டைட்டன் வனம் திட்டத்தின் கீழ் ஓசூரில் 2 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன

 


டைட்டன் கம்பெனி லிமிடெட், சர்வதேச பூமி தினத்தைக் கொண்டாடும் வகையில், ஓசூரில் உள்ள தொரப்பள்ளியில் ’டைட்டன் வனம்’ திட்டத்தை நேற்று தொடங்கி வைத்துள்ளது. ஒருங்கிணைந்த காடுகளை வளர்த்தெடுக்கும் மாபெரும் முயற்சியாக இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக ஏற்கனவே மரங்கள் மற்றும் செடி கொடிகள் காய்ந்து சிதைவுற்ற 45 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை, 120-க்கும் அதிகமான நாட்டு மரங்களைக் கொண்ட ஒரு வளரும் காடாக ‘டைட்டன் வனம்’ திட்டம் மூலம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. பூமியின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பசுமைப் படர செய்வதில் டைட்டன் மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளை பிரதிபலிக்கும் வகையில் ‘டைட்டன் வனம்’ திட்டம் அமைந்துள்ளது. 

இத்திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் முயற்சியாக நிகழ்ந்த விழாவில், டைட்டன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி.கே. வெங்கடராமன், டைட்டன் நிலைத்தன்மைப் பிரிவு தலைமை அதிகாரி என்.இ.ஸ்ரீதர், வி.ஆர்.லதா, முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி, கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி.தினேஷ் குமார், பிரியங்கா துணை ஆட்சியர் - கிருஷ்ணகிரி, மற்றும் யஷ்வந்த அம்புல்கர், உதவி வனப் பாதுகாவலர், தமிழ்நாடு ஆகியோர் முன்னிலையில் ’டைட்டன் வனம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுக விழாவில் பயோடாசாயில் அறக்கட்டளை, மீடியஸ் எர்த் ஆகிய அமைப்புகளின் முக்கிய பிரதிநிதிகளும், உள்ளூர் தொழில் சங்கங்கள் மற்றும் சமூகத் தலைவர்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

டிசம்பர் 2024-ல் ‘டைட்டன் வனம்’ திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் தொடங்கிய உடனேயே, மீடியஸ் எர்த் அமைப்பின் தொழில்நுட்ப வழிகாட்டுதல் மற்றும் பயோடாசாயில் அறக்கட்டளையின் மரம் வளர்க்கும் மண் நிபுணத்துவத்தின் மூலம் மரம் நடும் பணிகள் வெற்றிகரமாக தொடங்கியது. இதனால் இன்றுவரை, தொரப்பள்ளி (33 ஏக்கர்) மற்றும் பில்லனகுப்பம் (12.5 ஏக்கர்) ஆகிய இரண்டு வன மறுசீரமைப்பு தளங்களில் 208,000-க்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

இதன் மூலம் ’டைட்டன் வனம்’, இந்தியாவின் மிகப்பெரிய உயர் அடர்த்தி கொண்ட, பல்வேறு உயிரினங்களுடன் வனத்தை மீட்டெடுக்கும் பாலிகல்ச்சர் காடு வளர்ப்பு திட்டமாக உருவெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்டுதோறும் 800 டன் அளவிற்கு இணையாக கார்பன் டை ஆக்ஸ்சைட்டை வரிசைப்படுத்தும் என்பது முக்கிய அம்சமாக இருக்கிறது.

டைட்டன் கம்பெனி லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் சி.கே.வெங்கடராமன் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட போது, 'வனம்' என்பது ஒரு வழக்கமான மரக்கன்றுகள் நடும் திட்டத்தை விட, சமூகத்திற்கு ஒரு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கும் ஒரு முன்முயற்சியாக அமைந்திருக்கிறது.  இது ஒரு தொழில்துறை நிறுவனமானது, பெரும் பரப்பளவிலான காட்டை மீட்டெடுக்க முடியும் என்பதற்கு ஒரு முன் மாதிரி உதாரணமாக இருக்கும் உயிர்ப்புள்ள திட்டமாகும்.  45 ஏக்கருக்கு மேல் பரப்பளவுள்ள பகுதியில், அதிநவீன அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை மேலாண்மையை ஒருங்கிணைப்பதன் மூலம், நாங்கள் மரங்களை மட்டும் நடவில்லை. கார்பன்-நடுநிலை படுத்தப்பட்ட ஒரு எதிர்காலத்தை உருவாக்குகிறோம். அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் தொடர்ந்து செழித்து வளரும் ஒரு தன்னிறைவான காட்டையும் வளர்த்து வருகிறோம்" என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form