நடுத்தர அளவிலான (மிட்-சைஸ்) மோட்டார்பைக் பிரிவில் உலகளவில் முன்னணி நிறுவனமாக இருக்கும் ராயல் என்ஃபீல்டு, அதன் 2025 ஹண்டர் 350 என்கிற பைக்கை அறிமுகப்படுத்தியது. மிகவும் பிரபலமான ஸ்ட்ரீட் ரோட்ஸ்டர் பைக்கின் புதுப்பிக்கப்பட்ட வடிவாகவும், புதிய அம்சங்கள் நிறைந்த அப்கிரேடுகளுடன் இந்த பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
உலகின் மிகச்சிறந்த சுற்றுப்புறங்களுக்காகவே பிரத்தியேகமாக, வடிவமைக்கப்பட்ட 2025 ஹண்டர் 350 மூன்று புதிய நிறங்களில் (கலர்வேஸ்), மேம்படுத்தப்பட்ட அம்சங்களை வழங்குவதோடு, நகர்ப்புற மோட்டார் பைக் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் ஒரு தரநிலையை வகுத்துள்ளது. - அதற்கென ஒரு உள்ளுணர்வு, வேகம் மற்றும் அட்டகாசமான ஸ்டைலுடன் வருகிறது.
நகர வீதிகளுக்குப் பொருந்தும் விதத்தில் உருவாக்கப்பட்ட இந்த பைக், வாகனம் ஓட்டுபவரின் சுயத்தை வெளிப்படுத்த ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது; 2025 ஹண்டர் 350 பைக்முன்பைவிட மிகவும் வசதியாகவும்,அதிக திறனுடனும் வருகிறது.இந்த பைக் மும்பை மற்றும் புது டெல்லியில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட ராயல் என்ஃபீல்டின் முதல் சாலைக் கலாச்சாரவிழாவான ‘ஹண்டர்ஹூட்’-இல் வெளியிடப்பட்டது. இந்த ஹண்டர் ஹூட் கலாச்சாரத் விழாவனது, இந்த பைக்கின் அறிமுகத்திற்கு மிகவும் பொருத்தமாக அமைந்தது; இந்த பைக்கின் பிறப்பிடமே ஸ்ட்ரீட் ஆர்ட் என்பதால், சாலைகளே அதற்கு உரியதாகவும், அதன் ஆற்றலின் இதன் ஆதாரமாகவும் உள்ளது!
ரியோ நகரின் வெள்ளை மணல், லண்டனின் சிவப்பு செங்கல் பதித்த பாதைகள், மற்றும் டோக்கியோவின் கருப்பு ஆஸ்ஃபால்ட் தெருக்கள் என அனைத்திற்கும் பொருந்தும் வகையில் 2025 ஹண்டர் 350 பைக்கின் வேரியன்ட்கள் - ரியோ ஒயிட், டோக்கியோ பிளாக் மற்றும் லண்டன் ரெட் - ஆகிய நிறங்களில்உலகெங்கிலும் உள்ள சிறப்புமிக்கஇடங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும் அதிகப்படுத்தப்பட்ட கிரவுண்ட் கிளியரன்ஸ், மேம்படுத்தப்பட்ட இருக்கை வசதி, புதிய சஸ்பென்ஷன் மற்றும் வாகனம் ஓட்டுபவருக்கு உடலமைப்புடன் பொருந்தும் ஒரு புதுமையான ட்ரைஆங்கிள் வடிவமைப்பு ஆகிய அம்சங்களுடன் ஒரு சௌகரியமான ரைடிங்கை உறுதிசெய்கிறது. 2025 ஹண்டர் ராயல் என்ஃபீல்டு பிராண்டிடமிருந்து ஸ்லிப்-அசிஸ்ட் கிளட்ச்சைப் பெறும் முதல் 350 சிசி மோட்டார் பைக் என்பது குறிப்பிடத்தக்கது. எல்இடி ஹெட்லேம்ப்கள், டிரிப்பர் பாட் மற்றும் மேம்பட்ட ரைடர் அனுபவத்திற்காக டைப் சி யுஎஸ்பி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகளும் உள்ளன.
இதன் அறிமுக விழாவில் பேசிய ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தலைமை கமர்ஷியல் அலுவலர், யத்விந்தர் சிங் குல்லேரியா, "2025 ஹண்டர் 350 பைக் எங்கள் போர்ட்ஃபோலியோவில் ஒரு தனித்துவமான மோட்டார் பைக்காக இடம்பிடித்துள்ளது; துடிப்பான, இளமையான மற்றும் முதல் முறையாக பைக் ஓட்டும் நபர்களும், நகரத்தில் பயணிப்பவர்களும் இதனை பெரிதும் விரும்புகின்றனர். நாங்கள் இதன் செயல்திறனை உயர்த்தியுள்ளதோடு, அறிவார்ந்தஅப்கிரேடுகளையும் சேர்த்துள்ளோம்; எனவே இந்த பைக்கினை சொந்தமாக்கி, ஓட்டுவது என்பது மேலும் உற்சாகமான ஒரு அனுபவமாக இருக்கும். மேலும், இதில் பயணிக்கும் இடமெல்லாம் ஒரு விளையாட்டு மைதானமாக மாறுவதை ரைடர்கள் உணர்வார்கள். இது சாலைக் கலைகளின் கலாச்சார உணர்வை தொடர்ந்து பிரதிபலிப்பதாக இருக்கிறது, எனவே அதற்கு மேலும் உயிரூட்டும் விதமாக நாங்கள் ஹண்டர்ஹுட்-ஐ தேர்வுசெய்தோம்”, என்று தெரிவித்தார்.
அனைத்து அங்கீகரிக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு டீலர்ஷிப்களிலும், ராயல் என்ஃபீல்டு வலைத்தளத்திலும் 2025 ஹண்டர் 350 பைக்கை முன்பதிவு செய்யலாம். பேஸ் வேரியண்ட்டான ஃபேக்டரி பிளாக் ரூ.1,49,900, மிட் வேரியண்ட் ரியோ ஒயிட் மற்றும் டாப்பர் கிரே ரூ. 1,76,750, டாப் வேரியண்ட் டோக்கியோ பிளாக், லண்டர் ரெட் மற்றும் ரெபெல் ப்ளூ ரூ.1,81,750 எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.