லண்டனை மையமாக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான நத்திங் டிசம்பர் 5 முதல் போன்ட் (3ஏ) லைட் மொபைலின் விற்பனையைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் இந்த நத்திங் ஸ்மார்ட்போன் கிளாசிக் பிளாக் மற்றும் ஒயிட் நிறங்களில் மட்டுமில்லாமல் புதிய ப்ளூ நிறத்திலும் அறிமுகமாகிறது. நத்திங் பிரண்டின் சிக்னேச்சர் அம்சமான தெளிவான டிரான்ஸ்பரண்ட் வடிவமைப்பு, 6.77 இன்ச் அமோல்ட் டிஸ்ப்ளே, ட்ரூலென்ஸ் என்ஜின் 4.0 உடன் வரும் 50 எம்பி மெயின் கேமரா, மீடியாடெக் டிமென்ஸிட்டி 7300 புரோ சிப்செட், மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் 8 ஜிபி + 128 ஜிபிரகத்தின் விலை ரூ.20,999 முதல் தொடங்குகிறது, அதுவே வங்கி தள்ளுபடிகளுக்குப் பிறகு ரூ.19,999 ஆக குறையும். போன் (3ஏ) லைட் ஸ்மார்ட்போன் ஃபிளிப்கார்ட், விஜய் சேல்ஸ், குரோமா ஆகிய தளங்களிலும், இந்தியாவில் உள்ள முக்கிய ரீடெயில் விற்பனை நிலையங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.
போன் (3ஏ) லைட் போனில் தண்ணீரிலிருந்து பாதுகாக்கும் ஐபி54 ரெசிஸ்டன்ஸ், அலுமினிய உட்புற ஃபிரேம் மற்றும் இலகுவான எடையுடன்உருவாகப்பட்டுள்ளது. நத்திங்கின் அழகிய டிரான்ஸ்பரண்ட் தோற்றத்தினை தொடர்கிறது. இது 120 எச்இசட் அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3000 நீட்ஸ் அதிகபட்ச எச்டிஆர் பிரைட்னஸ் கொண்ட 6.77-இன்ச் ஃப்லெக்ஸிபில் அமோல்ட் டிஸ்ப்ளேவுடன் வருகிறது.
இந்த போனில் ட்ரூலென்ஸ்இன்ஜின் 4.0 அம்சத்துடன் கூடிய 50 எம்பி மெயின் கேமரா உள்ளது; அதில் அல்ட்ரா எச்டிஆர், நைட் மோடு மற்றும் 30 எப்பிஎஸ் 4கே வீடியோ பதிவு செய்வது உள்ளிட்ட வசதிகள் உள்ளன. 16 ஏம்பி முன்புற கேமராவில் உயர்தர செல்ஃபி எடுப்பது மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளலாம்.இதில் உள்ள நத்திங் உருவாக்கிய கிளிஃப் லைட் சிஸ்டம் பயனுள்ள நோட்டிஃபிகேஷன்கள், கேமரா கவுண்டவுன் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட காண்டாக்ட் குறித்த தகவல்களை காண்பிக்கிறது.
மீடியாடெக் டெமென்சிட்டி 7300 புரோ மூலம் இயக்கப்படும், இந்த ஸ்மார்ட்போனில் 16 ஜிபி ரேம் (விர்ச்சுவல் ரேம் உடன் சேர்த்து) மற்றும் 2 டிபி வரை விரிவாக்கம் செய்துகொள்ளக் கூடிய ஸ்டோரேஜ் வசதி ஆகியவற்றை வழங்குகிறது. நம்பகமான ஒரு முழு நாள் பயன்பாட்டிற்காக 5000 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கிடைக்கிறது. இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 15-ஐ அடிப்படையாகக் கொண்ட நத்திங் ஓஎஸ் 3.5-இல் இயக்குகிறது, 3 வருட முக்கிய அப்டேட்கள் மற்றும் 6 வருட பாதுகாப்பு சார்ந்த அப்டேட்களுக்கான உத்திரவாதத்துடன் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம்.
%20Lite%20Image.jpg)