மதுரைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ‘ஆகி’

 


ஓடிப் பிடித்து சேஸ் செய்வதில் நம்பர் 1 காமெடியான ஆகி அண்ட் தி காக்ரோச்சஸ் கார்ட்டூனில் வரும் உங்களுக்குப் பிடித்தமான ஆகி, எக்கச்சக்க மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்குடன்  “ஆகியின் இந்திய சுற்றுப்பயணம்” மூலமாக உங்களைச் சந்திக்க உங்கள் நகருக்கே வரும் இந்த ஆண்டிற்கான நேரம் வந்துவிட்டது. ரசிகர்களுக்கு தனித்துவமான ஒரு அனுபவத்தினை வழங்கும் இந்த நிகழ்வின் மூலம் அவர்கள் ரசித்து மகிழ்ந்த கார்ட்டூன் கதாபாத்திரத்தின் துறுதுறுப்பான வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை கொஞ்சம் காண முடியும்.

இந்த சுற்றுப்பயணத்தின் மூலமாக, ரசிகர்கள் பல்வேறு எபிஸோடுகளின் பிரத்தியேக முன்னோட்டத்தைக் காணலாம். இதனோடு ஆச்சரியம் முடியவில்லை. கொண்டாட்டத்தில் நீங்கள் குதூகலமான கேம்ஸ் விளையாடலாம், வினாடிவிடை போட்டிகளில் பங்கேற்கலாம், மற்றும் அற்புதமான யே! மெர்ச்சன்டைஸ்களை வெல்லும் வாய்ப்பினையும் பெறலாம்.வரும் நவம்பர் 26, 27 அன்று மதுரைக்கு வருகை தரவுள்ளதாக ஆகி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form