டிபி சோலார் லிமிடெட், இந்தியாவின் மிகப்பெரிய செல் மற்றும் மாட்யூல் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக முன்னணி வகிக்கிறது. இந்நிறுவனம் டாடா பவர் ரினிவபுள் எனர்ஜி லிமிடெட்டின்-ன் துணை நிறுவனமாகும். தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் உள்ள தனது அதிநவீன உற்பத்தி ஆலையில் 2 ஜிகாவாட் சோலார் செல் லைனில் இருந்து வணிக ரீதியான உற்பத்தியைத் தொடங்குவதாக பெருமையுடன் அறிவித்திருக்கிறது.
இது நம்நாட்டின் மிகப்பெரிய சிங்கிள் லொகேஷன் சோலார் செல் அண்ட் மாட்யூல் உற்பத்தி ஆலையாகும். இந்த மைல்கல் தொடக்கமானது, இந்த ஆண்டின் ஆரம்பத்தில் சோலார் மாட்யூல்களின் வெற்றிகரமான உற்பத்தியைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது 2 ஜிகாவாட் திறனுடன் செயல்பட்டு வரும் சோலார் செல் உற்பத்தி திறனானது, உயர்தர மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சோலார் உதிரிபாகங்கள், குறிப்பாக பெரிய அளவில் கூடுதல் திறனுக்காக உற்பத்தியுடன் அதிக திறனை ஒன்றிணைக்கும் திட்டங்களுக்கான வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் டாடா பவர் நிறுவனத்தின் திறனை மேலும் மேம்படுத்தும். இந்த ஆலை, அடுத்து வரும் 4-6 வாரங்களில் மீதமுள்ள 2 ஜிகாவாட் திறனுடன் உற்பத்தியை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அடுத்த சில மாதங்களில் உற்பத்தியில் உச்ச அளவை எட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உற்பத்தி ஆலையானது மேம்பட்ட டாப்கான் மற்றும் மோனோ பெர்க் தொழில்நுட்பத்துடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் இந்த ஆலையானது சோலார் செல் மற்றும் மாட்யூல்களுக்கான உயர் திறன் உற்பத்தியை சாத்தியப்படுத்தி இருக்கிறது. தமிழ்நாடில் உள்ள உற்பத்தி ஆலையில் உற்பத்தி செய்யப்படும் சோலார் செல்கள் மற்றும் மாட்யூல்கள், ஆரம்பகட்டத்தில் இந்நிறுவனத்தின் தற்போதுள்ள திட்டங்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு அதன் விநியோகச் சங்கிலியை மேலும் வலுப்படுத்தும் வகையில் பயன்படுத்தப்படும். எதிர்கால செயல்பாடுகளின் விரிவாக்கத்தை கருத்தில் கொண்டு, பரவலான சந்தை விநியோகத்திற்கு இருக்கும் வாய்ப்புகளை கண்டறிந்து செயல்படுத்தவும் டாடா பவர் திட்டமிட்டுள்ளது.
அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த உற்பத்தி ஆலை, சோலார் மாட்யூல்களுக்கு 682 மெகாவாட் மற்றும் சோலார் செல்களுக்கு 530 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்டது. இன்றுவரை, மொத்தம் 3.73 ஜிகாவாட் சோலார் மாட்யூல்கள் மற்றும் 2.26 ஜிகாவாட் சோலார் செல்களை விநியோக செய்திருக்கிறது.
டாடா பவர் நிறுவனம் இந்த ஆலையை கட்டமைப்பதற்கு ஏறக்குறைய ₹4300 கோடியை மூதலீடு செய்ய முடிவு செய்திருக்கிறது. இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டுக்கு மாறும் பயணத்தில் முன்னின்று வழிநடத்த வேண்டுமென்ற டாடா பவரின் உத்தி சார்ந்த செயல்பாட்டின் முக்கிய மூலக்கல்லாக இந்த முயற்சி அமைந்திருக்கிறது. மேற்கூரையில் பொருத்தப்படும் சோலார் ரூஃப்டாப் மற்றும் பயன்பாடு மற்றும் மெகா வாட் அல்லது ஜிகா வாட் என உயர் அளவில் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்யும் பிரிவுகளில் தற்போது இருக்கும் 20% பங்களிப்பை இன்னும் அதிகமாக விரிவுப்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட இந்த ஆலை உதவும்.
இதற்காக பிஎம் சூர்யா ஹர் யோஜனா போன்ற திட்டங்களில் இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் மாட்யூல் அங்கம் வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் உற்பத்தி ஆலையில் இருந்து தயாரிக்கப்படும் மாட்யூல்கள் அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட மாடல்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் பட்டியலில் ஒரு பகுதியாக இருந்தாலும், அதன் உயர்தர செல்கள் பட்டியலில் சேர்க்கப்படும் என்றும், இது குறித்து அரசு விரைவில் அறிவிக்கும் என்றும் இந்நிறுவனம் நம்புகிறது.
இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி எதிர்காலம் குறித்த தனது உற்சாகத்தை வெளிப்படுத்திய டாடா பவர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர், டாக்டர். பிரவீர் சின்ஹா கூறுகையில், “எங்களுடைய திருநெல்வேலி ஆலையில் செல் உற்பத்தி தொடங்கப்பட்டது என்பது, சூரிய மதிப்பு சங்கிலியில் உள்நாட்டுமயமாக்கல் முயற்சி மற்றும் தன்னிறைவு நிலை ஆகியவற்றை அடைவதில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக அமைந்திருக்கிறது. சூரிய சக்தியை அனைவரும் எளிதில் பெற கூடியதாக மாற்றுவதற்கும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியால் இயங்கும் இந்தியாவுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கும் நாங்கள் அக்கறையுடன் செயல்பட உறுதிபூண்டுள்ளோம். நிகர-பூஜ்ஜிய கார்பன் என்ற இலக்குடனான எதிர்காலத்தை உருவாக்க வேண்டுமென்ற நம் நாட்டின் தொலைநோக்குப் பார்வைக்கு ஆதரவுக்கரம் நீட்டுவதில் இந்த ஆலை பெரும் பங்கு வகிக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்" என்றார்.