எஸ்ஸிலார் நிறுவனத்தின் இந்தியா பிராண்ட் தூதராக விராட் கோலி நியமனம்

 


உலகளவில் முன்னணி வகிக்கும் லென்ஸ் நிறுவனமான எஸ்ஸிலார்  நிறுவனம், பிரபல கிரிக்கெட் வீரரும் பன்னாட்டு விளையாட்டு ஐகானுமான  விராட் கோலியை,  இந்தியாவுக்கான பிராண்ட் தூதராக நியமித்துள்ளது. இந்தக் கூட்டாண்மை பாரம்பரியப் பெருமை மிக்க இரு பிரபலங்களுக்கு இடையேயான ஆற்றல்மிகு ஒப்பந்தமாகும். எஸ்ஸிலார்  பிராண்டுகளின் மதிப்பு முன்மொழிவுக்கு உயிரோட்டம் அளிக்கும் வகையில், விராட் கோலி நடிப்பில் பல்லூடகப் விளம்பரப் பிரச்சாரத்தை எஸ்ஸிலார் வெளியிடும். 

புதுமையான பிராண்ட்களை இந்த விளம்பரப் பிரச்சாரம் காட்சிப்படுத்தும் - ஸ்டெல்லெஸ்ட், ஐஜென் மற்றும் வெரிலக்ஸ்  லென்ஸ்கள், எந்த வயதுப் பிரிவினரின் பார்வைத் திருத்தத் தேவைகளையும், நிறைவு செய்யும். க்ரிஜல்  லென்ஸ் பாதுகாப்பில் கண்ணுக்குத் தெரியாத பிரபல கேடையமாகத் திகழும். இது அணிபவருக்குத் தெள்ளத் தெளிவான பார்வையையும் வழங்கும்.

இது குறித்து எஸ்ஸிலார்  லக்ஸாட்டிக்கா தெற்கு ஆசியா, கண்ட்ரி ஹெட் நரசிம்மன் நாராயணன் கூறுகையில்  ‘விராட் கோலியின் தோற்றமும், சிறந்து விளங்கும் விடாமுயற்சியும், புதுமை மற்றும் தரத்திற்கான எஸ்ஸிலாரின்  அர்ப்பணிப்புடன் இணைந்துள்ளன. எஸ்ஸிலார்  தொழில்நுட்பத்தின் புதுமையையும், பொருள்களின் உயர் தரத்தையும் வலியுறுத்தும். இது ஒரு புதிய மற்றும் அற்புதமான அத்தியாயத்தின் தொடக்கமாகும்,  இந்த உலகைத், தெளிவோடும், நம்பிக்கையோடும் தனிநபர்கள் காணும் வகையில், அவர்களுக்கு ஆற்றலை வழங்கும் பிராண்டின் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றை உருவாக்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்’ என்றார்.

எஸ்ஸிலார்  நிறுவனத்துடனான புதிய இன்னிங்க்ஸ் குறித்து விராட் கோலி கூறுகையில் ‘உலகளாவிய கண் பார்வைப் பாதுகாப்பில் புரட்சியை ஏற்படுத்தி முன்னணி வகிக்கும் எஸ்ஸிலார்  பிராண்டுடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். எஸ்ஸிலார் கண் பார்வைப் பாதுகாப்பு குறித்து மேலும் கற்கவும், ஒவ்வொரு தனிநபரின் பார்வைத் தேவைகளை வெவ்வேறு லென்ஸ்கள் எவ்வாறு நிறைவு செய்கின்றன என்பதை அறியவும், பிராண்ட் தூதராக இருப்பது உதவுகிறது’ என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form