பிரிட்டானியா நியூட்ரிசாய்ஸ் அறிமுகப்படுத்தும் புதிய குக்கீஸ்



இந்தியாவின் முன்னணி பிஸ்கட் பிராண்டுகளில் ஒன்றான பிரிட்டானியா நியூட்ரிசாய்ஸ், நல்ல விஷயங்களைத் தேர்ந்தெடுப்பது குறித்து ஒரு புதிய உரையாடலை ஊக்குவிக்க இதுபோன்ற அன்றாட தருணங்களைப் பயன்படுத்துகிறது. இதன் மையக்கருத்து ‘ஒரு நல்ல விஷயத்தைத் தேர்வு செய்வதன் மூலம் அடுத்த விஷயத்தை எளிதாக்க முடியும்’ என்ற நம்பிக்கையே ஆகும். இது, சிறிய முடிவுகள் அன்றைய நாள் முழுவதிலும்ம் எப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை வெளிப்படுத்தும் ஒரு எளிய சிந்தனையாகும். இந்த சிந்தனையை உயிர்ப்பிக்கும் விதமாக பிராண்ட் தூதுவராக அமீர் கான் இந்த விளம்பரப் பிரச்சாரத்திற்கு அவரது வசீகரத்தையும் அனாயசமான நகைச்சுவை உணர்வையும் சேர்த்துள்ளார்.

லோவ் லிண்டாஸால் நிறுவனத்தால் கருத்தாக்கம் செய்யப்பட்ட இந்த பிரச்சாரம் ஒரு தருணம் என்பதைக் கடந்து அதன் தாக்கத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கிறது, அதாவது நாம் தேர்ந்தெடுக்கும் ஒரு நல்ல தேர்வானது மனநிலையில் எவ்வாறு ஒரு நல்ல மாற்றத்திற்கு வழிவகுக்கிறது என்பதை அழகாக காட்டுகிறது. ஒரு நல்ல தேர்வு எவ்வாறு உத்வேகத்தை உருவாக்க முடியும் என்பதை இதில் வரும் காட்சிகள் எடுத்துக்காட்டுகின்றன, அடுத்தடுத்த முடிவுகளை மிகவும் சிரமமின்றி மற்றும் உள்ளுணர்வுடன் மேற்கொள்ள உதவுகின்றன. வாழ்க்கையோடு தொடர்புடைய இயல்பான சூழ்நிலைகள் மூலமாகவும், படத்தில் அமீரின் எளிமையான இயல்பின் மூலமாகவும், ஒரு ஒரு சிறிய நல்ல விஷயத்தை தேர்ந்தெடுப்பது அன்றாட தீர்மானங்களை எவ்வாறு எளிதாக மேற்கொள்ள உதவுகிறது என்பதை இந்த விளம்பரப் பிரச்சாரம் வலியுறுத்துகிறது.

பிரிட்டானியா நியூட்ரிசாய்ஸ் இன்று பல்வேறு ஸ்நாக்ஸ் வகைகளை பல்வேறு விருப்பங்களுக்கு ஏற்ப குக்கீகளை தயாரித்து வழங்குகிறது. இந்த போர்ட்ஃபோலியோவில் 100% ஆட்டா மற்றும் மைதா* இல்லாத நியூட்ரிசாய்ஸ் டைஜஸ்டிவ் மற்றும் நியூட்ரிசாய்ஸ் ஓட்ஸ், மில்லெட் என்கிற புத்துணர்ச்சி நிறைந்த பேக்கில், இப்போது சிறுதானிய மாவில் தாயரிக்கப்பட்ட மூன்று சுவைகளில் கிடைக்கிறது.

இந்த போர்ட்ஃபோலியோவை அடிப்படையாகக் கொண்டு, பிரிட்டானியா நியூட்ரிசாய்ஸ் அதன் சமீபத்திய ரகமான 100% மில்லட்ஸ்*, ஆப்பிள் சின்னமன் சுவையில் புதிய குக்கீகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. 100% சிறுதானிய மாவில்* தயாரிக்கப்பட்ட இதில் சோளத்தை முக்கிய தானியமாக உள்ளதால், நல்ல மூலப்பொருட்களுடன் அன்றாட தின்பண்டங்களை விரும்பும் நுகர்வோருக்கு குக்கீகள் ஒரு மொறுமொறுப்பான, சுவை நிறைந்த அனுபவத்தை வழங்குகின்றன. இந்த குக்கீயில் ஃபாக்ஸ்டெயில் (குதிரைவாலி) மற்றும் கேழ்வரகு மாவு ஆகியவற்றின் நன்மைகளும் உள்ளன. இதன் செய்முறையில் சர்க்கரை, மைதா மற்றும் பாமாயில் சேர்க்கப்படவில்லை என்பதால், ஒரு எளிய மற்றும் நலம் சார்ந்த சிந்தனையில் உற்பத்தி செய்யப்படும் இந்த குக்கீஸ் ஒரு சௌகரியமான சிற்றுண்டி தேர்வாக இருக்கும். 100 கிராம் பேக் ரூ.55 என்ற விலையில் இந்த குக்கீகள் அனைத்து புதிய டிரேடு ஸ்டோர்கள் மற்றும் முக்கிய பெருநகரங்களில் உள்ள முன்னணி க்யூ-காமர்ஸ் தளங்களிலும் கிடைக்கின்றது.

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவின், பொது மேலாளர் சித்தார்த் குப்தா கூறுகையில், "பிரிட்டானியா நியூட்ரிசாய்ஸை பொருத்தவரை நல்ல தேர்வுகள் பெரும்பாலும் சிறிய தீர்மானங்களுடன் தொடங்குகின்றன என்பதை நாங்கள் நம்புகிறோம்; மேலும், அதைத் தொடர்ந்து வரும் மற்ற விஷயங்களிலும் அந்த எளிய தேர்வுகள் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இதைத்தான் 'ஒரு நல்ல விஷயத்தை தேர்வு செய்வது அடுத்த விஷயத்தை எளிதாக்குகிறது,'  என்ற புதிய முன்மொழிவாக நாங்கள் கூறுகிறோம்,  என்று கூறினார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form