டாடா எஐஏ லைஃப் இன்சூரன்ஸில், வாழ்க்கையை பாதுகாப்பது என்பது வெறும் நிதி ஆதரவை மட்டுமே குறிக்கவில்லை. வாடிக்கையாளர்களின் வாழ்க்கையில் முக்கியமான ஒவ்வொரு தருணத்திலும் அவர்களுடன் இருப்பதையே குறிக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். இதற்காக “டாடா ஏஐஏ ஹெல்த் படீ”யை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்தியாவில் ஒரு லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து வரும் முதல் 24x7 ஆரோக்கிய & நலன் கூட்டாளராகும். இந்த மாஸ்காட் தொடர்ச்சியான சுகாதார ஆதரவின் கருத்தை எளிதாக்குகிறது. இது குடும்பங்களுக்கு மிகவும் அணுகக்கூடியதாகவும் உறுதியளிக்கும் விதமாகவும் அமைகிறது.ஹெல்த் படீ மூலம் வாடிக்கையாளர்கள் வாழ்க்கையின் எதிர்பாராத சவால்களுக்கு முன்னெச்சரிக்கையுடன் தயாராக இருக்கவும், ஆரோக்கியமானதும் மகிழ்ச்சியானதுமான வாழ்க்கையை நடத்தவும் உதவுகிறது.
டாடா ஏஐஏ ஹெல்த் படீ மூலம் வழங்கப்படும் இந்த சேவை, பாரம்பரிய காப்பீட்டைத் தாண்டிச் செல்கிறது. முன் எச்சரிக்கை சிகிச்சையிலிருந்து தொடங்கி முக்கிய உடல்நல மேலாண்மை வரை, வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நபர்களுடன் இணைந்து, அவர்கள் ஆரோக்கியமாகவும் எதிர்காலத்திற்கு தயாராகவும் இருக்க உதவுவதற்காக டாடா ஏஐஏ ஹெல்த் படீ வடிவமைக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை சுகாதார பரிசோதனைகள், செர்வைக்கல் புற்றுநோய் தடுப்பு மற்றும் எச்பிவி, ஹெபடைட்டிஸ் போன்ற பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகள், பிசிஓடி, ஐவிஎஃப், மாதவிடாய் நிறுத்தம், கருத்தரிக்காமை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கான மகப்பேறு நிபுணர்களுடன் நேரடி ஆலோசனை, பல் மருத்துவர்களுடன் நேரடி ஆலோசனை, குழந்தைகள் மருத்துவம் முதல் தோல், நரம்பியல், சிறுநீரகம் உள்ளிட்ட பல துறைகள் , லேப் டெஸ்ட்கள் மற்றும் மருந்து ஆர்டர்களில் தள்ளுபடி, முக்கிய நோய்கள் கண்டறியப்பட்டவர்களுக்கு மருத்துவ இரண்டாம் கருத்து மற்றும் தனிப்பட்ட வழக்கு ஆதரவு மற்றும் தனிப்பட்ட உடல்நலம் குறிக்கோள்களுக்கு ஏற்ப உடற்பயிற்சி மற்றும் உணவு நிபுணர் அமர்வுகள் என பல்வேறு சேவைகளை வழங்குகிறது
ஹெல்த் படீயை மேலும் வலுப்படுத்தி, முழுமையான நலனுக்கான எங்கள் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையில், டாடா ஏஐஏ “டாடா ஏஐஏ ஹெல்த் சிப்” எனப்படும் முன்னோடியான பங்கேற்காத, யூனிட்-லிங்க்டு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இது ஹெல்த் எஸ்ஐபி பிளஸ் மற்றும் ஹெல்த் எஸ்ஐபி பிளஸ் ப்ரோ என 2 வகைகளில் வருகிறது. ஹெல்த் படீ பராமரிப்பு மற்றும் ஆதரவில் கவனம் செலுத்தும் அதே வேளையில், ஹெல்த் சிப் நீண்டகால நிதி தயார் நிலையின் சக்தியைச் சேர்க்கிறது. பிரீமியம் ஒதுக்கீட்டு கட்டணங்கள் இல்லாதது மற்றும் நிதி மதிப்பை அதிகரிக்க கூடுதல் முதிர்வு ஊக்கங்கள் இல்லாமல், ஹெல்த் எஸ்ஐபி வளர்ச்சியுடன் பாதுகாப்பை வழங்குகிறது. இது 30 ஆண்டுகளுக்கு பிரீமியங்களை பூட்டி வைக்கும் திறனுடன், நீண்ட கால தீவிர நோய் காப்பீட்டையும் வழங்குகிறது.
டாடா ஏஐஏ ஹெல்த் படீ அறிமுகம் பற்றி கருத்து தெரிவித்த ஜீலானி பாஷா, சீஃப் டிஸ்ட்ரிப்யூஷன் ஆபீசர் - அல்டர்நேட் & எமெர்ஜிங் சேனல்ஸ், “இந்தியாவில் ஒரு லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து கிடைக்கும் முதல் 24x7 ஆரோக்கிய மற்றும் நலன் துணையாக ‘டாடா ஏஐஏ ஹெல்த் படீ’யை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். டாடா ஏஐஏ ஹெல்த் படீ, வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் உடல்நலத்தை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், ஆரோக்கியமான மற்றும் நிறைவான வாழ்க்கையை நடத்தவும் உதவும் சிறந்த தரச்சேவைகளை அணுகும் வலிமையை அளிக்கிறது” என்றார்.