பெற்றோர், குழந்தை ஒன்றாக செலவிடும் நேரத்தை உரையாடல் நிறைந்ததாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும் மாற்ற, பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் அடேங்கப்பா கதைகள் 2.0 முன்முயற்சியை மீண்டும் கொண்டு வருகிறது. டேலண்ட்டட் நிறுவனத்தால் கருத்தாக்கம் செய்யப்பட்டு, இம்முறை மேம்படுத்தப்பட்ட ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் இதன் கதைசொல்லல் தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் தமிழ்நாட்டில் உள்ள குடும்பங்கள் தங்கள் வீட்டில் உள்ள அன்றாடப் பொருட்களைப் பயன்படுத்தி வேடிக்கையான கதைகளை உருவாக்க முடியும். இந்த சமீபத்திய முயற்சியானது பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் பகிர்ந்து மேற்கொள்ளும் செயல்பாடுகளை வழங்கி அவர் ஒன்றாக நேரத்தை மகிழ்ச்சியுடன் செலவிட எளிதான வழியை வழங்குகிறது.
உங்களைச் சுற்றியுள்ள எதிலிருந்தும் கதைகள் உருவாகலாம் இத்தளம் நம்புகிறது. குடும்பங்கள் தங்களது இல்லங்களில் ஏற்கனவே உள்ள பொருட்களை ஆராய்ந்து அவற்றைச் சுற்றி கதைகளை உருவாக்க இத்தளம் ஊக்குவிக்கிறது. எந்தவொரு பிரிட்டானியா மில்க் பிகிஸ் பேக்கையும் ஸ்கேன் செய்வதன் மூலம், பெற்றோர்கள் உடனடியாக ஆங்கிலம் அல்லது தமிழில் பிரத்தியேகமான கதைகளை உருவாக்கலாம்; இந்த அனுபவத்தின் ஒரு பகுதியாக பல்வேறு பொருட்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கான எளிய குறிப்புகளும் உங்களுக்கு கிடைக்கும்.
இந்த பதிப்பானது பெற்றோர்களையும் குழந்தைகளையும் தங்கள் படைப்புகளை வீடியோ வடிவில் விளக்கமாக பதிவு செய்ய கோருகிறது. ஒவ்வொரு வாரமும் மிகவும் சுவாரஸ்யமான படைப்புகளுக்கு அற்புதமான பரிசுகளை வெல்வதற்கான வாய்ப்பு உள்ளது, அல்லது ஹாங்காங்கிற்கு ஒரு சுற்றுப்பயணம்* செல்லும் வாய்ப்பும் உள்ளது. இதனால் பெற்றோர்களும் உற்சாகமாக பங்கேற்கும் வகையில் இம்முறை இந்த முன்முயற்சி கதைநேரத்தை உண்மையிலேயே சுவாரஸ்யமாக வழங்குகிறது.
இதன் அறிமுக விளம்பரப் படத்தை இங்கே காணலாம் <https://youtu.be/do3z6JRSROw>
பிரிட்டானியா நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பொது மேலாளர் திரு. சித்தார்த் குப்தா அவர்கள் கூறுகையில், "பல தசாப்தங்களாக, பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் தமிழ்நாட்டில் எண்ணற்ற நபர்களின் குழந்தைப் பருவத்தின் ஒரு மறக்கமுடியாத அங்கமாக இருந்து வருகின்றது. மேலும், ‘அடேங்கப்பா கதைகள் 2.0’ முன்முயற்சியானது அதே பாரம்பரியத்தை ஒரு புதிய வழியில் மேம்படுத்தி வழங்குகிறது. எந்தவொரு சிறப்பு ஏற்பாடுகளோ அல்லது அதிக பிரயத்தனமோ இல்லாமல், வீட்டில் இருந்தவாறே படைப்பாற்றலை ஊக்குவிப்பதற்கான எளிய கருவிகளை தொழில்நுட்பத்தின் மூலம் பெற்றோருக்கு வழங்குவதே எங்கள் நோக்கமாகும். தமிழ்நாட்டுடன் இணைந்து வளர்ந்த ஒரு பிராண்ட் என்ற முறையில், இந்த 2.0 எடிஷன், பல்வேறு குடும்பங்களுக்கு குழந்தைகளுடன் ஒன்றாக செலவிடும் தருணங்களை சிறப்பாக ஏற்படுத்தித் தரும் ஒரு தளத்தை வழங்குகிறது,” என்று தெரிவித்தார்.
பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் தமிழ்நாட்டுடன் நீண்டகாலமாக ஒரு கலாச்சார ரீதியான பிணைப்பைக் கொண்டுள்ளது. மில்க் பிக்கிஸ் ஏற்கனவே தமிழ்நாடு தினத்தை ‘எ பைட் ஆன் தமிழ்நாடு’ மூலம் கொண்டாடியது; ‘அனைவருக்கும்’ மற்றும் ‘ஃபிளாஷ்பேக் பேக்’ போன்ற முன்முயற்சிகள் மூலம் பிராந்திய நுண்ணறிவுகளை சரியாக கண்டறிந்து, மாநிலத்தின் மொழி பெருமையைக் கொண்டாடியது; இவ்வாறு மில்க் பிக்கிஸின் ஒவ்வொரு முன்முயற்சியும் தமிழகத்துடனான அதன் ஆழமான உறவை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.
உங்கள் கதைகளை உருவாக்கு, முதலில் பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் பேக்கில் உள்ள க்யூஆர் கோடினை ஸ்கேன் செய்யவும். கதைகளை உருவாக்க எந்தவொரு வீட்டுப் பொருட்களையாவது ஸ்கேன் செய்யவும். பின்னர் உங்கள் கதையைச் சமர்ப்பித்து, ஒவ்வொரு வாரமும் அற்புதமான பரிசுகளை வெல்லுங்கள் அல்லது ஹாங்காங்கிற்கு ஒரு சுற்றுப்பயணத்தை செல்லும் வாய்ப்பைப் வெல்லு
