ஸ்கோடா ஆட்டோ இந்தியா, இந்தியாவில் தனது வளர்ச்சி வேகத்தைத் தொடர்ந்து, சந்தையில் நுழைந்ததிலிருந்து 5 லட்சம் யூனிட் விற்பனையை கடந்த முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. தன் வெள்ளி விழா ஆண்டில், இந்த பிராண்டு ஏற்கனவே பல மாதாந்திர, காலாண்டு மற்றும் ஆண்டு மைல்கற்களை கடந்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் இறுதி மாதத்திற்கு முந்தைய மாதமான நவம்பரில், இந்த பிராண்டு இந்தியாவில் 5,491 யூனிட்களை விற்பனை செய்து, கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 90% இயர் ஆன் இயர் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
வளர்ச்சி குறித்து ஸ்கோடா ஆட்டோ இந்துயாவின் பிராண்டு டைரக்டர் அஷீஷ் குப்தா கூறுகையில், “எங்கள் விரிவடைந்து வரும் விற்பனை நெட்வொர்க்கினால், மதிப்புரிமை வழங்கும் ஓனர்ஷிப் சலுகைகள், மற்றும் பரந்த தயாரிப்பு தொகுப்பு ஆகியவை, எங்கள் 5 லட்சம் விற்பனை மைல்கல்லுக்கும் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து கிடைக்கும் வருடாந்திர வளர்ச்சிக்கும் முக்கிய இயக்க சக்திகளாக உள்ளன. எங்கள் தயாரிப்புகளின் மூலம் மற்றும் எங்கள் வாடிக்கையாளர்கள், ரசிகர்களுடன் இன்னும் நெருக்கமாக இணைவதன் மூலம், இந்த வேகத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்துவோம்” என்றார்,
ஸ்கோடா ஆட்டோ, இந்தியாவில் செடான் வரிசையின் வலிமையான பாரம்பரியத்தை கொண்டு தன்னை நிறுவியது. 130 ஆண்டுகள் உலகளாவிய பாரம்பரியம் மற்றும் இந்தியாவில் 25 ஆண்டுகள் வரலாறுடன், ஆக்டோவியா, பிராண்டிற்கான வலிமையான பாரம்பரியமாக இருந்தது. தன் 25வது ஆண்டு விழாவில் பிராண்டு எட்டிய பல மைல்கற்களில் ஒன்றாக ஆக்டோவியா ஆர்எஸ் மீண்டும் வந்ததன் மூலம் இது இந்தியாவின் மிகப் பழமையான மாடல்களில் ஒன்றாக ஆகியுள்ளது. முன்பதிவுகள் தொடங்கப்பட்ட 20 நிமிடங்களில் இந்தியாவிற்கு ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு ஆக்டோவியா காரும் விற்றுத் தீர்ந்துவிட்டன. ஸ்லேவியா செடான் 1.0 டிஎஸ்ஐ மற்றும் 1.5 டிஎஸ்ஐ வடிவங்களில், ஸ்கோடா ஆட்டோ இந்தியா, இந்தியாவில் தனது செடான் மரபை தொடர்கிறது.
ரூ. 7.5 லட்சம் முதல் ரூ. 45.9 லட்சம் வரை, ஸ்கோடா ஆட்டோ இந்தியா, இந்தியாவில் ஒவ்வொரு தேவைக்கும், ஆசைக்கும் ஏற்ப வடிவமைக்கப்பட்ட விரிவான எஸ்யுவி தொடரை வழங்குகிறது. 2017 இல் இந்தியாவிலும் உலகளாவிய சந்தையிலும் அறிமுகமான கோடியாக், அதன் புதிய தலைமுறையில், அதே விலை நிலைப்பாட்டில் தனித்துவமான லக்சுரி 4x4 அனுபவத்தை தொடர்கிறது. இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட, உலகளாவிய சந்தைக்குத் தயாரான எம்கியுபி ஏஓ இன் பிளாட்ஃபாரத்தை அடிப்படையாகக் கொண்ட முதல் ஸ்கோடா வாகனமான குஷாக், லக்சுரி, தொழில்நுட்பம் மற்றும் ஸ்கோடாவின் தனித்துவ அம்சமான ஓட்டுநர் அனுபவத்தை ஒருங்கிணைத்துள்ளது.மேலும், புதிய, கடுமையான குளோபல் என்சிஏபி சோதனை முறைமைகளில் பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் முழு ஐந்து நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற இந்தியாவின் முதல் வாகனமாகவும் இது ஆகிறது. மேலும், பாதுகாப்பு பாரம்பரியத்தை தொடரும் வாகனம் கைலாக எஸ்யுவி, பாரத் என்சிஏபி பாதுகாப்பு சோதனைகளில் பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் முழு ஐந்து நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது.
விரிவான தயாரிப்பு வரையறை, வாடிக்கையாளர்களுக்கு உகந்த பல சலுகைகள் மற்றும் தொகுப்புகள், 180 நகரங்களில் 320க்கும் மேற்பட்ட கஸ்டமர் டச் பாயிண்ட்டுகள் ஆகியவற்றுடன், ஸ்கோடா ஆட்டோ இந்தியா தனது மிகப்பெரிய ஆண்டில் வளர்ச்சியைத் தொடரும் வேகத்தை நிலைநிறுத்த தயாராக உள்ளது.
