கம்பம், தேனியில் ஜி ஸ்கொயர் வில்லா மனைத் திட்டம் அறிமுகம்

 



இந்தியாவின் மிகப்பெரிய வீட்டுமனைத் திட்ட மேம்பாட்டுநிறுவனமான ஜி ஸ்கொயர், கம்பம், தேனியில் ’ஜி ஸ்கொயர் கோல்டன் ஏக்கர்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இது வாடிக்கையாளர்கள் செளகரியமான வில்லா கட்டுவதற்கான பிரத்தியேக திட்டமாகும்.  கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஜிஸ்கொயர்கோல்டன் ஏக்கர் வில்லா மனைத்திட்டம், குடும்பங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு போக்குவரத்து உட்பட அனைத்து வசதிகளையும் எளிதில் பெறக்கூடிய  வகையில், நன்கு இணைக்கப்பட்ட,அதேநேரம் மனதிற்கு நிம்மதி அளிக்கும் அமைதியான இடத்தில் நிலத்தை சொந்தமாக்க ஒரு அட்டகாசமான வாய்ப்பை வழங்குகிறது. மேலும் இத்திட்டத்தில் நவீன உள்கட்டமைப்புடன் செளகரியமான வாழ்க்கை முறையை அளிக்கும் வகையில்வில்லாமனைகள் இடம்பெற்றுள்ளன.

26.24 ஏக்கர் பரப்பளவில் மிகப்பிரம்மாண்டமாக பரந்து விரிந்துள்ள இந்த திட்டத்தில், ஒட்டுமொத்தமாக 503 மனைகள் இருக்கின்றன.  இதில் 494 குடியிருப்புக்கான வில்லா மனைகள் உள்ளன. இவை1.3 சென்ட் முதல் 7.5 சென்ட் வரையிலான மனைகளாக கிடைக்கின்றன. முதலில் முன்பதிவு செய்யும் 25 வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான ஆரம்பகால விலையாக ஒரு சென்ட்ரூ.4.5 லட்சத்தில் தொடங்குகிறது. மேலும், ஒன்பது மனைகள் 7.27 சென்ட் முதல் 27.92 சென்ட் வரையில் இருக்கின்றன. இவை வணிகப் பயன்பாட்டுக்கான பிரிவைச் சேர்ந்தவை. இவற்றின் விலை சென்ட்டுக்கு 8 லட்சத்திலிருந்து ஆரம்பித்து 8.25 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையுடன் மிக நெருங்கிய வகையில் ஜி ஸ்கொயர் கோல்டன் ஏக்கர் திட்டம் இணைக்கப்பட்டிருக்கிறது. இதனால் வளர்ச்சியடையும் குடியிருப்பு திட்டமாகவும், நீண்ட கால முதலீட்டுக்கான ஒரு அருமையான சொத்தாகவும் ஒரே நேரத்தில் இரு பலன்களை அளிக்கிறது.  மேலும், கம்பம், தேனி மாவட்டத்தில் இத்திட்டம்மிக வேகமாக வளர்ச்சிக்கண்டு வரும்பகுதியாக முக்கியத்துவம் பெற்று வருகிறது.

டிடிசிபி மற்றும் ஆர்இஆர்ஏவினால் அங்கீகரிக்கப்பட்ட ஜி ஸ்கொயர் கோல்டன் ஏக்கர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே வாடிக்கையாளர்களிடமிருந்து அமோகமாக வரவேற்பு இருந்து வருகிறது. இதையடுத்து ஏராளமான முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளன. இது கம்பம், தேனி போன்ற வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் மிகவும் பாதுகாப்பான, நன்கு திட்டமிடப்பட்ட குடியிருப்பு சமூகங்களுக்கான அதிகரித்து வரும் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த வெற்றிகரமான நிகழ்வைக் குறிக்கும் வகையில், ஜி ஸ்கொயர் செப்டம்பர் 7- ம் தேதி மாலை ஒரு சிறப்பு குடும்ப விழா உட்பட ஒரு பிரம்மாண்டமான அறிமுகப்படுத்தும் விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இது திட்டத்தின் ஆரம்ப வெற்றியைக் கொண்டாட வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களதுகுடும்பங்கள் மற்றும் நலம் விரும்பிகளை ஒன்றிணைக்கும் வகையில் இவ்விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஜி ஸ்கொயர் கோல்டன் ஏக்கர், மிகவும் பாதுகாப்பான,  வில்லாக்களை கட்டுவதற்கு  தயாராக உள்ள ஒரு சமூகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மனைகள் அனைத்தும்மிகவும் மேம்பட்ட உள்கட்டமைப்பு அம்சங்களுடன் திட்டமிடப்பட்டுள்ளது.  இதனால் இங்கு மனைகளுக்கு பிளாக்டாப் சாலைகள், எல்.இ.டி. தெரு விளக்குகள், வீட்டுக்கான குடிநீர் இணைப்புகள் மற்றும் மின்சாரஇணைப்புகள் போன்ற குடியிருப்புக்கு மிக அவசியமான வசதிகளுடன் ஒரு வலுவான உள்கட்டமைப்பை ஜி ஸ்கொயர் கோல்டன் ஏக்கர் திட்டம் வழங்குகிறது. இங்கு வசிப்பவர்களுக்கு மன நிம்மதியை அளிக்கும் வகையில் சிசிடிவி கண்காணிப்பு மூலம் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.நேர்த்தியாக திட்டமிடப்பட்ட தோட்டங்கள், விளையாட்டு மண்டலங்கள் மற்றும் திறந்த பசுமையான இடங்கள் உள்ளிட்ட 40 உலகத் தரம் வாய்ந்த வசதிகளுடன் இங்கு வாழ்க்கை முறை உயர்தரமானதாக இருக்கும் வகையில்மேம்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவருக்கும் நிம்மதியளிக்கும் வகையில், ஒரு வருட இலவச பராமரிப்பு அம்சத்துடன், ஜி ஸ்கொயர் பில்ட் அசிஸ்ட்சேவையும் வழங்கப்படுகிறது. ‘ஜி ஸ்கொயர் பில்ட் அசிஸ்ட்’என்பது வீட்டுமனை வாங்கிய பிறகு, வாடிக்கையாளர்களின் இல்லங்களுக்கான கட்டிடக்கலை திட்டமிடல் முதல் வாஸ்து முறைப்படி கட்டமைப்பது வரை வில்லா கட்டுமானத்திற்கான நிபுணர்களின் வழிக்காட்டுதலைதங்கு தடையற்ற வகையில் வழங்கும் ஜி ஸ்கொயரின் வாடிக்கையாளர் நலன் திட்டமாகும், என்று  ஜி ஸ்கொயர் குழுமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநரான பால ராமஜெயம் தெரிவித்துள்ளார்.



Post a Comment

Previous Post Next Post

Contact Form