டைசன் நிறுவனத்துடன் இணையும் தீபிகா படுகோனே

 


உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான டைசன் குளோபல் , இந்தியாவில் அதன் ஹேர் கேர் தொழில்நுட்பங்களின் விளம்பரத் தூதராக தீபிகா படுகோனே அவர்களை அறிவித்துள்ளது. இந்த கூட்டணியின் மூலம் தலைமுடியின் ஆரோக்கியத்தை பரிமாறிக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் டைசன் நிறுவனம், தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட அதன் ஸ்டைலிங் சாதனங்களின் உகந்த பயன்பாடு குறித்து விளக்குவதையும் தொடரவுள்ளது.  

இது குறித்து பேசிய டைசன் இந்தியாவின், நிர்வாக இயக்குனர் அங்கித் ஜெயின் , “தீபிகா படுகோனே உடன் இணைந்ததில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. அதிநவீன என்ஜினியரிங் மற்றும் எதிர்நோக்கு சிந்தனையுள்ள வடிவமைப்பு ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்து, நாம் நமது தலைமுடியை பராமரிக்கும் விதம் மற்றும் ஸ்டைல் செய்யும் விதத்தில், டைசன் ஹேர் கேரின் தொழில்நுட்பங்கள் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது, இனியும் தொடர்ந்து ஏற்படுத்தும்” என்று தெரிவித்தார்.

டைசன் ஹேர் கேர் பிராண்டின் விளம்பரத் தூதுவராக இணைந்திருப்பது பற்றி கூறிய தீபிகா படுகோனே, “அட்டகாசமான ஹேர் ஸ்டைல்களை பெறும் அதே வேளையில், தலைமுடியின் ஆரோக்கியத்தைப் பேணுவதன் முக்கியத்துவத்தை உணர்த்தி, மக்கள் இன்னும் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை எங்களது இந்த கூட்டணி ஊக்குவிக்குமென நான் நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

தொழில்நுட்பத்தில் முன்னோடியாக இருப்பதற்காக டைசன் நிறுவனம் தொடர்ந்து  முதலீடுகளை செய்து வருகிறது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, டைசன் சூப்பர்சோனிக் ஹேர் ட்ரையரை அறிமுகப்படுத்திய போது, தலைமுடி பராமரிப்பில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. வேகமாக இயங்கக்கூடிய இச்சாதனம், கட்டுப்படுத்தப்பட்ட காற்றோட்டத்தின் மூலமாகவும், அறிவார்ந்த முறையில் வெப்பத்தைக கட்டுப்படுத்துவதன் மூலமாகவும் தலைமுடியை விரைவாக உலர்த்துவது மற்றும் அதே நேரத்தில் தலைமுடியை வலிமையுடனும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form