கோல்கேட் அதன் முதன்மைத் திட்டமான பிரைட் ஸ்மைல்ஸ், பிரைட் ஃபியூச்சர்ஸ் மூலம் ஒரு பில்லியன் புன்னகையை வழங்க உறுதிகொண்டுள்ளது. இத்திட்டம் இந்தியாவில் 171 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளின் வாழ்வில் இத்திட்டம் அத்தியாவசிய வாய்வழி பராமரிப்பு பழக்கவழக்கங்கள், புகையிலை தடுப்பு விழிப்புணர்வு, வாய் ஆரோக்கியத்திற்கான நல்ல ஊட்டச்சத்தை ஊக்குவித்தல் ஆகிய நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதன் தாக்கத்தை மேலும் வலுப்படுத்தும் ஒரு உத்திசார் நடவடிக்கையில், யுனிசெஃப் இந்தியாவால் வளர்க்கப்பட்ட ஊட்டச்சத்து குறித்த புகழ்பெற்ற அறிவு மற்றும் வள தளமான இம்பேக்ட்4நியூட்ரிஷன் உடன் கோல்கேட் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த ஒத்துழைப்பு, குழந்தைகளிடையே வாய்வழி ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வை கணிசமாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இக்கூட்டாண்மை 2025ஆம் ஆண்டிற்குள் 10 மில்லியன் குழந்தைகளை அடைவதற்கான ஒரு தைரியமான நோக்கத்தை அமைக்கிறது, இது நம் நாட்டிற்கு சிறந்த வாய்வழி ஆரோக்கியத்தை வளர்க்கிறது. இந்த வளர்ச்சிக்கட்டத்தை அடைய, கோல்கேட் ஆனது 12க்கும் அதிகமான மாநிலங்கள் மற்றும் 250க்கும் அதிகமான மாவட்டங்களில் உள்ள 6முதல்15 வயதுடைய குழந்தைகளுக்கும், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள 25,000க்கும் அதிகமான பள்ளிகளில் மாணவர்களுடனும் ஈடுபடும். பிஎஸ்பிஎஃப் திட்டம் தற்போது கர்நாடகா, தமிழ்நாடு, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரப்பிரதேசம், பஞ்சாப், இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் என்ஜிஓ கூட்டாளர் பாரத் கேர்ஸின் மதிப்புமிக்க ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது.
சிபி இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ, பிரபா நரசிம்மன் இந்த ஒத்துழைப்பு குறித்து தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார், " எங்கள் பிரைட் ஸ்மைல்ஸ், பிரைட் ஃப்யூச்சர்ஸ் திட்டம் மூலம், வாய்வழி சுகாதார விழிப்புணர்வை மேம்படுத்துதல் மற்றும் நேர்மறையான மாற்றத்தை வளர்த்தல் போன்ற எங்கள் பார்வையைப் பகிர்ந்து கொள்ளும் அரசு அமைப்புகள் மற்றும் ஒத்த எண்ணம் கொண்ட நிறுவனங்களுடன் நாங்கள் தீவிரமாக கூட்டு முயற்சி செய்கிறோம்” என்றார்.