முதலீட்டாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய பிஎஸ்இ



பங்கு சந்தை தொடர்பான அறிவை வளர்த்துக் கொள்ளவும், பாதுகாப்பான எதிர்காலத்திற்கு பங்கு முதலீடு எவ்வாறு உதவுகிறது என்பது குறித்தும் பிஎஸ்இ முதலீட்டாளர்கள் பாதுகாப்பு நிதியம் சார்பில் கோவையில் பிராந்திய முதலீட்டாளர் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் முதலீட்டாளர்கள், சந்தை பங்கேற்பாளர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்கள் கலந்து கொண்டு பங்கு சந்தை தொடர்பாக பல்வேறு தகவல்களை வழங்கினார்கள்.

இக்கருத்தரங்கில், இன்றைய மாறும் நிதி சூழ்நிலையில் தகவலறிந்த முடிவெடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, நிதிச் சந்தைகள், சைபர் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியத் திட்டமிடல் குறித்து முதலீட்டாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில் செபி தலைவர் துஹின் காந்தா பாண்டே கலந்து கொண்டு, தகவல் அறிந்து முதலீடு செய்வதன் முக்கியத்துவம், பங்கு சந்தை தொடர்பான விதிமுறைகள் மற்றும் இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் மூலதன சந்தை குறித்து பார்வையாளர்களிடம் விரிவாக பேசினார்.

பிஎஸ்இ நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி  சுந்தரராமன் ராமமூர்த்தி தனது துவக்க உரையில்,  பங்கு சந்தை முதலீடு குறித்து மக்களிடம் நாங்கள் தொடர்ச்சியான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.

இந்த கருத்தரங்கில் நிதி ஆலோசகர்கள் தலைமையிலான பல்வேறு அமர்வுகளும் நடைபெற்றன.  மேலும் சைபர் பாதுகாப்பு குறித்தும், செபியால் பட்டியலிடப்பட்ட ஸ்மார்ட் பயிற்சியாளரான ஏசிஎஸ் நிறுவனத்தின் பங்குதாரர் கே. அண்ணாமலையின் ஓய்வூதிய திட்டமிடல் குறித்த அமர்வும் நடைபெற்றது. இதில் கோயம்புத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 400 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். நாடு முழுவதும் உள்ள முதலீட்டாளர்களிடையே நிதி விழிப்புணர்வு, டிஜிட்டல் கண்காணிப்பு மற்றும் நீண்டகால திட்டமிடல் ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இதுபோன்ற கருத்தரங்குகளை பிஎஸ்இ நடத்தி வருகிறது.

கருத்தரங்கில் செபி தலைவர் துஹின் காந்தா பாண்டே பேசுகையில், இந்தியாவின் மூலதனச் சந்தைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த வளர்ச்சி காரணமாக ஒவ்வொரு முதலீட்டாளரும் தகவல், அதிகாரம் மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அதிக பொறுப்பும் ஏற்பட்டுள்ளது. முதலீட்டாளர் விழிப்புணர்வு என்பது பங்கு சந்தை குறித்து அறிந்து கொள்வதற்கான ஒரு அடிப்படை வாய்ப்பாகும். முதலீட்டாளர் விழிப்புணர்வு திட்டங்கள் மற்றும் பிராந்திய முதலீட்டாளர் கருத்தரங்குகள் போன்ற முயற்சிகள் சிறிய நகரங்களில் பங்கு சந்தை தொடர்பான விழிப்புணர்வை வலுப்படுத்த உதவி வருகின்றன என்று தெரிவித்தார்.

இதில் பேசிய பிஎஸ்இ நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தரராமன் ராமமூர்த்தி கூறுகையில், முதலீட்டாளர் விழிப்புணர்வு என்பது இந்தியாவின் நிதிச் சூழலின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு பொறுப்புமிக்க நடவடிக்கையாகும். டிஜிட்டல் தொழில்நுட்ப உதவியுடன் பங்கு சந்தை வளர்ச்சி அடைந்து வரும் இந்தத் தருணத்தில் அது குறித்து முதலீட்டாளர்களுக்கு போதிய அறிவு, பாதுகாப்புகள் மூலம் அதிகாரம் அளிப்பது இன்னும் முக்கியமானதாகிறது. எங்களின் நாடு தழுவிய விழிப்புணர்வு திட்டங்கள் மூலம், இந்தியாவின் வளர்ச்சிக்கு தகவலறிந்த முதலீட்டாளர் சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form