ஸ்கோடா ஆட்டோவின் #நேம்யுவர்ஸ்கோடா பிரச்சாரம் துவக்கம்

 


ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம், 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவில் அறிமுகமாகும் அனைத்துப் புதிய காம்பாக்ட் எஸ்யூவிக்கான திட்டங்களை அறிவித்துள்ளது. இது நிறுவனத்தின் மூன்றாவது இந்தியாவுக்கான-தயாரிப்பு ஆகும். குஷாக் மற்றும் ஸ்லேவியா வாகனங்களைப் போலவே, இதுவும் எம்க்யூபி-ஏஓ-ஐஎன் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த புதிய அறிமுகத்தின் மூலம், ஸ்கோடா ஆட்டோ இந்தியா, 2026 ஆம் ஆண்டுக்குள் 100,000 வருடாந்திர விற்பனை அளவை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஸ்கோடா ஆட்டோ இந்தியா, தனது புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவிக்குப் புதிய பெயரைச் சூட்டும் பிரச்சாரத்தை அறிவித்துள்ளது.  பயனீட்டாளர், வாடிக்கையாளர் மற்றும் ரசிகர்கள் புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவிக்கு புதிய பெயர் வைப்பது பற்றி என்ன நினைக்கிறர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள, ஸ்கோடா ஆட்டோ இந்தியா #நேம்யுவர்ஸ்கோடா  என்னும் பிரச்சாரத்தை அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் ஸ்கோடா தயாரிக்கும் புத்தம் புதிய வாகனத்திற்குச் சாத்தியமுள்ள பெயரைச் சூட்ட நாடு முழுவதிலுமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 யூரோ என்சிஏபி தரக்கட்டுப்பாடு அமைப்பினால் 5 நட்சத்திர மதிப்பு பெற்ற கோடியாக் லக்ஸரி 4க்கு 4 உடன் இணைந்து, ஸ்கோடா ஆட்டோ இந்தியா மகிழுந்துகள் முழுமையாகப் பரிசோதிக்கப்பட்டு, 5 நட்சத்திர மதிப்பையும், பாதுகாப்பையும் பெற்றுள்ளன.  ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் புத்தம் புதிய வாகனம், 2025இல் சந்தைக்கு வர உள்ளது.  

இந்தப் புத்தம் புதிய வாகனம் எம்க்யூபி-ஏஓ-ஐஎன் இயங்கு தளத்தில் தயாரான மூன்றாவது வாகனமாகும்.  4 மீட்டருக்குக் குறைவான மகிழுந்துகளுக்குக் கிடைக்கும் கலால் வரிப் பயன்களை பெறும் வகையில் இந்த வாகனம் சப்-4 மீட்டர் எஸ்யூவி-யாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் நிலை நகரங்கள் மற்றும் சிறு சந்தைகளில் ஆழமாக ஊடுருவும் நோக்கத்துடன், இந்தப் புத்தம் புதிய வாகனம் ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் தயாரிப்புகளில் புது வரவாகும்.

இந்த அறிவிப்பைப் பற்றி ஸ்கோடா ஆட்டோ சிஇஓ கிளாஸ் ஜெல்மர் பேசுகையில், “ஸ்கோடா ஆட்டோவின் உலகளாவிய வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானது.   2025இல் வரவிருக்கும் புத்தம் புதிய காம்பாக்ட் எஸ்யூவி,  வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான பிரிவாக அமையும். விரிவடைந்து வரும் ஸ்கோடா போர்ட்ஃபோலியோ மூலம், 2030-க்குள் ஃபோக்ஸ்வேகன் குடும்ப பிராண்டுகளின் சந்தைப் பங்கை 5 சதவீத எட்டுவதற்கு, ஸ்கோடா தயாரிப்புகள் கணிசமான பங்கை அளிக்குமென நம்புகிறேன்’ என்றார்.

ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிராண்ட் இயக்குனர் பீட்டர் ஜனேபா கூறுகையில் ‘இப்போது தொடங்கி அடுத்த ஓராண்டுக்குள், ஸ்கோடா ஆட்டோ இந்தியா, புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யுவி மகிழுந்தை, இந்தியச் சந்தைக்காக அறிமுகப்படுத்தும் என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.   புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவி மூலம் 2026இல் 100,000 அலகுகள் வருடாந்திர விற்பனை என்னும் இலக்கை நிச்சயம் எட்டுவோம்’ என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form