ஃபேப்ரிக் ஃபினிஷ் கொண்ட இந்தியாவின் ஒரே ஏஐ காலநிலை கட்டுப்பாட்டு ஏர் கண்டிஷனர்களை அறிமுகப்படுத்திய ஹேயர்



16 ஆண்டுகள் தொடர்ச்சியாக உலகின் நம்பர் 1 முக்கிய அப்ளையன்சஸ் பிராண்டான ஹேயர் அப்ளையன்சஸ் இந்தியா ஆனது, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஏர் கண்டிஷனரின் கிராவிட்டி சீரிஸை வெளியிட்டுள்ளது. ஃபேப்ரிக் ஃபினிஷ் கொண்ட இந்தியாவின் ஒரே ஏஐ காலநிலை கட்டுப்பாடு உள்ள ஏர் கண்டிஷனர்கள் என்பதால், இந்தப் புதுமையான  ஏசிக்கள் ஃபேப்ரிக் ஃபினிஷுடன் அறிவார்ந்த குளிரூட்டும் தொழில்நுட்பத்தைத் தடையின்றி ஒருங்கிணைத்து, நவீன வீட்டு காலநிலை தீர்வுகளுக்கு புதிய தரநிலையை அமைக்கின்றன. 

கிராவிட்டி சீரிஸ் ஏழு அற்புதமான வண்ண மாறுபாடுகளில் கிடைக்கிறன - மார்னிங் மிஸ்ட், மூன் ஸ்டோன் கிரே, மிட்நைட் டிரீம், கேலக்ஸி ஸ்லேட், அக்வா ப்ளூ, காட்டன் கேண்டி மற்றும் ஒயிட் - சமகால இன்டீரியர்களுக்கு பிரீமியம் நேர்த்தியைச் சேர்ப்பதோடு ஒப்பிடமுடியாத குளிரூட்டும் திறனையும் வழங்குகிறது.

ஹேயர் நிறுவனத்தின் கிராவிட்டி சீரிஸ் ஏசிக்களில் ஏஐ கிளைமேட் கண்ட்ரோல் உள்ளது, இது கைமுறையாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லாமல் இல்லாமல் உகந்த வசதிக்காக பயனர் விருப்பங்களுக்கு ஏற்ப புத்திசாலித்தனமாக மாற்றியமைக்கிறது. ஏஐ கிளைமேட் அசிஸ்டெண்ட் பயன்பாட்டு பழக்கவழக்கங்கள் மற்றும் ஃபைன் - டியூன் அமைப்புகளை நிகழ்நேரத்தில் கற்றுக்கொள்கிறது, அதே சமயம் ஏஐ எலக்ட்ரிசிட்டி மானிட்டரிங் உங்கள் மின் கட்டணங்களை நிர்வகிக்கவும் கட்டுப்படுத்தவும் உதவும் வகையில் மின் நுகர்வுகளை நிகழ்நேரத்தில் கண்காணிக்கிறது.

 கிளவுட்-அடிப்படையிலான சர்வர் மற்றும் மேம்பட்ட ஏஐ ஈகோ செயல்பாட்டால் இயக்கப்படுகிறது, இது ஆற்றல் விரயத்தைக் குறைக்கும் அதே வேளையில் சௌகரியம் மற்றும் செயல்திறனின் சிறந்த சமநிலையைப் பராமரிக்க தொடர்ந்து சரிசெய்கிறது. பாரம்பரிய ஏசிக்களைப் போலன்றி, இந்த அறிவார்ந்த அமைப்பு கைமுறையாக மாற்ற வேண்டிய அவசியங்களைக் குறைத்து, தடையற்ற மற்றும் நபருக்கேற்றபடியாக்கப்பட்ட குளிரூட்டும் அனுபவத்தை வழங்குகிறது.

நவீன வீட்டு அழகைப் பூர்த்தி செய்யும் அதிநவீன ஏஐ கிளைமேட் கண்ட்ரோல் தொழில்நுட்பத்துடன் ஃபேப்ரிக் வடிவமைப்பை ஒருங்கிணைப்பதன் மூலம், கிராவிட்டி சீரிஸ் கலை மற்றும் நுண்ணறிவை ஹேயர் தடையின்றி இணைத்துள்ளது. இந்த இணைவு கலைரீதியிலான வெளிப்பாடு மற்றும் ஸ்மார்ட் செயல்பாடு சரியான இணக்கத்துடன் செயல்படுவதை உறுதி செய்கிறது. கிராவிட்டி சீரிஸ் வெறும் குளிரூட்டுவதற்கான தீர்வை வழங்குவதை விட ஒரு படி மேலானதாகும் - இது மிகச் சிறந்த சௌகரியம், செயல்திறன் பயன்பாடு மற்றும் உயர்தர வீட்டு அனுபவத்தையும் வழங்கும் அதே சமயத்தில் நவீன வீடுகளின் சூழலை மேம்படுத்தும் ஒரு தனித்துவமான அம்சமான ஒரு படைப்பாகும்.

ஹேயர் அப்ளையன்சஸ் இந்தியாவின் தலைவர் என்.எஸ்.சதீஷ், புதிய அறிமுகம் குறித்து கூறுகையில் “புதிய கிராவிட்டி சீரிஸ் இந்தத் தொலைநோக்கு பார்வையின் பிரதிபலிப்பாகும். ஸ்டைலானதும் நுண்ணறிவுத்தன்மை கொண்டதுமான ஒரு ஏர் கண்டிஷனர் ஆகும். இந்தியாவின் ஒரே ஏஐ கிளைமேட் கண்ட்ரோலுடன், இந்த சீரிஸ் செயல்திறன் ஆற்றலை உறுதி செய்யும் போது தனிப்பயனாக்கப்பட்ட வசதியை மறுவரையறை செய்கிறது. எங்கள் அதிநவீன இந்திய உற்பத்தி வசதிகளில் கட்டமைக்கப்பட்ட இந்த சீரிஸ், இந்திய நுகர்வோரின் வளர்ந்து வரும் தேவைகளையும் காலநிலைகளையும் பூர்த்தி செய்வதற்காகவே குறிப்பாக வடிவமைக்கப்பட்ட- எங்களின் 'இந்தியாவில் தயாரிப்போம், இந்தியாவுக்காக தயாரிப்போம்' உறுதிப்பாட்டின் ஓர் உண்மையான உருவகமாகும்" என்றார்.

ஹேயர் கிராவிட்டி சீரிஸ் 5 -ஸ்டார் ஏஐ கிளைமேட் கண்ட்ரோல் ஏர் கண்டிஷனர்கள் 7 மாடல்மளில் கிடைக்கிறது. விலை ரூ.51,990 ல் தொடங்குகிறது, அத்துடன் ஹேயரின் வலைத்தளம், முன்னணி மின் - வணிகத் தளங்கள், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து முக்கிய மின்னணு கடைகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் வாங்கலாம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form