோல்ட் கன்ட்ரோலுடன் கூடிய இஎஸ்சி மற்றும் அனைத்து 4 டிஸ்க் பிரேக்குகள் உட்பட 35 நிலையான அம்சங்களுடன் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
ஆர்இவிஎக்ஸ் எம்(ஓ) (எக்ஸ்-ஷோரூம் விலை: ரூ. 9.44 லட்சம்) - இந்த மாறுபாடு ஆர்இவிஎக்ஸ் எம் ஐ விட கேபின் அனுபவத்தையும் ஒட்டுமொத்த வடிவமைப்பு ஈர்ப்பையும் உயர்த்துகின்ற ஒரு ஒற்றை-பேன் சன்ரூஃப் ஐ சேர்ப்பதன் மூலம் அதிநவீனத்தை உயர்த்துகிறது. ஆர்இவிஎக்ஸ் ஏ (எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 11.79 லட்சத்தில் தொடங்குகிறது) - இந்த மாறுபாடு கைமுறை மற்றும் தானியங்கி டிரான்ஸ்மிஷன்களுடன் இணைக்கப்பட்ட 96 கிலோவாட் இன் வகுப்பில் சிறந்த ஆற்றலையும், 230 என்எம் முடுக்கத்தையும் வழங்குகின்ற அதிநவீன 1.2லி எம்ஸ்டாலியன் டிஜிடிஐ எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது பரந்த பார்வை கொண்ட சன்ரூஃப், லெதரெட் இருக்கைகள், இரட்டை வண்ணச்சாயல் உட்புறங்கள், ஆட்டோ-டிம்மிங் ஐவிஆர்எம் போன்ற கேபினுக்குள் அனுபவத்தை மேம்படுத்தும் பிரத்தியேக அம்சங்களை அறிமுகப்படுத்துகிறது.
வெளிப்புறத்தில், வெளிப்புற வண்ண முன் கிரில், தனித்துவமான அடையாளப்படுத்தல், ஆர்16 பெயிண்டட் பிளாக் அலாய்கள் மற்றும் இரட்டை வண்ண கூரை ஆகிய தனித்துவமான ஆர்இவிஎக்ஸ் வடிவமைப்பு கூறுகளை இது கொண்டுள்ளது. ஒன்று 26.03 செ.மீ இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் மற்றொன்று 26.03 செ.மீ முழு டிஜிட்டல் கிளஸ்டர் ஆகிய இரட்டை எச்டி திரைகளுடன் இந்த ஆர்இவிஎக்ஸ் ஏ பொருத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, இது நவீன ஓட்டுநருக்கு தடையற்ற இணைப்பு மற்றும் வசதியை உறுதி செய்கின்ற உள்ளமைக்கப்பட்ட அலெக்சா, ஆன்லைன் வழிசெலுத்தல் மற்றும்
வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகியவை இடம்பெற்றுள்ள ஆட்ரெனொக்ஸ் கனெக்ட் ஐ ஒருங்கிணைக்கிறது. இந்த ஆர்இவிஎக்ஸ் தொடரின் மூன்று வகைகளும் கேலக்ஸி கிரே, டேங்கோ ரெட், நெபுலா ப்ளூ, எவரெஸ்ட் ஒயிட் மற்றும் ஸ்டீல்த் பிளாக் ஆகிய ஐந்து கண்கவர் வண்ணங்களில் கிடைக்கின்றன.