இந்தியாவின் முதலாவது மற்றும் நம்பகமான நேரடி விற்பனை, இணையதள மற்றும் தொலைபேசி ஆர்டர் மூலமான விற்பனை என பலதரப்பட்ட விற்பனை முறைகளின் மூலம் மின்னணு பொருட்கள் (எலக்ட்ரானிக்ஸ்) மற்றும் சில்லறை விற்பனை நிறுவனமான டாடா குழுமத்தின் க்ரோமா, அனைத்து எலக்ட்ரானிக் பொருள்கள் மீதும் அற்புதமான சலுகைகளுடன் பிளாக் ஃப்ரைடே விற்பனையை தொடங்கியுள்ளது.
க்ரோமா கடைகளிலும் அதன் வலைத்தளத்திலும் நவம்பர் 18 முதல் பல்வேறு வகையான எலக்ட்ரானிக் பொருள்கள், வீட்டு உபயோக பொருள்கள், கணினி, ஸ்மார்ட் டிவிக்கள் ஆகியவற்றின் மீது தடையற்ற சலுகைகளுடன் விற்பனையை தொடங்கியுள்ளது. கடைகளில் பரபரப்பான ஷாப்பிங் விற்பனை நவம்பர் 25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரையில் காலை தொடங்கி நள்ளிரவு வரை நீடிக்கும். வங்கி சலுகைகள் நவம்பர் 25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை ஹெச்டிஎப்சி கிரெடிட் கார்டு மீது உடனடி சலுகையாக ரூ.5,000 வரையிலும், எளிதாக பெறக்கூடி மாதந்திர தவணை திட்டத்திலும் கிடைக்கும்.
கடைகளில் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு க்ரோமா மூன்று விதமான சலுகைகளை அறிமுகம் செய்துள்ளது. பிளாக் 7சதவிகிதம், கிரே 5 சதவிகிதம், மற்றும் ஒயிட் 3 சதவிகிதம் தள்ளுபடியை குலுக்கல் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்குகிறது. கடைகளில் குறைந்தபட்சமாக ரூ.10000 - க்கு பொருட்கள் வாங்குபவர்களுக்கு அதிகபட்சமாக கிடைக்கக் கூடிய ரூ.2500 - க்கான பரிசு குலுக்கல் கூப்பன்களை நவம்பர் 25-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை மட்டுமே கடைகளில் பொருட்களாக மாற்றி கொள்ள இயலும். க்ரோமாவின் சமூக ஊடக பக்கங்களில் ஆன்லைன் மூலம் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கூப்பன்கள் கிடைக்கும். குறைந்தபட்சமாக ரூ. 5000- க்கு பொருட்கள் வாங்குபவர்களுக்கு அதிகபட்சமாக கிடைக்கக் கூடிய ரூ.2500- க்கு கிடைக்கும் பரிசு கூப்பன்களை கடைகளிலும் ஆன்லைனிலும் பொருட்களாக மாற்றி கொள்ளலாம்.
முன் எப்போதும் கண்டிராத வகையில் , ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் ஐஎன்டி மணி உடன் கூட்டு சேர்ந்து க்ரோமா வழங்கும் பரிசு கூப்பன்களை நிச்சயமாக பெறலாம். குறைந்தபட்ச நிதி வரம்பின்றி, ஐஎன்டி மணியின் புதிய வாடிக்கையாளர்கள் ரூ.1000 மதிப்புள்ள கூகுள் பங்குகளைப் பெறுவார்கள். ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் மீண்டும் முதலீடு செய்பவர்கள் ரூ.500 மதிப்புள்ள கூகுள் பங்குகளை ஐஎன்டி மணியிடமிருந்து பெறுவார்கள். அது மட்டுமின்றி, இந்த விளம்பர கால கட்டத்தில் அதிகம் ஷாப்பிங் செய்த முதல் 20 வாடிக்கையாளர்களுக்கு மிக பெரிய அளவில் அவர்களை பாராட்டும் விதமாக ரூ.9999 மதிப்புள்ள கூகுள் அல்லது ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகளை பெறுவார்கள். அதே வேளையில், அவர்களில் அதிகம் ஷாப்பிங் செய்த முதல் நபர் ஜாக்பாட்டாக ரூ. 1 லட்சம் மதிப்புள்ள கூகுள் பங்குகளை பெற்று வீட்டுக்கு செல்லலாம்.
ஆப்பிள் மேக் புக் -இன் விலை பரிமாற்ற போனஸ் சலுகைகள் உள்பட ரூ.56990 தொடங்கி, ஹெச்டிஎப்சி வங்கி சலுகைகளுடனும் கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி வாட்ச் 4 கிளாசிக் - இன் விலை ரூ.37,999 லிருந்து ரூ.15,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதே போல, ஆப்பிள் ஐபோன் 12 இன் விலை ரூ.58,990 வரையிலும் சரிந்துள்ளது. க்ரோமா புளூடூத் ஸ்பீக்கர்களின் தொடக்க விலையாக ரூ.699 இலும், போட் புளூடூத் நெக்பாண்ட்-களின் தொடக்க விலையாக ரூ.899 இலும் தொடங்கி கிடைக்கிறது.லேப்டாப் மற்றும் பிரிண்டர்களுக்கு 40 சதவிகிதம் வரையிலும் கவர்ச்சிகரமான சலுகைகளை அளிக்கிறது. சமையலறை பொருட்களுக்கு மிகப் பெரிய சலுகையாக 60 சதவிகிதம் வரையில் கிடைக்கிறது. அதே போல, வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 45 சதவிகிதம் வரையிலும், ரெப்ஜிரேட்டர்கள், வாஷிங் மெஷின்கள் ஆகியவற்றுக்கு 40சதவிகிதம் வரையிலும் கூட தள்ளுபடி உண்டு என க்ரோமா செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
Tags
Business