இணைய வழியில் உணவு ஆர்டர் செய்வதில் லட்சக்கணக்கான இந்தியர்களின் அனுபவத்தை மேம்படுத்த, உணவு விநியோகத் தளமான சோமேட்டோ, டாடா டிஜிட்டலுடன் ஒரு அட்டகாசமான கூட்டு ஒப்பந்தம் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து, சோமேட்டோ வாடிக்கையாளர்களுக்கு மிகவும் உபயோகமான தள்ளுபடித் திட்டங்களைத் தரவுள்ளது.
டாடா நியு எச்டிஎப்சி வங்கி கடன் அட்டையை பயன்படுத்தி சோமேட்டோவில் உணவு வாங்கும் போது இந்த தள்ளுபடி சலுகைகள் கிடைக்கும். டாடா டிஜிட்டலுடன் மற்றுமொரு துணை பிராண்டாக எச்டிஎப்சி வங்கி இணைந்திருப்பதன் மூலம் வழங்கப்படும் கடன் அட்டை இது. எச்டிஎப்சி வங்கி இந்தக் கடன் அட்டைகளை வழங்கும்.
இந்த கூட்டு ஒப்பந்தத்தின் அங்கமாக, சோமேட்டோவில் ஒவ்வொரு முறையும் உணவு ஆர்டர் செய்வதற்காக வாடிக்கையாளர்கள் நியுகார்ட்-ஐ பயன்படுத்தினால், சோமேட்டோ மணி-ல் 10% கேஷ்பேக் சலுகை கிடைக்கும். குறைந்தபட்சம் 99 ரூபாயிலிருந்து உணவு ஆர்டர் செய்பவர்களுக்கு இந்த தள்ளுபடித் திட்டம் பொருந்தும்.
இந்தத் தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் சலுகைத் திட்டங்களின் மூலம், நாம் அடுத்தடுத்து உணவை ஆர்டர் செய்யும்போது அந்த உணவுக்கான விலையில் தள்ளுபடியுடன் குறைந்த விலையில் வாங்க முடியும். இதன்மூலம் இணையவழி திரும்பத் திரும்ப உணவுகளைப் பெறுவதை ஊக்குவிக்கும் முயற்சியாக இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
"டாடா நியு-வுடன் நாங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் இணைந்திருப்பது குறித்து பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். இதன்மூலம் எங்கள் வாடிக்கையாளருடனான பயணத்தை மேலும் அனுகூலமிக்கதாக மாற்றியிருக்கிறோம். நல்ல உணவு இன்னும் நிறையபேருக்குச் செல்வதற்கான எங்கள் இலக்கில் இந்த கூட்டு ஒப்பந்தம் இன்னொரு முன்னெடுப்பென்று கருதுகிறோம். நியுகார்ட் பயன்படுத்துபவர்களுக்கென்றே பிரத்தியேக சலுகைகளுடன், சோமேட்டோ மணி வழியாக 10% தள்ளுபடியையும் வழங்க இந்த ஒப்பந்தம் உதவுகிறது. இந்த கேஷ்பேக் திட்டம் வழியாக அடுத்தடுத்து சோமேட்டோவில் செய்யும் ஆர்டர்களில் தள்ளுபடி கிடைக்கும். டாடாநியூ அட்டை வழியாக பணசேமிப்பையும் பிரம்மாண்டமான டிஜிட்டல் சூழல்வழியான வசதிகளையும் தரவுள்ளோம்.” என்று சோமேட்டோவின் தயாரிப்புகள் பிரிவு துணைத்தலைவர் ராகுல் குப்தா கூறியுள்ளார்.
“சோமேட்டோவுடனான இந்தக் கூட்டு ஒப்பந்தம் இயற்கையாகவே பொருந்தக்கூடியதாகும். நாங்கள் இரு நிறுவனங்களும் வாடிக்கையாளரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டவர்கள். உணவளிக்கும் சந்தோஷத்தைவிட வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் அம்சம் வேறு என்ன உள்ளது? டிஜிட்டல் வழி வாழ்க்கைபாணியே முதன்மையாக உள்ள உலகில், இந்தக் கூட்டு ஒப்பந்தம் வாயிலாக, நியுகார்ட் அட்டைதாரர்களுக்கு கூடுதல் சௌகரியத்தையும், நியுகார்டுக்கு மேம்பட்ட மதிப்பையும் தருகிறோம்.” என்று டாடா டிஜிட்டலின் நிதி சேவைகள் பிரிவின் தலைவர் கௌரவ் ஹஸ்ராத்தி கூறியுள்ளார்.