இந்தியாவின் மிகப்பெரிய வீட்டுமனைத் திட்ட மேம்பாட்டு நிறுவனமாக முன்னணி வகிக்கும் ஜி ஸ்கொயர் குழுமம், கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஒரு சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள தங்களது ப்ரீமியம் வில்லா மனைகளை வாங்குபவர்களுக்கு முத்திரைத் தீர்வை கட்டணத்தில் (ஸ்டாம்ப் டூட்டி) 50% தள்ளுபடி சலுகை வழங்கப்படுகிறது.
இந்தக் குறுகிய காலச் சலுகையானது, டிசம்பர் 31, 2025 வரை செய்யப்படும் வில்லா மனை முன்பதிவுகளுக்கு மட்டுமே பொருந்தும். வாடிக்கையாளர்கள் தங்களின் கனவு இல்லத்தைக் கட்டும் முயற்சியில் அடுத்த அடியை எடுத்து வைப்பதை ஊக்குவிக்கவும், ப்ரீமியம் நில உரிமையை மக்களுக்கு மிகவும் எளிதாகக் கிடைக்கச் செய்வதையுமே நோக்கமாகக் கொண்டு இச்சலுகையை ஜி ஸ்கொயர் குழுமம் அறிவித்துள்ளது.
ஜி ஸ்கொயர் குழுமம் வழங்கும் சலுகையின் முக்கிய அம்சங்கள் - முக்கிய நகரங்களில் இடங்கள்: சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி, மதுரை மற்றும் மிக வேகமாக வளர்ந்து வரும் பிற முக்கிய நகரங்களிலும் அமைந்துள்ள ஜி ஸ்கொயர் குழுமம், மிக கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வீட்டுமனைத் திட்டங்களில் இருந்து வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த இடத்தைத் தேர்வு செய்யலாம். கவர்ச்சிகரமான விலை வரம்பு: ரூ.4.5 லட்சம் முதல் ரூ.3 கோடி வரை என வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கும், விருப்பங்களுக்கும் ஏற்ற வகையில், பலவிதமான பட்ஜெட்டுகளுக்கு ஏற்றவாறு மனைகள் விற்பனைக்கு உள்ளன. இது முதல் முறை வீடு வாங்குபவர்கள், வீடு கட்ட விரும்புவோர் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்கள் என அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.
முத்திரைத் தீர்வை கட்டணத்தில் 50% தள்ளுபடி என்ற அதிரடி அறிவிப்பு குறித்து ஜி ஸ்கொயர் குழுமம் நிறுவனத்தின் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான பாலா ராமஜெயம் கூறுகையில், "பண்டிகைக் காலம் என்பது புதிய தொடக்கங்களுக்கான அற்புதமான நேரமாகும். இந்த 50% முத்திரைத் தீர்வை கட்டணச் சலுகையின் மூலம், குடும்பங்களும் முதலீட்டாளர்களும் ப்ரீமியம் வில்லா மனைகளை மிகச் சிறந்த மதிப்பில் வாங்குவதை நாங்கள் எளிதாக்குகிறோம். ஜி ஸ்கொயர் குழுமம், ஒவ்வொருவரின் வீடு வாங்கும் கனவையும், நிலத்தின் முழு உரிமையுடன் சொந்தமாக்குவதே எங்களது நோக்கமாகும்.. இதன் மூலம் ஏராளமான குடும்பங்கள் உண்மையான நில உரிமையாளர்களாக மாறுவதற்கான முதல் படியை எடுத்து வைக்க நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம்." என்றார்.
நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மை இவை இரண்டுக்கும் முன்னுரிமை என்ற அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஜி ஸ்கொயர் குழுமம், வீட்டுமனைத் திட்டங்களில் நம்பிக்கைக்குரிய ஒரு ப்ராண்டாகத் திகழ்கிறது. வில்லங்கமற்ற தெளிவான பத்திரங்கள், கட்டுமானத்திற்குத் தயாராக உள்ள மனைகள் மற்றும் அத்தியாவசிய உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளுடன் கூடிய நன்கு திட்டமிடப்பட்ட சமூகங்களை வழங்குவதில் இந்நிறுவனம் முன்னணி வகிக்கிறது.