இஃப்கோ-வின் முன்முயற்சியுடன், உலகளாவிய கூட்டுறவு இயக்கத்தின் முதன்மை அமைப்பான சர்வதேச கூட்டுறவு கூட்டணியின் 130 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக, ஐசிஏ பொதுச் சபை மற்றும் உலகளாவிய கூட்டுறவு மாநாடு இந்தியாவால் நடத்தப்பட உள்ளது. ஜூன் 28, 2023 அன்று பிரஸ்ஸல்ஸில் நகரில் நடந்த ஐசிஏ வாரியக் கூட்டத்தின் போது, இஃப்கோ இந்தியாவில் ஐசிஏ பொது பேரவை மற்றும் உலகளாவிய மாநாட்டை நடத்த இஃப்கோமுன்மொழிந்ததை, வாரிய உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த நிகழ்வின் கருப்பொருள், ‘கூட்டுறவுகள் அனைவருக்கும் செழிப்பை உருவாக்குகின்றன’ என்பதாகும்.
இந்த நிகழ்ச்சிக்கு, இந்திய கூட்டுறவு துறை அமைச்சர் அமித் ஷா 25 நவம்பர் 2024 அன்று மதியம் 3 மணிக்கு உலகளாவிய கூட்டுறவு மாநாட்டின் துவக்க விழாவிற்கு தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிப்பார். இந்த நிகழ்வில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு - 2025 குறித்த நினைவு தபால் முத்திரையும் வெளியிடப்படும். பிரதமர் இந்த நிகழ்வைத் தொடங்கி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஜெரோன் டக்ளஸ், டிஜி-ஐசிஏ செய்தியாளர்களிடம், ”இந்நிகழ்வு 2024 நவம்பர் 25 முதல் நவம்பர் 30 வரை, பாரத் மண்டபம், ஐடிபிஒ, பிரகதி மைதானம், புது தில்லியில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வை நடத்துபவர்கள்- இஃப்கோ, ஐசிஏ வின் முக்கிய பங்குதாரர் மற்றும் உலக கூட்டுறவு கண்காணிப்பு தரவரிசையில் முதல் இடத்தை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக திகழ்ந்து வருகிறது. பூடான் பிரதமர், ஐக்கிய நாடுகளின் பொருளாதார கவுன்சில், சர்வதேச கூட்டுறவு கூட்டணியின் தலைவர், ஐ.நா பிரதிநிதிகள், ஐ.சி.ஏ உறுப்பினர்கள், இந்திய கூட்டுறவு இயக்கத்தைச் சேர்ந்த முக்கிய பிரபலங்கள் உட்பட 100 நாடுகளில் இருந்து 1500 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள்” என்றார்.
டாக்டர். யு.எஸ். அவஸ்தி, எம்.டி, இஃப்கோ லிட் கூறுகையில், “இந்த மாநாட்டின் கருப்பொருள் 'கூட்டுறவுகள் அனைவருக்கும் செழிப்பை உருவாக்குகின்றன'. வளமான மற்றும் பாதுகாப்பான ஒரு கூட்டுறவு இயக்கத்தை உருவாக்குவதே எங்களின் நீண்ட கால நோக்கமாகும். கருத்துப் பரிமாற்றத்திற்காக சர்வதேச பிரதிநிதிகளை எங்கள் நாட்டில் நடத்துவதில் பெருமை கொள்கிறோம்” என்றார்.
தனி கூட்டுறவு அமைச்சகம் அமைக்கப்பட்டு, முதல் மத்திய கூட்டுறவு அமைச்சராக திரு. அமித் ஷா தலைமையில், கூட்டுறவு இயக்கத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக 54 முன்முயற்சிகளைத் தொடங்குவதன் மூலம் இந்திய கூட்டுறவுத் துறையானது தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிக பங்களிப்பை அடைந்து புதிய மைல்கற்களை எட்டியுள்ளது. பிஏசிஎஸ்-ஐ கணினி மயமாக்குவது அல்லது தேசிய அளவில் கூட்டுறவுகள் இல்லாத துறைகளில் மூன்று புதிய கூட்டுறவுகளை உருவாக்குவது எதுவாக இருந்தாலும், இந்த நடவடிக்கைகள் அனைத்தும் இந்தியாவை உலகளாவிய கூட்டுறவு இயக்கத்தில் முன்னணியில் வைத்துள்ளது, இந்தியா, வேகமாக வளர்ந்து வரும் கூட்டுறவுத் துறைகளில் ஒன்றாக மாறியுள்ளது.
இந்த மாநாடு இந்திய கிராமம் என்ற கருப்பொருளுடன் ‘ஹாட்’ அமைப்பில் இந்திய கூட்டுறவுகளின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை காட்சிப் படுத்த பயன்படும். இந்த நிகழ்வு கார்பன் நியூட்ரலாக இருக்கும். கார்பன் வெளியேற்றத்தை ஈடுசெய்ய, 10,000 அரச மரக்கன்றுகள் நடப்படும்.