திருச்சியில் வாக்கத்தான் பிரச்சாரம்இந்தியக் குருதிநாள் அமைப்பு’ ஆகஸ்ட் 6 அன்று ‘தேசிய குருதிநாளம் தினத்தை’ நாடு முழுவதும் கொண்டாடியது. இந்த நாளில் திருச்சி உள்பட இந்தியாவிலுள்ள 26 நகரங்களில், ‘உடலுறுப்பு நீக்கம் இல்லாத இந்தியா’ என்னும் மைய நோக்கத்துடன், ‘புன்னகையுடன் ஒரு மைல் தூரம் நடை பழகுங்கள்’ என்னும் செய்தியுடன், விழிப்புணர்வை உண்டாக்கி, தேசிய அளவிலான கவனத்தை ஈர்க்க விஎஸ்ஐ ‘வாக்கத்தான்’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. 

 தென்னூரில் உள்ள காவேரி மருத்துவமனையிலிருந்து இந்திய மருத்துவ சங்கம் வரை (2 கிமீ) வாக்கத்தான் நடைபெற்றது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் வேலூரில் வாக்கத்தான் நடைபெற்றது.

இது குறித்து மூத்த குருதிநாள அறுவை சிகிச்சை நிபுணரும், இந்தியக் குருதிநாள அமைப்பு - திருச்சியின் முதன்மை அமைப்பாளருமான டாக்டர் அருணகிரி.வி கூறுகையில், “திருச்சியில் பிரச்சாரத்துக்குக் கிடைத்த அமோகமான வரவேற்பு ஊக்கமளிப்பதாக உள்ளது. விரிவான குருதிநாள சுகாதாரப் பாதுகாப்பு வழங்கு அமைப்பு மூலம், உடலுறுப்பு நீக்கம் இல்லாத இந்தியா என்னும் இலக்கை எட்ட, ஆரோக்கிய சமூகங்களை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும்’ என்றார்.  

Post a Comment

Previous Post Next Post

Contact Form