டிவிஎஸ் அபாச்சி 20 ஆண்டு விழா



இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனப் பிரிவில் உலகளாவிய முன்னணி நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், தனது முதன்மை மோட்டார் சைக்கிளான டிவிஎஸ் அபாச்சியின் கம்பீரமான 20 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் லிமிடெட் எடிஷன் வேரியண்ட்களை அறிமுகப்படுத்துகிறது.  டிவிஎஸ் அபாச்சியின் அனல் பறக்கும் வாகன வரிசையான டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் 160, 180, 200 மற்றும் டிவிஎஸ் அபாச்சி ஆர்ஆர்310 மற்றும் ஆர்டிஆர் 310 ஆகியவற்றில் வரையறுக்கப்பட்ட பதிப்பு வகைகளை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் களமிறக்குகிறது. மேலும் இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் மோட்டார் சைக்கிள்களுக்கான வரையறையை மாற்றியமைக்கும் வகையில் டாப் லைன் வாகனங்களாக ஆர்டிஆர் 160 4வி மற்றும் ஆர்டிஆர் 200 4வி ஆகிய இரண்டும் அசத்தலான அம்சங்களுடன் வெளிவருகின்றன. இந்த லிமிடெட் எடிசன் பைக்குகள் ரூ. 1,24,970 முதல் ரூ.3,37,00 வரையிலான விலைகளில் (எக்ஸ் ஷோரூம் டெல்லி) கிடைக்கின்றன.

குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வரும் இந்த பிரத்தியேக பதிப்பு வரிசையில் தனித்துவமான கருப்பு - ஷாம்பெயின் - தங்க நிற லிவரி, டுயல் டோன் அலாய் வீல்கள் மற்றும் யுஎஸ்பி சார்ஜர் மற்றும் இன்னும் பல புதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் இந்த லிமிடெட் எடிஷன், இருசக்கர சாகச பிரியர்களுக்கான அடையாளமாக கவனத்தை ஈர்க்கும்.

புதிய 4வி வகை வாகனங்கள், தற்போதுள்ள டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் 160 மற்றும் 200 வரிசையின் உச்ச செயல்திறனையும், கம்பீரத்தையும் வெளிப்படுத்தும் வாகனங்களாக அறிமுகமாகியுள்ளன. எல்இடி டிஆர்எல்களுடனான கிளாஸ் - டி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப், முழுவதும் எல்இடி-யினால் ஆன விளக்குகள், 5 அங்குல இணைக்கப்பட்ட டிஎப்டி கிளஸ்டர், இழுவை கட்டுப்பாட்டு அமைப்பு, கம்பீரமான புதிய வண்ணங்கள் மற்றும் அசத்தலான கிராபிக்ஸ் ஆகியவற்றைக் கொண்ட அதிநவீன அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த நவீன மேம்பாட்டு அம்சங்கள்  டிவிஎஸ் அபாச்சி ரைடர்கள் அதிநவீன பாதுகாப்பு,  இணைப்பு தொழில்நுட்பம் வசதி மற்றும் அபாரமான செயல்திறன் ஆகியவற்றை வாகனம் ஓட்டுபவர்கள் பெறுவதை உறுதி செய்கின்றன. இதனால் உலகெங்கிலும் பரவலாக உள்ள 80 நாடுகளில் 6.5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் அதிக விருப்பத்திற்குரிய இருசக்கர வாகன ப்ராண்டாக டிவிஎஸ் அபாச்சி உருவெடுத்துள்ளது.

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கே.என். ராதாகிருஷ்ணன் தனது செய்தியில், “உலகெங்கிலும் உள்ள 6.5 மில்லியன் வலுவான டிவிஎஸ் அபாச்சி சமூகத்திற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்கள் டிவிஎஸ் அபாச்சி கொண்டிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையும், ஆர்வமும்தான்  எங்கள் பயணத்தை உத்வேகமுள்ளதாக மாற்றியிருக்கின்றன. உச்ச செயல்திறன் மற்றும் அட்ரினலின் சுரக்க செய்யும் வேகம் மீதான அவர்களின் அன்பு, டிவிஎஸ் அபாச்சி - ஐ உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்போர்ட்ஸ் மோட்டார் சைக்கிள் பிராண்டுகளில் ஒன்றாக உருவெடுக்க வைத்திருக்கிறது. இந்த மைல்கல் தருணம் எங்கள் பொறியாளர்கள், வடிவமைப்பாளர்கள், தொழிற்சாலை குழுக்கள், டீலர்கள், சப்ளையர்கள் மற்றும் பங்குதாரர்கள் என டிவிஎஸ்எம் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் சொந்தமானது. இவர்கள்தான் ஒவ்வொரு நாளும் புதுமையின் வரம்புகளை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்கிறார்கள். நாங்கள் இனிவரும் காலத்தை எதிர்கொள்வதில்,  புதிய வாகனப் பிரிவுகளில் நுழைவதன் மூலமும், இன்னும் அதிக சந்தைகளில் செயல்பாடுகளை விரிவுப்படுத்துவதன் மூலமும், அடுத்த தலைமுறை ரைடர்களை ஊக்குவிக்கும் சமூகங்களை உருவாக்குவதன் மூலமும் அப்பாச்சி மரபை முன்னோக்கி எடுத்து செல்வோம்’’  என்று குறிப்பிட்டுள்ளார்.

 இந்த மைல்கல் குறித்து கருத்து தெரிவித்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பிரீமியம் - பிஸினெஸ் பிரிவுத்தலைவர் திரு. விமல் சம்ப்லி, “இருபது ஆண்டுகளாக, டிவிஎஸ் அபாச்சி உயர் செயல்திறன் மற்றும் நவீனத்துவத்தின் புதுமை ஆகிய இரண்டு அம்சங்களின் முன்னோடியாக இருந்து வருகிறது, மேலும் இந்த மைல்கல்லை தங்களது பயணத்தின் ஒரு பகுதியாக மாற்றிய ஒவ்வொரு ரைடருக்கும் இந்த வெற்றி சொந்தமானது. டிவிஎஸ் அபாச்சியின் ரேசிங் பாரம்பரியத்தின் 20 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், அடுத்த தலைமுறை மோட்டார் சைக்கிள் ப்ரியர்களை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பிரத்தியேக ஆண்டு பதிப்பை இப்போது அறிமுகப்படுத்துகிறோம். இந்த சாதனை முழுவதும் டிவிஎஸ் அபாச்சி குடும்ப கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாகும்.” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form