ஹிமாலயாவின் புதிய விளம்பரப் பிரச்சாரம் வெளியீடு

முன்னணி வெல்னஸ் நிறுவனமான ஹிமாலயா, பருக்கள் பிரச்சினைகளுக்கு ஒரிஜினல் தீர்வளிக்கும் “தி ஒஜி பிம்பிள் சொல்யூஷன்” என்கிற விளம்பரத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இது அம்மாக்களுக்கும் அவர்களது டீனேஜ் மகள்களுக்கும் இடையேயான ஆழமான உறவை வெளிப்படுத்துகிறது.  நாடு தழுவிய கமர்ஷியல்ஸ், டிஜிட்டல் விளம்பரங்கள் மற்றும் சமூக ஊடக வெளியீடுகள் ஆகியவற்றுடன் இந்தப் பிரச்சாரம் துவங்குகிறது. 

மகள்களின் வாழ்க்கையைப் பொருத்தவரை, குறிப்பாக பிம்பிள் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்குவதில் அவர்களது அம்மாக்கள் தான் அசலான  இன்ஃப்ளூயன்சர்களாக உள்ளனர் என்பதை எடுத்துக்கூறுகிறது.

ஹிமாலயாவின் “தி ஓஜி பிம்பிள் சொல்யூஷன்” பிரச்சாரத்தில், முக்கிய அங்கமாக உள்ள ஃபேஸ் வாஷின் இயற்கையான உட்பொருட்களின் ஆற்றல் பற்றி பேசப்படுகிறது. சருமம் மற்றும் சுற்றுச்சூழலில் அது ஏற்படுத்தும் நேர்மறையான தாக்கம் குறித்தும் கூறுகிறது. 

இந்த விளம்பரப் பிரச்சாரத்தின் மையமாக இருப்பது பிரபல தயாரிப்பான ‘ஹிமாலயா ப்யூரிஃபையிங் நீம் ஃபேஸ் வாஷ்’, இது சருமப் பராமரிப்பு பிரிவில் புகழ்பெற்ற மற்றும் நம்பிக்கைக்குரிய பெயராகும் மற்றும் பிராண்டின் வெற்றிப் பயணத்தில் ஒரு முக்கியமான பங்காற்றியுள்ளது.  மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட இந்த ஃபேஸ் வாஷில் 100 சதவிகிதம் இயற்கையாக பெறப்பட்ட வேப்பிலையின் நற்குணங்கள் நிறைந்துள்ளன.

இதுகுறித்து பேசிய ஹிமாலயா வெல்னஸ் கம்பெனியின், கேட்டகரி மேனேஜர், காயத்திரி கபிலன், “எங்களுக்கு இருக்கும் உத்வேகம், ‘ஹிமாலயா ப்யூரிஃபையிங் நீம் ஃபேஸ் வாஷ்’-இன் பெருமைமிகு பாரம்பரியம் மற்றும் பிராண்டு பின்னணியிலிருந்து வருகிறது. எங்களது பாரம்பரியம் மற்றும் நிலைத்தன்மை வாய்ந்த சருமப் பராமரிப்பு தயாரிப்புகளை உருவாக்குவதில் எங்களுக்கு உள்ள அர்ப்பணிப்பிற்கு பெருமை சேர்க்கும் நோக்கத்துடன் விளம்பரத்தை உருவாக்க விரும்பினோம். ‘முன்னோர்களின் நுண்ணறிவு மற்றும் தரத்திற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றை உறுதியான அடித்தளமாகக் கொண்ட ஒரு பிராண்டு - ஹிமாலயா’ என்பதை எங்கள் வாடிக்கையாளர்களிடம் ஆழமாக கொண்டு சேர்க்க விரும்புகிறோம்”, என்று தெரிவித்தார்.

82.5 கம்யூனிகேஷன்ஸ், தெற்கு பிரிவிற்கான, பிரான்ச் ஹெட், நவீன் ராமன் இதுபற்றி கூறுகையில், “இந்த பிரச்சாரமானது நவீன கால டீனேஜ் பெண்கள் மற்றும் அவர்களது அம்மாக்களுக்கு இடையே ஒரு வலுவான பிணைப்பை ஏற்படுத்தும்.‘ஹிமாலயா ப்யூரிஃபையிங் நீம் ஃபேஸ் வாஷ்’ -உடன் அவர்களது சருமப் பராமரிப்பு மட்டுமில்லாமல், நமது பூமியின் மீது தாய்மார்கள் காட்டும் அக்கறையையும், அடுத்த தலைமுறைக்கான இளம் பெண்கள் பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்துவதே எங்கள் நோக்கமாகும்” என்றார்.

82.5 கம்யூனிகேஷன்ஸ், தெற்கு பிரிவிற்கான, எக்சிக்யூட்டிவ் கிரியேடிவ் இயக்குநர்களான சங்கீதா சம்பத் மற்றும் ரவிகுமார் செறுஸோலா ஆகியோர், “இந்த தலைமுறையின் ஒவ்வொரு இளம் பெண்ணின் வாழ்க்கையிலும் இருக்கும் அசல் இன்ஃப்ளூயன்சரான அவரது அம்மாவை இந்த புதிய பிரச்சாரம் கொண்டாடுகிறது” என்று கூறினார்கள்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form