இந்தியாவில் பொதுமக்களின் அதிக நம்பிக்கைக்குரிய, பாரம்பரியம் மிக்க ஆபரண பிராண்டான உம்மிடி பங்காரு ஜூவல்லர்ஸ், 2025 ஜுலை 12 மற்றும் 13 ஆகிய இரு நாட்களில் ஒரு பிரத்யேக ஆபரண கண்காட்சி நிகழ்வை பாண்டிச்சேரியில் நடத்துவதன் மூலம் நகை ஆர்வலர்களை பிரமிப்பில் ஆழ்த்தவிருக்கிறது. கிரிஸ்டல் ஹால், அக்கார்டு புதுச்சேரி, 1, திலகர் நகர், எல்லைபிள்ளைச்சாவடி, ஆரூத்ரா நகர், புதுச்சேரி - 605009 என்ற முகவரியில் மிக பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கும் இக்கண்காட்சி நிகழ்வு காலை 11 மணி முதல், இரவு 8 மணி வரை பார்வையாளர்கள் நேரில் வருகை தந்து பார்வையிடவும், ஆபரணங்களை வாங்கி மகிழவும் திறந்திருக்கும்.
தமிழ்நாடெங்கும் தனது பிரத்யேக தயாரிப்புகளான நகைகளின் கண்காட்சி நிகழ்வுகளை நடத்தியதற்குப் பிறகு, பிரெஞ்ச் காலனிய ஆதிக்க கட்டிடக்கலைக்காகவும், அமைதியான கடற்கரைகளுக்காகவும், உயிரோட்டமுள்ள கலாச்சாரங்களின் சங்கமத்திற்காகவும் இந்தியாவெங்கிலும் புகழ் பெற்றிருக்கும் நகரமான பாண்டிச்சேரியில் தனது பிரபலமான ஆபரண கண்காட்சி நிகழ்வை நடத்துவதில் விவிஜே பெருமையடைகிறது. பாரம்பரியம் மற்றும் நவீனத்துவம் ஆகிய இரண்டின் ஒத்திசைவான கலவையை பாண்டிச்சேரி பிரதிபலிப்பதை போலவே, VBJன் ஆபரண படைப்புகளும் காலத்தைக் கடந்து நிற்கும் பாரம்பரியம் மற்றும் மனங்களை மகிழ்ச்சியால் நிரப்பும் அழகியல் அம்சங்களை நேர்த்தியாக வெளிப்படுத்துகின்றன.
இரு நாட்கள் நிகழ்வாக நடைபெறும் இக்கண்காட்சியில், மணப்பெண்ணின் அழகை பன்மடங்கு உயர்த்திக்காட்டும் நகைகளின் தொகுப்பு மற்றும் இயற்கையிடமிருந்து மலர்களின் வடிவமைப்புகள், ஜொலிக்கும் தங்கம், வைரம் ஆகியவற்றின் மிகப்பெரிய கலெக்ஷனை பார்வையாளர்கள் கண்டு மகிழலாம். இக்கண்காட்சியில் இடம்பெறும் ஒவ்வொரு ஆபரணமும், விபிஜே-ன் அற்புதமான கைவினைத்திறனை பறைசாற்றும் என்பது நிச்சயம்.
விபிஜே நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அமரேந்திரன் உம்மிடி இக்கண்காட்சி குறித்து கூறுகையில், “ஆபரணங்கள், அவற்றை வாங்கி பயன்படுத்துபவர்களின் தனிப்பட்ட ஆர்வத்தை வெளிப்படுத்துகின்ற தனித்துவ அம்சம் கொண்டவை. வாழ்க்கை நிகழ்வுகளின் கதைகளை சொல்வதாகவும், வளர்ச்சியின் மைல்கற்களை குறிப்பதாகவும் அவை இருப்பதோடு, மரபையும், பாரம்பரியத்தையும் அவை தாங்கி நிற்கின்றன. எங்களின் ஆபரண கண்காட்சி நிகழ்வுகள் இத்தகைய உணர்வுகளோடு வாடிக்கையாளர்கள் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்துவதற்கு அழகான சூழலையும், பொருத்தமான அமைவிடத்தையும் வழங்குகின்றன. புதுச்சேரி மாநிலத்தின் தன்னிகரற்ற அழகும், அதன் அறிவார்ந்த வாடிக்கையாளர்களும் எமது மிக நேர்த்தியான ஆபரண கலைப்படைப்புகளை இங்கு காட்சிப்படுத்துவற்கு இந்நிகழ்வை நடத்துமாறு எங்களுக்கு உத்வேகம் அளித்திருக்கின்றன. ஆபரணங்களை நேசிக்கும் அன்பர்களுக்கு இக்கண்காட்சி என்பது, அழகிய வடிவமைப்பின் ஒரு கொண்டாட்ட நிகழ்வாக இருக்கும்; உண்மையிலேயே மகிழ்ச்சியை நிறைவாக வழங்கும் ஒன்றை தேர்வு செய்வதற்கான அற்புதமான வாய்ப்பாகவும் இது இருக்கும்” என்றார்.
விபிஜே நிறுவனத்தின் பங்குதாரர் ஜிதேந்திரா உம்மிடி பேசுகையில், எமது மரபும், பாரம்பரியமும் ஆழமான நம்பிக்கையையும் மற்றும் கைவினைத்திறனையும் அடித்தளமாக கொண்டிருக்கின்றன. கலைநயம் மிக்க நமது பாரம்பரியத்தை நவீன நேர்த்தியுடன் கலந்து உருவாக்கப்படும் நகைகளை காட்சிப்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்கள் கொண்டிருக்கும் ஆழமான நம்பிக்கையையும், அவர்கள் உடனான எமது உறவையும் புதுப்பிப்பதற்கு இத்தகைய ஆபரண கண்காட்சிகள் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கின்றன. உம்மிடி பங்காரு ஜூவல்லர்ஸ் - ன் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் தங்க, வைர ஆபரணங்களின் தொகுப்பை புதுச்சேரி துணை மாநில மக்களோடு பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இக்கண்காட்சிக்கு வருகை தரும் நகை ஆர்வலர்களை வரவேற்க ஆவலோடு நாங்கள் காத்திருக்கிறோம்” என்று கூறினார்.