இந்தியாவின் புகழ்பெற்ற பர்னிச்சர் பிராண்டான ராயல்ஓக் ஃபர்னிச்சர், திருவள்ளூரில் ஒரு புதிய கடையைத் திறப்பதன் மூலம் தமிழ்நாட்டில் தனது இருப்பை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த கடையைத் திறப்பதின் மூலம், இந்த பிராண்ட் நாட்டில் தனது 167வது கடையைத் துவக்குகிறது. மாபெரும் திறப்பு விழாவிற்கு ராயல்ஓக் இன்கார்ப்பொரேஷன் பிரைவேட் லிமிடெடின் தலைவர் விஜய் சுப்ரமணியம் மற்றும் ராயல்ஓக் இன்கார்ப்பொரேஷன் பிரைவேட் லிமிடெடின் நிர்வாக இயக்குனர் மதன் சுப்ரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விற்பனை மற்றும் செயல்பாடுகளின் துணைத் தலைவர் பார்த்தா பிரதீம் சௌத்ரி, விற்பனை மற்றும் வர்த்தகம் தலைவர் பிரசாந்த் எஸ் கோட்டியன், கிளஸ்டர் மேலாளர் நிதேஷ் கேஸ்வானி, விசுவல் மெர்கன்டைசர் தலைவர் திரேநேத்திரன் திலக் ஆகியோர் உடனிருந்தனர். ஷோரூம் பிளாட் எண் ஆர் 64/4, ஆவடி பைபாஸ் சாலை காக்களூர், திருவள்ளூர்-602003 என்ற முகவரியில் அமைந்துள்ளது.
12000 சதுர அடி பரப்பளவைக் கொண்ட இந்த கடையில், லிவிங் ரூம், படுக்கையறைகள், டைனிங் பகுதிகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய வீட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் விரிவான ஃபர்னிச்சர்கள் உள்ளன. திருவள்ளூரில் வசிப்பவர்கள் இப்போது பலவித ஸ்டைலில் மற்றும் செயல்பாட்டு அலங்கார பொருட்களை இங்கு கண்டிட முடியும்.
ராயல்ஓக் சோஃபாக்கள், படுக்கைகள், சாப்பாட்டு மேசைகள், நாற்காலிகள், சாய்வு நாற்காலிகள், மெத்தைகள், உட்புற அலங்காரப் பொருட்கள் மற்றும் அலுவலகம் மற்றும் வெளிப்புற ஃபர்னிச்சர்கள் ஆகியவற்றின் விரிவான தேர்வுகளை வழங்கும் அனைத்து வீட்டு அலங்காரத் தேவைகளுக்கும் செல்ல வேண்டிய இடமாகும். இந்த ஸ்டோர் தமிழ்நாட்டில் தனது பிராண்டின் இருப்பை அதிகரிக்கிறது, மேலும் இங்கு மொத்தம் 11 கடைகளை உருவாக்குகிறது.
வெளியீட்டு விழாவில் பேசிய ராயல்ஓக் பர்னிச்சர் தலைவர் விஜய் சுப்ரமணியம் பேசுகையில், "எங்களது 167வது கடையை திருவள்ளூரில் தொடங்குவதிலும், தமிழ்நாட்டில் நாங்கள் விரிவுபடுத்துவதை குறித்து நாங்கள் உண்மையிலேயே உற்சாகமாக இருக்கிறோம். எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு வாங்கிடக்கூடிய விலையில் உயர்தர பர்னிச்சர்களை வழங்குவதில் ராயல்ஓக்கின் அர்ப்பணிப்பை இது குறிக்கிறது” என்றார்.