டாடா அசெட் மேனேஜ்மென்ட்-ன் முதலீட்டு செயலி அறிமுகம்



டாடா அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனம் பயனர்களுக்கு அவர்களின் நிதி உலகத்தை முழுமையான புரிதலாக வழங்கும் நோக்கத்துடன் தனது வகையில் முதன்மையான மொபைல் செயலியை \அறிமுகப்படுத்தியது. ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளமாக வடிவமைக்கப்பட்ட இந்த செயலி "ஒரு செயலி . ஒரு பார்வை. எண்ணற்ற வாய்ப்புகள்." (One App. One View. Infinite Opportunities.) என்ற பிராண்ட் தளத்தின் கீழ் எளிமை, நுண்ணறிவு மற்றும் தனிப்பயனாக்கம் இவையனைத்தையும் ஒருங்கிணைக்கிறது. இந்த புதிய செயலி, ஆப் ஸ்டோர் மற்றும் கூகிள் பிளே ஆகியவற்றில் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.

முதலீட்டை எளிமையாகவும், புத்திசாலித்தனமாகவும், மற்றும் மேலும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதில் மொபைல் செயலியின் இந்த அறிமுகம் ஒரு பெரிய முன்னேற்றத்தைக் குறிக்கிறது. "ஒரு செயலி. ஒரு பார்வை. எல்லையற்ற வாய்ப்புகள்" என்ற பிராண்ட் வாக்குறுதியுடன், இந்த செயலி கற்றல் மற்றும் முதலீடு செய்வது முதல் அவர்களின் நிதி இலக்குகளைக் கண்காணிப்பது வரை முதலீட்டாளர்களுக்குத் தேவையான அனைத்தையும் ஒரே இடத்தில் ஒன்றிணைக்கிறது. இந்த பிராண்ட் வாக்குறுதியில் கட்டமைக்கப்பட்ட புதிதாக வெளியிடப்பட்ட இந்த செயலி, டாடா அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் தற்போதைய டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லை குறிக்கிறது.  

இலக்குகளை நிர்ணயிப்பதற்கும் கண்காணிப்பதற்கும் ஒரு நிதி திட்டம், பரஸ்பர நிதிகள், பங்கு மற்றும் வங்கிக் கணக்குகளை ஒரே இடத்தில் காண Portfolio 360, முன்கூட்டியே ஓய்வு பெற திட்டமிடுவதற்கான ஒரு FIRE Calculator, முதலீட்டுத் தேர்வுகளைச் சேமிக்க ஒரு Smart Cart மற்றும் ஒரு எளிமையான, பாதுகாப்பான ஆன்போர்டிங் செயல்முறை போன்ற அம்சங்களை இந்த செயலி வழங்குகிறது. ஒவ்வொரு படியிலும் முதலீட்டாளர்களுக்கு வழிகாட்ட கற்றல் தொகுதிகள் மற்றும் chatbot ஆதரவு ஆகியவற்றையும் இது உள்ளடக்குகிறது.

டாடா அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் தலைமை விநியோக மற்றும் டிஜிட்டல் அதிகாரி ஹேமந்த் குமார் கூறுகையில், "'ஒரு செயலி. ஒரு பார்வை. எண்ணற்ற வாய்ப்புகள்' என்பது வெறும் வாசகம் மட்டும் அல்ல; இது நாம் வழங்கும் மையக்கரு அதுவாகும். இன்றைய முதலீட்டாளர்கள் அவர்களின் அனைத்து நிதி சொத்துகளுக்கும் தெளிவு மற்றும் முழுமையான கட்டுப்பாடும் வழங்குகிற ஒரு ஒருங்கிணைந்த நுண்ணறிவு தளத்தை எதிர்பார்க்கிறார்கள். தடையற்ற கண்காணிப்பு, ஒரே பார்வை போர்ட்ஃபோலியோ மற்றும் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையுடன் முதலீடு செய்ய அதிகாரமளிக்கும் ஒரு தனிப்பயனாக்கப்பட்ட அனுபவம் இவை அனைத்தையும் இந்த செயலி ஒரே இடத்தில் கொண்டு வருகிறது.  


Post a Comment

Previous Post Next Post

Contact Form