ஸ்கோடா ஆட்டோ இந்தியா, தமிழ்நாட்டில் மூன்று புதிய கஸ்டமர் டச்பாயிண்டுகளைத் தொடங்கியதன் மூலம். இந்த மாநிலத்திலும், இந்தியாவின் தெற்குப் பிராந்தியத்திலும் அதன் நெட்வொர்க் இருப்பை மேலும் வலுப்படுத்துகிறது. ரமணி ஆட்டோமோட்டிவ் எக்ஸலன்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் கூட்டிணைந்து தொடங்கப்பட்ட இப்புதிய மையங்களில், தமிழ்நாட்டில் மதுரையில் ஒரு புதிய ஷோரூம் மற்றும் ஒரு புதிய விற்பனைக்குப் பிந்தைய சேவை மையம் மற்றும் திண்டுக்கல்லில் ஒரு புதிய விற்பனை மையம் மற்றும் பிந்தைய விற்பனை சேவை மையம் ஆகியவை அடங்கும்.
இந்த மதுரை ஷோரூம், ஏழு கார்களுக்கான கண்காட்சி இடவசதியுடன், 4,500 சதுரஅடி பரப்பளவில் பரந்து விரிந்துள்ள அதேவேளையில், விற்பனைக்குப் பிந்தைய சேவை மையமானது 15,000 சதுரஅடி பரப்பளவில், மெக்கானிக்கல் மற்றும் பாடிஷாப் பே-க்களை உள்ளடக்கிய 14 சர்வீஸ் பே-க்களைக் கொண்டுள்ளது. திண்டுக்கல்லில் அமைந்துள்ள ஷோரூம்-ஆனது, 1,500 சதுரஅடி பரப்பளவில், மூன்று கார்களுக்கான கண்காட்சி இடவசதியும், 1,900 சதுரஅடி பரப்பளவில், 2 சர்வீஸ் பே-க்களுடன் விற்பனைக்குப் பிந்தைய சேவை மையமும் உள்ளது. இந்த சேர்க்கைகளுடன், ஸ்கோடா ஆட்டோ இந்தியா, இப்போது தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், ஈரோடு, ஓசூர், கரூர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், பொள்ளாச்சி, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருப்பூர், திருச்சி மற்றும் வேலூர் உள்ளிட்ட 17 நகரங்களில், 32 கஸ்டமர் டச்பாயிண்டுகளைக் கொண்டுள்ளது.
இத்திறப்பு விழா குறித்து கருத்து தெரிவித்த ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் பிராண்ட் இயக்குனர் ஆஷிஷ் குப்தா, “இப்புதிய சேவை மையங்களைத் திறப்பதன் மூலம், தமிழ்நாடு முழுவதும் ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் இருப்பை நாங்கள் தொடர்ந்து வலுப்படுத்துகிறோம். இப்பிரதேசமானது எங்களுக்கு ஒரு முக்கிய சந்தையாக இருப்பதுடன், 32 கஸ்டமர் டச்பாயிண்ட்கள் இப்போது செயல்பட்டு வருவதால், எங்கள் தயாரிப்புகளின் முழுமையான வரம்பை வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமாகக் கொண்டு வரும் அதேவேளையில், அவர்கள் மிக உயர்தரமான சேவை மற்றும் கவனிப்பை அனுபவிப்பதை உறுதிசெய்கிறோம். இந்தியாவில் எங்கள் வளர்ச்சியின் ஒரு முக்கியத் தூணாக தமிழ்நாடு உள்ளதுடன், கைலாக், குஷாக், கோடியாக் மற்றும் ஸ்லாவியா ஆகியவற்றுடன், இந்த முக்கிய சந்தையில், ஸ்கோடா பிராண்டை வளர்ச்சியடையச் செய்வதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்” என்றார்.
ரமணி ஆட்டோமோட்டிவ் எக்ஸலன்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் டீலர் பிரின்சிபல் திரு. சதீஷ் குமரன் கூறுகையில், “ஸ்கோடா ஆட்டோ இந்தியா-வுடன் கூட்டிணைந்து, இந்த பிராண்டின் உயர்தர அனுபவத்தை, மதுரை மற்றும் திண்டுக்கல்லில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இப்புதிய விற்பனை மையங்கள் மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவை மையங்கள், டிஸ்பிளே முதல் டெலிவரி வரையிலான ஒரு உயர்தர வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளனல்; அதே நேரத்தில், அதிநவீன சேவைக்கான ஆதரவையும் வழங்குகின்றன. இந்த நகரத்தின் வாடிக்கையாளர்களுக்கு, ஸ்கோடா ஆட்டோவின் தயாரிப்பு வரம்பு மற்றும் உடைமையுரிமைப் பயணத்தில் ஆகச் சிறந்தவற்றை வழங்குவதே எங்கள் உறுதிப்பாடாகும்.” என்றார்.
