மதுரையை வலம் வந்த கார்ட்டூன் கேரக்டர் ஆகி


ஓடிப் பிடித்து சேஸ் செய்வதில் நம்பர் 1 காமெடியான ஆகி அண்ட் தி காக்ரோச்சஸ் கார்ட்டூனில் வரும் உங்களுக்குப் பிடித்தமான ஆகி, எக்கச்சக்க மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்குடன்  “ஆகியின் இந்திய சுற்றுப்பயணம்” மூலமாக  மதுரைக்கு வந்தது. மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆகியை ஏராளமான ரசிகர்கள் வரவேற்று மகிழ்ந்தனர்.

ரசிகர்களுக்கு தனித்துவமான ஒரு அனுபவத்தினை வழங்கும் இந்த நிகழ்வின் மூலம் அவர்கள் ரசித்து மகிழ்ந்த கார்ட்டூன் கதாபாத்திரத்தின் துறுதுறுப்பான வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை ரசிகர்கள் கண்டுகளித்தனர்.

இந்த சுற்றுப்பயணத்தின் மூலமாக, ரசிகர்கள் பல்வேறு எபிஸோடுகளின் பிரத்தியேக முன்னோட்டத்தை பார்த்தனர். மேலும் ஆகியுடன் குதூகலமான விளையாட்டுகள், வினாடி விடை போட்டிகளில் பங்கேற்று மகிழ்ந்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு அற்புதமான யே! மெர்ச்சன்டைஸ்களை வென்றனர், என்று சோனி செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form