நத்திங் நிறுவனம் தனது புதிய போன் (3ஏ) லைட் ஸ்மார்ட்ஃபோனை இந்தியாவில் அறிமுகம் செய்தது



லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தொழில்நுட்ப நிறுவனமான நத்திங், இந்தியாவில் போன் (3ஏ) லைட் ஸ்னார்ட்ஃபோனை அறிமுகப்படுத்தியது. வாடிக்கையாளர்களிடம் ஏற்கனவே பிரபலமாக உள்ள கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களுடன், தற்போது புதிதாக நீல நிறத்திலும் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய சாதனம் நத்திங் நிறுவனத்தின் அடையாளமான உட்புறம் ஊடுருவித் தெரியும் டிரான்ஸ்பரன்ட் டிசைன் அமைப்பைக் கொண்டுள்ளது. 

மேலும், இது 6.77 அங்குல அமோல்ட் டிஸ்பிளே, ட்ரூ லென்ஸ் என்ஜின் 4.0 தொழில்நுட்பத்துடன் கூடிய 50 எம்பி பிரதான கேமரா, மீடியா டெக் டிமென்சிட்டி 7300 ப்ரோ சிப்செட் மற்றும் 5000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி போன்ற பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.20,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வங்கி சலுகைகளைப் பயன்படுத்தும்போது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டை வாடிக்கையாளர்கள் ரூ.19,999 என்ற விலையில் பெறலாம். இந்த போன் (3ஏ) லைட் வரும் டிசம்பர் 5, 2025 முதல் விற்பனைக்கு வருகிறது. வாடிக்கையாளர்கள் இதனை பிளிப்கார்ட், விஜய் சேல்ஸ் க்ரோமா மற்றும் இந்தியாவின் முக்கிய சில்லறை விற்பனை நிலையங்களில் வாங்கலாம்.

போன் (3ஏ) லைட் ஆனது நத்திங் நிறுவனத்தின் தனித்துவமான டிரான்ஸ்பரன்ட் டிசைனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது. இது தூசி மற்றும் நீர் தெறிப்புகளிலிருந்து பாதுகாக்கும் ஐபி 54 ரெசிடென்ஸ் தரச் சான்றிதழைப் பெற்றுள்ளது. இதன் உட்புறம் உறுதியான அலுமினிய கட்டமைக்கப்பட்டுள்ளது மற்றும் கையாளுவதற்கு எளிதான வகையில் குறைந்த எடையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. காட்சி அனுபவத்தை மேம்படுத்த, இதில் 6.77 அங்குல ஃபிளெக்சிபிள் அமோல்ட் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இது காட்சிகளுக்கு ஏற்ப மாறுபடும் 120 எச்இசட்  அடாப்டிவ் ரெப்ரெஷ் ரேட் மற்றும் மிகத் துல்லியமான வெளிச்சத்தைத் தரும் 3000 நிட்ஸ் பீக் எச்டிஆர் வசதியைக் கொண்டுள்ளது.

புகைப்படங்களை மிகத் தெளிவாக எடுக்க, ட்ரூ லென்ஸ் என்ஜின் 4.0 தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் 50 எம்பி முதன்மை கேமரா இதில் உள்ளது. மேலும், அல்ட்ரா எச்டிஆர், இரவு நேர புகைப்படம் எடுக்கும் வசதி மற்றும் 4கே தரத்தில் வீடியோ பதிவு செய்யும் வசதிகள் இதில் அடங்கும். முன்பக்கத்தில், உயர்தர செல்ஃபிக்கள் மற்றும் தெளிவான வீடியோ அழைப்புகளுக்காக 16 எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. நத்திங் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட க்ளிப்பி லைட் சிஸ்டம் இதில் உள்ளது. இது ஃபோன் சத்தம் இல்லாமலேயே அறிவிப்புகள், கேமரா கவுண்டவுன் மற்றும் முக்கிய நபர்களின் அழைப்புகளுக்கு எனத் தனித்தனியாக ஒளிரும் வசதியை வழங்குகிறது.

மீடியா டெக் டெமின்சிட்டி 7300 ப்ரோ பிராசஸர் மூலம் இந்த ஸ்மார்ட்ஃபோன் இயங்குகிறது. இது விர்சுவல் ரேம் உட்பட மொத்தம் 16 ஜிபி வரை ரேம் வசதியை வழங்குகிறது. மேலும், 2 டிபி வரை சேமிப்புத் திறனை நீடித்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. நாள் முழுவதும் தடையின்றி பயன்படுத்தும் வகையில் 5000 எம்ஏஎச் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை விரைவாக சார்ஜ் செய்ய 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உதவுகிறது. இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான நத்திங் ஓஎஸ்  3.5 இயங்குதளத்தில் செயல்படுகிறது. இந்த ஃபோனுக்கு 3 ஆண்டுகளுக்கான முக்கிய மென்பொருள் புதுப்பிப்புகள் மற்றும் 6 ஆண்டுகளுக்கான பாதுகாப்பு புதுப்பிப்புகள் வழங்கப்படும் என நத்திங் நிறுவனம் உறுதி அளித்துள்ளது

Post a Comment

Previous Post Next Post

Contact Form