தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் நிறுவன அடிக்கல் நாட்டு விழா



வியட்நாமின் முன்னணி மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான வின்ஃபாஸ்ட் ஆட்டோ, இந்தியாவில் தனது முதல் உற்பத்தி ஆலைக்கான அடிக்கல் நாட்டு விழாவை பிப்ரவரி 25 அன்று நடத்தியது. இந்த விழா வின்ஃபாஸ்ட் நிறுவன செயல்பாடுகளின் உலகளாவிய விரிவாக்கத்தில், மிகப்பெரும் முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இந்த அடிக்கல் நாட்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசின் தொழில்துறை அமைச்சர் டாக்டர். டி.ஆர்.பி.ராஜா, மாநில தொழில் துறைச் செயலாளர் வி அருண்ராய், தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர், மாநில அமைச்சர்கள், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில அரசின் மூத்த பிரதிநிதிகள் மற்றும் வின்ஃபாஸ்ட் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக பிரதிநிதிகள் குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தென் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் தொழிற்பேட்டையில், 400 ஏக்கர் பரப்பளவில், வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் புதிய ஒருங்கிணைந்த மின்சார வாகன ஆலை கட்டப்படும். இந்த உற்பத்தி ஆலைத் திட்டத்தின் ஆரம்ப கட்ட முதலீடு ரூ. 4,000 கோடி ஆகும். தூத்துக்குடியில் அமையும் இந்த ஒருங்கிணைந்த மின்சார வாகன உற்பத்தி ஆலை, ஆண்டுக்கு சுமார் 150,000 கார்களை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தப் பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கும் இது பெரும் பங்களிப்பதோடு. 3,000 முதல் 3,500 தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் இது வழங்கும். இந்நிறுவனம் ஆரம்பத்தில் இருந்தே உள்ளூர்மயமாக்கலை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன் உலக அளவில் சிறந்த விநியோகத் தளத்துடன் இணைந்து செயல்படும்.

இந்த வரலாற்று மைல்கல் நிகழ்வு குறித்து வின்ஃபாஸ்ட் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஃபாம் சான் சாவ் கூறுகையில், "தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் உற்பத்தி ஆலைக்கான அடிக்கல் நாட்டுவிழா இந்தியாவில் நிலைத்து நீடிக்கத்தக்க நிலையான மற்றும் பசுமை  போக்குவரத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிப்பதாக அமைந்துள்ளது. ஒருங்கிணைந்த மின்சார வாகன உற்பத்தி நிறுவனத்தை தூத்துக்குடியில் அமைப்பதன் மூலம், வேலை வாய்ப்பு உருவாக்கம், பசுமைப் போக்குவரத்து மற்றும் உத்திசார் ஒத்துழைப்பு ஆகியவற்றில் வின்ஃபாஸ்ட் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பு, மின்சார வாகனத் துறையில் ஒரு மிகப்பெரும் நிறுவனமாக வின்ஃபாஸ்டின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துகிறது" என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form