பிரிட்டானியா மேரி கோல்ட் பிராண்டு அதன் ஹெர் ஸ்டார்ட் அப் ஷோவின் 2வது சீசனை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. குரூப்எம் மோஷன் என்டர்டெயின்மென்ட் மற்றும் மைண்ட்ஷேர் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து தொடங்கப்பட்ட இந்த முன்னெடுப்பு, நாடு முழுவதுமுள்ள மகளிர் தொழில்முனைவோருக்காக தேசிய அளவில் பிரத்தியேகமாக நடத்தப்பட்ட முதல் ரியாலிட்டி சீரிஸ் ஆகும்.
இது பெண் தொழில்முனைவோரின் யோசனைகளை வெளிப்படுத்தும் ஒரு தளமாக அமைந்தது. கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பப் பட்ட இந்நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில் 40 பெண் தொழில்முனைவோர், ரூ.10 லட்சம் கோல்டன் கிராண்டிற்காக போட்டியிட்டனர்.
குரூப்எம் மோஷன் கன்டென்ட் நிறுவனத்தால் கருத்தாக்கம் செய்யப்பட்ட ‘பிரிட்டானியா மேரி கோல்ட் ஹெர் ஸ்டார்ட்-அப் ஷோ’ என்பது ஒரு போட்டித்தொடர் என்பதைக் கடந்து, மாற்றத்தினை ஊக்குவிக்கும் ஒரு சக்தியாக செயல்பட்டு - தொழில்முனைபவராக சாதிக்க விரும்பும் மகளிருக்கு தேவையான நிதி, வழிகாட்டுதல் மற்றும் தேசிய அளவில் ஒரு வெளிப்பாட்டினையும் வழங்கி -அவர்களதுதொழில் சிந்தனைகளுக்கு ஒரு செயல் வடிவம் தருகிறது.
ஜூலை 2024-இல் தொடங்கப்பட்ட பிரிட்டானியா மேரி கோல்ட் ஹெர் ஸ்டார்ட்-அப் போட்டியின் இறுதிச்சுற்றாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது; இதில் இந்தியா முழுவதுமிருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆர்வமுள்ள மகளிர் தொழில்முனைவோர் பங்கேற்றனர். இவர்களில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் தொழில்முறை பயிற்சினைப் பெற்றனர்; பின்னர் 40 பேர் தேர்வுசெய்யப்பட்டுஅடுத்த நிலைக்கு சென்றனர். ஒவ்வொரு பங்கேற்பாளரும் தேசிய அளவிலான வெளிப்பாடு, மற்றும் தொழில் முனைவுக்கான சூழல் அமைப்பை அணுகும் வாய்ப்பினை பெற்றனர்.
அத்துடன் சேர்த்து ரூ.10 லட்சத்திற்கான பிரிட்டானியா மேரி கோல்ட் கிராண்ட் அல்லது வழிகாட்டுதலை பெறுவதற்கான வாய்ப்பும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. முதல் 10 இடங்களைப் பிடிக்கும் போட்டியாளர்களுக்கு ரூ.10 லட்சத்திற்கானகோல்டன் கிராண்ட்-ஐ வெல்லும் கெளரவம் கிடைக்கும்; அதேநேரம் மற்ற திறன்மிக்க பெண் தொழில்முனைவோருக்கு என்எஸ்டிசி மகளிர் தொழில்முனைவோர் வழிகாட்டுதல் திட்டத்தில்பங்கேற்கும் வாய்ப்பினைப் பெறுவார்கள்.
எட்டு எபிசோடுகளைக் கொண்ட இந்த சீரிஸ், ஏப்ரல் 19 முதல் ஒவ்வொரு வார இறுதியிலும் புதிதாக இரண்டு எபிசோடுகள் வீதம் அடுத்தடுத்து ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளன. இந்நிகழ்ச்சியில் அவர்கள் தங்கள் தொழில் சிந்தனைகளை முன்வைத்தது முதல் வழிகாட்டுதலை பெற்றுது வரையிலான அவர்களது பயணங்களை காட்சிப்படுத்துவது மட்டுமின்றி, ரூ.10 லட்சம் பிரிட்டானியா மேரி கோல்ட் கிராண்டினை யார் வென்றார்கள் என்பதையும் காணலாம்.
பிரிட்டானியா நிறுவனத்தின் மார்கெட்டிங் பிரிவின் பொது மேலாளர், சித்தார்த் குப்தா இதுகுறித்து கூறுகையில், “பெண் தொழில்முனைவோருக்கு அதிகாரமளிப்பதற்கான (செயலூக்கம்) பிரிட்டானியா மேரி கோல்டின் பயணம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு துவங்கியது - இந்தியா முழுவதுமுள்ள மில்லியன் கணக்கான பெண்களிடம் ஆற்றல்மிக்க சிந்தனைகள் உள்ளன, சரியான தளமும் ஆதரவும் மட்டுமே அவர்களுக்குத் தேவை, அதனை வழங்க வேண்டும் என்ற எளிய நம்பிக்கையுடன் இந்த முன்முயற்சியானது ஆரம்பிக்கப்பட்டது. இந்த பயணத்தில் குரூப் எம் மற்றும் மைண்ட்ஷேர் ஆகிய நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்”என்று தெரிவித்தார்.
குரூப் எம் நிறுவனத்தின் தெற்காசியாவிற்கான, தலைமை இயக்க அலுவலர் அஸ்வின் பத்மநாபன் பேசுகையில், “‘ஹெர் ஸ்டார்ட்-அப்ஷோ’ முன்முயற்சியானதுஒரு இலட்சியத்துடன் கதை சொல்லும் ஆற்றலையும் ஒருங்கிணைத்து, மகளிர் ஒரு உண்மையான பொருளாதார அதிகாரத்தைபெற ஊக்க்குவிக்கிறது. இதன் 1-வது சீசனுக்கு கிடைத்த அமோக வரவேற்பானது, இந்த முன்னெடுப்பு ஒரு பிராந்தியத்தில் உள்ள மகளிரின் சிந்தனைகளுடன் எவ்வளவு ஆழமாக பொருந்தியது என்பதை வெளிக்காட்டியது. எனவே, 2வது சீசனில் நாங்கள் இந்த முன்முயற்சியை ஆறு மொழிகளுக்கு விரிவுபடுத்துகிறோம், என்றார்.
‘ஹெர் ஸ்டார்ட்-அப் ஷோ’வின் இரண்டாவது சீசன் பெரியளவில் நடத்தப்பட்டதையும் கடந்து, இந்தியா முழுவதும் உள்ள பெண் தொழில்முனைவோருக்கு அணுகலை உருவாக்குவது, அவர்களது இலட்சியங்களைஊக்குவிப்பது, மற்றும் அவர்களுக்கான ஒரு தளத்தை வழங்குவது என பரந்த சிந்தனையுடன் உருவானது. எங்கள் வாடிக்கையாளர் நிறுவனமான பிரிட்டானியா இந்த ஆற்றல்மிக்க தொலைநோக்கு சிந்தனையை ஆதரித்ததற்கும், அதை உயிர்ப்பிக்க எங்களுடன் ஒருங்கிணைந்ததற்காகவும், அவர்களுக்குநன்றி கூற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், என்று மைண்ட்ஷேர்நிறுவனத்தின் தெற்காசியதலைமை செயல் அலுவலர் அமீன் லக்கானிஅவர்கள் தெரிவித்தார்.