குழந்தைகள் மற்றும் இளம் சிறார்களுக்கான மருத்துவ சிகிச்சையில் ஒரு சிறப்பான சாதனை நிகழ்வை அப்போலோ மருத்துவமனை திருச்சி வெற்றிகரமாக நிகழ்த்தியிருக்கிறது. உயிருள்ள தானமளிப்பவரிடமிருந்து பெற்ற கல்லீரலை கொண்டு இரண்டு வயதே ஆன ஒரு குழந்தைக்கு உறுப்புமாற்று சிகிச்சை செய்யப்பட்டிருப்பதே இச்சாதனையாகும். பெருநகரங்கள் அல்லாத இரண்டாம் நிலை நகரங்களிலும் சிக்கலான இதுபோன்ற மருத்துவ செயல்முறையை மேற்கொள்வதில் அப்போலோ மருத்துவமனையின் திறனை இந்த மைல்கல் நிகழ்வு அடிக்கோடிட்டு காட்டுகிறது.
இக்குழந்தைக்கு பிறவி நோயாக கல்லீரல் திசைநார் பெருக்கம் என்ற பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டிருந்தது. ஆபத்தான மோசமான நிலைக்கு பாதிப்பு அதிகரித்ததால் அந்த இளம் குழந்தையின் உயிருக்கே இது ஆபத்தாக அமைந்தது. உறுப்புமாற்று சிகிச்சை செய்தாகவேண்டிய கட்டாய தேவை இதனால் எழுந்தது. இக்குழந்தையின் தந்தையான 44 வயது நிரம்பிய நபர், அவரது கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக அளிக்க மனமுவந்து முன்வந்தார். குழந்தை மீது பெற்றோர் கொண்டிருக்கும் பாசத்திற்கும், தியாக உணர்விற்கும் மிக நேர்த்தியான எடுத்துக்காட்டாக இது அமைந்தது.
தமிழ்நாடு மாநிலத்தின் மத்திய மண்டலம் என்று கருதப்படும் திருச்சியில் மிக நவீன குழந்தைநல சிகிச்சை பராமரிப்பு சேவைகள் கிடைக்கப்பெறும் இந்த வெற்றிகர அறுவைசிகிச்சை வழிகாட்டியிருக்கிறது. இரண்டாம் நிலை நகரங்களிலும் தனது சேவைகளை விரிவாக்குவதிலும் மற்றும் நோயாளிகளுக்கான சிகிச்சைப் பலன்களை மேம்படுத்துவதிலும் அப்போலோ மருத்துவமனை கொண்டிருக்கும் அர்ப்பணிப்பிற்கும், திறனுக்கும் இது சான்றாக திகழ்கிறது.
உறுப்புமாற்று சிகிச்சையில் 40 ஆண்டுகளுக்கும் அதிகமாக முன்னணியில் இருந்துவரும் அப்போலோ மருத்துவமனைகள் குழுமம், இதுவரை 23,000-க்கும் அதிகமான எண்ணிக்கையில் உறுப்புமாற்று சிகிச்சைகளை செய்து உலகின் மிகப்பெரிய உறுப்புமாற்று சிகிச்சை செயல்திட்டத்தைக் கொண்டிருக்கும் மருத்துவ மையமாக தனது அந்தஸ்தை வலுவாக உறுதி செய்திருக்கிறது.
இந்த சிக்கலான அறுவைசிகிச்சையை மேற்கொண்ட குழுவிற்கு தலைமை வகித்த திருச்சி, அப்போலோ மருத்துவமனையின் கல்லீரல் உறுப்புமாற்று அறுவைசிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். இளங்குமரன் கிருஷ்ணன் கூறுகையில், “குழந்தைகளில் அவர்களது உறுப்புகள் மற்றும் இரத்தநாளங்களின் மிகச்சிறிய அளவின் காரணமாக குழந்தைகளுக்கான கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சைகளுக்கு அதிக நிபுணத்துவமிக்க சிறப்பு திறன்கள் அவசியமாக இருக்கின்றன. நோயாளிகளுக்கு நேர்த்தியான சிகிச்சையை வழங்குவதில் எமது பொறுப்புறுதியையும் மற்றும் இம்மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள மிக நவீன சாதனங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளையும், வெற்றிகரமாக நடைபெற்ற இந்த அறுவைசிகிச்சையை மேற்கொள்வதில் எமது குழுவின் திறன் அடிக்கோடிட்டு காட்டுகிறது. வெற்றிகரமாக நடந்து முடிந்த கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சை குழந்தையின் நலத்தை கணிசமான அளவு மேம்படுத்தியிருக்கிறது. தனிச்சிறப்பான இத்தகைய சிகிச்சைக்கு பெருநகரங்களுக்கு வெகுதூரம் பயணிப்பதற்கான அவசியத்தை திருச்சி போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் இயங்கிவரும் மருத்துவமனைகளின் வளர்ச்சி கண்டுவரும் திறன்களை இந்த வெற்றிகர நிகழ்வு சுட்டிக்காட்டுகிறது” என்றார்.