முன்னணி தனியார் மருத்துவக் காப்பீட்டு நிறுவமான ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ், அதன் புதிய கிளையை திருச்சி கே.கே. நகர் பகுதியில் திறந்து வைத்தது. தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு புதிய கிளையை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் ஜி.வி.என் மருத்துவமனைத் தலைவர் டாக்டர் வி.ஜே.செந்தில், திஷா கண்காணிப்பு குழு உறுப்பினர் டாக்டர் சுப சோமு, மற்றும் மண்டலத் தலைவர் அசோக்.ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
கிளை திறப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் கே.என்.நேரு, “ஸ்டார் ஹெல்த் கிளைகள் மக்கள் வசதிக்காக திறக்கப்படுவதால், இனி மருத்துவக் காப்பீட்டுச் சேவைகளை இலகுவாக பெறலாம்” எனக் குறிப்பிட்டு, நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், மாநிலம் முழுவதும் இத்தகைய கிளைகள் அதிக அளவில் திறக்கப்பட வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
விழாவில் பேசுகையில் வணிகத் தலைவர் பாலாஜிபாபு.சி, "ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் கடந்த வருட வணிக வளர்ச்சி, தீர்க்கப்பட்ட க்ளைம்ம்கள், ஏஜென்ட்களின் எண்ணிக்கை, நெட்வொர்க் மருத்துவமனைகளின் விரிவாக்கம், வாடிக்கையாளர் மையமாக்கப்பட்ட நலவாழ்வு திட்டங்கள் மற்றும் வருங்கால வளர்ச்சி திட்டங்களைப் பற்றிய சுருக்கமான விளக்கம் அளித்தார். குறிப்பாக, திருச்சி மண்டலத்தில் நடப்பு நிதியாண்டில் ரூ. 11,00,00,000 (11 கோடி) புதிய வணிகமும், 5,557 பாலிசி கிளைம்ம்களின் மூலம் ரூ. 41,24,10,045 (41 கோடி) கிளைம் தொகையும் வழங்கி, மாபெரும் மருத்துவ சேவை செய்து வருகிறது. இந்தச் சிறு உரை பலரையும் வசீகரித்து, விழாவின் முக்கிய அம்சமாக அமைந்தது. வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு, அவர்களுக்கு எளிமையாக கிளை வாயிலாக சேவை வழங்குவதே ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் முக்கிய நோக்கம்” எனறு அவர் மேலும் கூறினார்.
விழாவின் நிறைவாக மண்டலத் தலைவர் அசோக்.ரா நன்றி கூறினார்.
புதிய கே.கே. நகர் கிளையின் திறப்புடன், திருச்சி மக்களுக்கு இனி மருத்துவக் காப்பீட்டு சேவைகள் மேலும் நெருக்கமாகவும், நம்பிக்கையுடன் அணுகக்கூடியதாகவும் இருக்கும் என்று ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் தெரிவித்துள்ளது.