ரக் உற்சவ் 2025

 


கைவினை திறனுக்கும் சமூகப் பொறுப்புக்கும் உலகளவில் முன்னுதாரணமாக விளங்கும் ஜெய்ப்பூர் ரக்ஸ், கலை, பண்பு, தாக்கம் ஆகியவற்றின் சிறப்பான கொண்டாட்டமான ரக் உற்சவ் விழாவின் துவக்கத்தை செப்டம்பர் 3 ஆம் தேதி பெருமையுடன் அறிவிக்கிறது. இந்த ஆண்டு 14,000 கையால் நெய்யப்பட்ட கம்பளைகளின் அற்புதமான தொகுப்பு இந்திய நெய்தல் பாரம்பரியத்தின் ஆன்மாவையும், நவீன வடிவமைப்பையும் ஒருங்கே வெளிப்படுத்துகிறது. ரக் உற்சவ் 2025-ஐ ஜெய்ப்பூர் ரக்ஸ் நிறுவனத்தின் டெல்லி, மும்பை, சென்னை, ராய்ப்பூர், ஜெய்ப்பூர், குஜராத், பெங்களூரு ஆகிய நகரங்களில் உள்ள முக்கியக் கடைகளிலும், அதேபோல் ஜெய்ப்பூர் ரக்ஸ் இணையதளத்திலும் அனுபவிக்கலாம்.

இந்த ஆண்டின் தொகுப்பில் ஆலம், ஜெனிசிஸ், சவானா, கான்கோக்சன், டா ஹாஸ், வொண்டர்கமெர், கலிடியோ, க்லான், பேசிஸ், லகூனா, எர்ப், இன்டஸ்பார், நோமாடிக் திரட்ஸ், அகர், மற்றும் கன்டோர் போன்ற பிரபல வரிசைகள் இடம்பெற்றுள்ளன. மேலும், கிராமப்புற கலைஞர்களின் கற்பனை உலகிலிருந்து நேரடியாக உருவான, தனிப்பட்ட கதைகளைச் சொல்லும் 200க்கும் மேற்பட்ட விருதுபெற்ற மஞ்சாஹா கம்பளைகளும் சிறப்பாகக் காட்சிப்படுத்தப்படுகின்றன. 2,000 பழமையான கம்பளைகள் (30-50 வருடங்கள் பழமை) மற்றும் 250 பண்டைய கம்பளைகள் (100 ஆண்டுகள் மேற்பட்டவை). இது போன்ற விரிவான கம்பளைக் காட்சிகள் உலகிலேயே அரிதாகும். உலகளாவிய வர்த்தக மாற்றங்களும், ஏற்றுமதி வரிவிதிப்புகளும் அதிகரிக்கும் சூழலில், ஜெய்ப்பூர் ரக்ஸ் வாடிக்கையாளர்களுக்காக முதல்முறையாக 60% வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட, வடிவமைப்பாளர்களால் உருவாக்கப்பட்ட கம்பளைகள் பலருக்கும் எளிதில் அணுகக்கூடியதாகின்றன.

“ரக் உற்சவ் என்பது ஒரு வடிவமைப்பு காட்சியே அல்ல - இது கண்ணியம், மரபு, குறிக்கோள் ஆகியவற்றின் பிரதிபலிப்பு,” என ஜெய்ப்பூர் ரக்ஸ் இயக்குநர் யோகேஷ் சௌதரி கூறினார். “இவ்வாறு மாபெரும் படைப்புகளை முன்னெப்போதும் இல்லாத விலையில் வழங்குவதன் மூலம், உலகம் முழுவதும் உள்ள வீடுகளுக்கு கலை கொண்டு செல்வதோடு, அதை உருவாக்கும் கலைஞர்களை நேரடியாக ஆதரிக்கிறோம்.”

ஒவ்வொரு ரக் உற்சவ்க்கும் ஒரு சமூக நோக்கம் இணைக்கப்பட்டிருக்கும். 2025 இல், வருவாய் கிராமப்புற நெய்தல் பகுதிகளில் சுகாதாரமும் தூய குடிநீரும் ஏற்படுத்தும் பணிகளுக்கு பயன்படுத்தப்படும். இதன் மூலம் ஆயிரக்கணக்கான நெய்தல் கலைஞர்களும், அவர்களின் குடும்பங்களும் பயன்பெறுவார்கள்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form